.

Friday, November 13, 2015

வெந்நீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா?



அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும்.


உணவும் செரித்து விடும். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று பீல் பண்ணுகிறவர்கள், ஒரு தம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள். மலப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை, குறையவும் வாய்ப்பிருக்கிறது. சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால், இதயத்துக்கு மிகவும் நல்லது.

ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல், கரைத்துவிடும் திறன் வெந்நீருக்கு உள்ளது. உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள். நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.

ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், நல்ல இதமாக இருக்கும்; விரைவில் குணமாகும்.
Disqus Comments