கேமல்லியா சினசிஸ் என்று அழைக்கப்படும் இலைகளிலிருந்து ப்ளாக் டீ தயாரிக்கப்படுகிறது. க்ரீன் டீ, வொயிட் டீ மற்றும் ஊலாங் டீ ஆகியவற்றை விட ப்ளாக் டீ தான் அதிக மணம் மற்றும் சுவை வாய்ந்தது. அதன் கருப்பு நிறத்திற்கேற்றவாறு அது ப்ளாக் டீ என்று அழைக்கப்படுகிறது. இருந்தாலும், சற்று உற்றுப் பார்த்தால் இந்த டீ பொதுவாக ஆரஞ்சு அல்லது அடர்ந்த அம்பர் நிறத்தில் தான் இருக்கும். சீனர்கள் இதை சிவப்பு டீ என்று தான் அழைப்பார்கள்.
தற்போது ப்ளாக் டீயைக் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் உள்ள காப்ஃபைன் மட்டும் தான் கொஞ்சம் கவலை தரும் விஷயமாகும். ஒரு கப் காபியில் உள்ள பாதி அளவு காப்ஃபைன், ஒரு கப் ப்ளாக் டீயில் உள்ளது. இருந்தாலும் ப்ளாக் டீ அருந்துவது நம் உடலுக்கு மிக மிக நல்லது என்றே கூறப்படுகிறது. அதன் சுவை நீண்ட நேரத்திற்கு நாக்கிலேயே இருந்து சப்புக் கொட்ட வைத்துக் கொண்டே இருக்கும்.
இதய நலத்திற்கு...
இதயம் சம்பந்தமான பல பிரச்சனைகளுக்கு ப்ளாக் டீ மிக அருமையான தீர்வாக அமைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதயத்திற்குள் இரத்த ஓட்டம் சீராக இருத்தல், கொழுப்புப் பொருட்களை இதயத்தில் அண்ட விடாமல் தடுத்தல், பல இதய நோய்களைத் தவிர்த்தல், இதயத்தில் உள்ள தசைகளை ஆரோக்கியமாக வைத்திருத்தல் உள்ளிட்ட பல நன்மைகளுக்கு ப்ளாக் டீ உதவுகிறது.
புற்றுநோய்களைத் தகர்க்க...
மார்பகம், வயிறு, புரோஸ்டேட், பெருங்குடல், கருப்பை, நுரையீரல் ஆகியவற்றில் பொதுவாக ஏற்படும் புற்றுநோய்களிலிருந்து தப்பிக்க ப்ளாக் டீயிலுள்ள பாலிஃபீனால்கள் உதவுகின்றன. ப்ளாக் டீயில் உள்ள TF-2 என்ற பொருள் புற்றுநோய் செல்களை அடித்துத் துவம்சம் செய்வதோடு மட்டுமில்லாமல், பிற சாதாரண செல்கள் தாக்கப்படாமல் இருக்கவும் உதவுகிறது. சிகரெட் மற்றும் புகையிலை உபயோகிப்பவர்களுக்கு ஏற்படும் வாய் புற்றுநோயிலிருந்து தப்பிக்கவும் ப்ளாக் டீ உதவுகிறது.
ஃப்ரீ ரேடிக்கல்களை விரட்ட...
இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நம் உடலுக்கு பல விதங்களிலும் கெடுதல்களை ஏற்படுத்துகின்றன. ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடும் போது, நம் உடலில் இவை அதிகமாகின்றன. ஆனால் ப்ளாக் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இவற்றை அழிக்க உதவுகின்றன.
நோயெதிர்ப்பு சக்தியை வளர்க்க...
நோய்கள் உருவாகக் காரணமாக இருக்கும் பலவிதமான வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களை நம் உடலில் அண்டவிடாமல் தடுக்க வேண்டுமானால் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும். ப்ளாக் டீயில் உள்ள டானின் என்ற வேதிப்பொருட்கள் இந்த வேலையைச் சிறப்பாகச் செய்கின்றன. இதனால் சளி, ஃப்ளூ காய்ச்சல், வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வியாதிகளுக்குக் காரணமான வைரஸ்கள் அழிகின்றன. தினமும் 3 முதல் 4 கப் ப்ளாக் டீ குடித்தால் மிகவும் நல்லது.
வாய் ஆரோக்கியத்திற்கு...
வாய் புற்றுநோயைக் குறைப்பதில் ப்ளாக் டீயில் உள்ள கேட்டெச்சின் உதவுகிறது. மேலும், இதிலுள்ள டானின் மற்றும் பாலிஃபீனால்கள் பற்சிதைவுக்குக் காரணமான பாக்டீரியாக்களை அழிக்கின்றன. ப்ளாக் டீயைக் குடிப்பதால் வாய் துர்நாற்றமும் நீங்கும். வாய் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஃபுளோரைடுகளை 2 கப் ப்ளாக் டீயில் நாம் பெறலாம்.
மூளை மற்றும் நரம்புகளுக்கு...
மூளையில் இரத்த ஓட்டத்தை அதிகமாக்குவதில் ப்ளாக் டீயில் உள்ள குறைந்த அளவிலான காப்ஃபைன் உதவுகிறது. ஒரு நாளுக்கு 4 கப் என்ற விகிதத்தில் ஒரு மாதம் தொடர்ந்து ப்ளாக் டீயைக் குடித்து வந்தால், நரம்பு மண்டலங்கள் வலுவாகும்; ஞாபக சக்தி அதிகரிக்கும்; பார்க்கின்சன் வியாதி கூட சரியாகும். இந்த டீயில் உள்ள எல்-தியானைன் என்ற அமினோ அமிலம், கை நரம்புகளை வலுவாக்குகிறது.
செரிமானத்திற்கு...
ப்ளாக் டீயில் உள்ள டானின் செரிமானத்திற்கு உதவுகிறது. சிறுகுடல் மற்றும் வாயுப் பிரச்சனைகளை சரி செய்யவும் அது பயன்படுகிறது. மேலும் இதிலுள்ள பாலிஃபீனால்கள் சிறுகுடல் எரிச்சலைக் குறைக்க உதவுகின்றன.
எலும்பு வளர்ச்சிக்கு...
ப்ளாக் டீயைக் குடிப்பவர்களின் எலும்புகள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். எலும்புகளையும், எலும்புத் திசுக்களை வலுவாக்கவும் ப்ளாக் டீயில் உள்ள பைட்டோகெமிக்கல்கள் பயன்படுகின்றன.
ஆற்றலை அதிகரிக்க...
காபியில் உள்ள காப்ஃபைனை விட ப்ளாக் டீயில் உள்ள காப்ஃபைன் நம்மை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. நம்முடைய மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன. இவை மட்டுமில்லாமல் சுவாச உறுப்புகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவற்றின் தூண்டல் வளர்ச்சியிலும் ப்ளாக் டீயில் உள்ள த்யோப்பைலின் உதவுகிறது.
உடல் எடையைக் குறைக்க...
ப்ளாக் டீயில் கொழுப்புச் சத்து குறைவாக இருப்பதால், அதைக் குடிக்கும் போது உடல் எடை தானாகவே குறையத் தொடங்கும். மற்ற கார்பனேட்டட் பானங்களை விட ப்ளாக் டீயைக் குடிப்பதே சிறந்தது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க...
ப்ளாக் டீயைக் குடிப்பதால், நம் உடலில் உள்ள ட்ரைக்ளிசரைடுகளின் அளவு குறைந்து, தேவையில்லாத கொழுப்புச் சத்துக்களும் அகன்று விடுகின்றன. இதனால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இல்லை. உடல் உறுப்புக்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன.
மற்ற நன்மைகள்...
ப்ளாக் டீ குடிப்பதால் இரத்த நாளங்கள் வலுப்படுகின்றன; உடல் திறன் அதிகரிக்கிறது; ஒவ்வாமை பிரச்சனைகள் குறைகின்றன; சர்க்கரை வியாதியும் தவிர்க்கப்படுகிறது.