ஹெல்மெட்டை ஏதோ கடமைக்கு அணியும் போக்கு நம்மில் பலருக்கு உள்ளது. விலை உயர்ந்த தரமான ஹெல்மெட்டை வாங்கி, தலையில் அணிந்து கொண்டு, அதை லாக் செய்யாமல் விட்டுவிடுவர். இதனால் சிறு விபத்து நிகழ்ந்தாலும், தலையில் இருந்து ஹெல்மெட் கழண்டு விழுந்து, தலையில் அடிபடும் நிலை தோன்றலாம்.
அரை ஹெல்மெட் அணிவதை விட, முழு ஹெல்மெட் அணிவதே நல்லது. முகத்தை முழுவதுமாக மறைக்காத ஹெல்மெட்டை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இது ஆபத்தின் அறிகுறி.
தலை மற்றும் தாடையை முழுவதுமாக மறைக்கும், ஹெல்மெட்டை பயன்படுத்துவது நல்லது. இதனால் தலை மட்டுமல்லாமல் முகத்தையும் பாதுகாக்கலாம்.
ஹெல்மெட் அணிவது அவசியம். விபத்தில் தலையில் அடிபடும், 80 சதவீத வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர். தலையில் அடிபடுவதால் மருத்துவ செலவு பல லட்சம் ரூபாய்கள் எகிறும்.
மருத்துவமனையை விட்டு வீடு திரும்பினாலும், பழைய நிலைக்கு முழுமையாக வருவது அரிதான காரியமாகவே இருக்கும்.
இந்தியாவில் ஒரு நிமிடத்துக்கு, 16 பேர் வாகன விபத்துகளில் உயிரிழக்கின்றனர். கார்களில் செல்பவர்களை விட, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர்.
மிகவும் இறுக்கமான ஹெல்மெட்டால் தலைவலி, கழுத்துவலி ஏற்படும்.
ஹெல்மெட் அணிந்தபின், தலையை ஆட்டினால் ஹெல்மெட் ஆட வேண்டும். அது வே சரியான ஹெல்மெட். ஆடாமல் இருந்தால், நமது தலைக்கு இறுக்கமான ஹெல்மெட் என தெரிந்து கொள்ளலாம்.
முதலில் ஹெல்மெட் அணிந்தால் சிலருக்கு தலைவலி ஏற்படுவது இயல்பானதே. அதுவே தொடர்ந்தால், அது உங்களுக்கு பொருத்தமில்லாத ஹெல்மெட்.