.

Wednesday, June 3, 2015

உடல் உயரத்தை அதிகரிக்கும் உணவுகள்!!!

உயரமாக


உடலில் போதிய சத்துக்கள் இல்லாத காரணத்தினால், சிலர் குட்டையாக போதிய உயரமின்றி காணப்படுகின்றனர். அவ்வாறு குட்டையாக இருப்பது பிடிக்காத காரணத்தினால், அவர்கள் நிறைய உடற்பயிற்சிகள், கடைகளில் விற்கும் சில உயரத்தை அதிகரிக்கும் பொருட்களை வாங்கி சாப்பிடுகின்றனர். இருப்பினும் எந்த ஒரு பலனும் இல்லாமல், தோல்வியை தான் சந்திப்பர். 


இத்தகைய உயரப் பிரச்சனை இருப்பதற்கு உடலில் உள்ள உடல் வளர்ச்சியை அதிகரிக்கும் பிட்யூட்டரி சுரப்பியிலிருந்து சுரக்கும் ஹார்மோனின் அளவு மிகவும் குறைவாக இருப்பது காரணமாகும். மேலும் உடலில் போதிய புரோட்டீன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால், வளர்ச்சி மிகவும் குறைவாக இருக்கிறது. இதற்கு ஒரு சில உணவுகளை உண்டால் உடல் உயரம் அதிகரிக்கும் என்று சொன்னால் நம்பமுடியாது தான். 

ஆனால் அந்த சத்துக்களை உடலில் செலுத்துவதற்கு ஒரே முறை உணவு தான். ஆகவே அத்தகைய புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு, உடலில் உள்ள உயரத்தை அதிகரிக்கும் ஹார்மோனின் அளவை அதிகரிப்போம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!


வைட்டமின் ஏ

வைட்டமின் ஏ சத்து உடலில் உள்ள எலும்புகளில் கால்சியத்தை தங்க வைத்து, எலும்புகளுக்கு வலுவை தருகிறது. மேலும் வைட்டமின் ஏ உணவுகள் பார்வை குறைபாட்டை சரிசெய்து, சருமத்தை அழகாக்குகிறது. இதற்கு கீரைகள், பீட்ரூட், கேரட், பப்பாளி, தக்காளி, ஆப்ரிக்காட் போன்றவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் முக்கியமாக தக்காளி, கேரட், பீட்ரூட்டை அடிக்கடி ஜூஸ் போட்டு குடிப்பது நல்லது.

புரோட்டீன்

புரோட்டீன் உணவுகளை அதிகம் சாப்பிட்டால், உடலில் உள்ள பழுதடைந்த திசுக்கள் சரியாவதோடு, புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது. மேலும் புரோட்டீன் உணவுகளில் அமினோ ஆசிட் அதிகம் இருப்பதால், உடலில் சரியான வளர்ச்சி கிடைக்கும். ஆகவே அதற்கு புரோட்டீன் உணவுகளான பால், சீஸ், மீன், சிக்கன், ஓட்ஸ், சோயா பீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.

வைட்டமின் டி

உயரமாவதற்கு வைட்டமின் டி சத்து மிகவும் அவசியமானது. ஆகவே வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையவதோடு, வலுவடையவும். எனவே வைட்டமின் டி நிறைந்த உணவுகளான காளான், மீன், தானியங்கள், முட்டை, சோயா பால் மற்றும் பாதாம் போன்றவற்றை சாப்பிட வேண்டும்.

கால்சியம் 

எலும்புகளுக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த சத்து தான் எலும்புகளின் வளர்ச்சிக்கு பெரும் காரணமாக இருக்கிறது. ஆகவே பால் பொருட்களான பால், சீஸ், தயிர் மற்றும் முட்டை போன்றவற்றை தினமும் சாப்பிட்டால், உடல் உயரம் அதிகரிக்கும். மேலும் இந்த உணவுகள் நன்கு சுவையோடு இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் தரும்.

கனிமச்சத்து

கனிமச்சத்துக்கள் எலும்பு திசுக்களின் வளர்ச்சியை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. ஆகவே உடல் உயரத்தை இயற்கையாக அதிகரிக்க கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ள உணவுகளான பச்சை பட்டாணி, பிராக்கோலி, கீரைகள், முட்டைகோஸ், பூசணிக்காய், கேரட், பருப்பு வகைகள், வாழைப்பழம், திராட்சை போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

Disqus Comments