.

Wednesday, June 3, 2015

கோடையில் நாவில் தோன்றும் கொப்பளங்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை



சுக்குட்டிக் கீரை என்றும் அழைக்கப்படும் இந்தக் கீரை, அதிக மருத்துவக்குணம் வாய்ந்தது. குரல் வளத்துக்கு ஏற்றது. அடிக்கடி தொண்டை கட்டிக்கொள்ளும் பிரச்னை இருப்பவர்கள் இதை அதிகமாகச் சாப்பிடலாம். இதன் இலை, காய், பழம் என மூன்றையுமே சமையலில் பயன்படுத்தலாம். 


வெப்ப காலத்தில் உடல் வெப்பத்தைத் தணிக்க பெரும்பாலும் சமையல் செய்து உண்பார்கள். கோடைச் சூட்டிற்கு நாவில் தோன்றும் கொப்பளங்களைப் போக்க இதன் இலையை சிறிது தண்ணீர் விட்டு அவித்துக் குடிப்பது மிகுந்த பலனைத் தரும். சம்பல் செய்து சாப்பிடுவதும் சிறந்தது. குடல் புண்ணுக்கும் சுகம் தரும். 

மூல நோய்க்கும் சிறந்தது. கண் பார்வைக்கும் பல் உறுதிக்கும் வேண்டிய வைட்டமின் ஏ, பீ, இரும்பு, சுண்ணாம்புச் சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. 

சத்துக்கள்: வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ், மாவுச்சத்து, புரதம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள் உள்ளன. கொழுப்புச் சத்து மிகுந்த அளவில் உள்ளது. 

பலன்கள்: வாய்ப்புண், வயிற்றுப்புண்ணைக் குணமாக்கும். அல்சருக்கு அற்புத மருந்தாகச் செயல்படுகிறது. களைப்பு, சோர்வு நீங்கும். தூக்கம் இன்றி தவிப்பவர்களுக்கு அருமருந்து. கல்லீரலுக்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் நீங்கும். தொண்டைக் கரகரப்பு சரியாகும். உடல் வெப்பம் தணியும். 

இதில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகமாக உள்ளது. கருப்பை குறைபாட்டை நீக்கும். டிப்ஸ்: கீரைச் சாறுடன் 10 மி.லி முட்டைகோஸ் சாறு மற்றும் தேன் கலந்து சாப்பிட வாய்ப்புண் இடம் தெரியாமல் மறையும். வாரம் ஒருமுறை மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்து சாப்பிடலாம். வயிற்றிலிருக்கும் பூச்சிகளை அகற்றும்.
Disqus Comments