.

Sunday, May 25, 2014

இரவில் தலையில் போட ஏற்ற ஹேர் மாஸ்க்குகள்



முடியை பராமரிப்ப ஹேர் மாஸ்க் போடுவது தான் சிறந்தது. அதிலும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி ஹேர் மாஸ்க் போட வேண்டும். அப்படி ஹேர் மாஸ்க் போட்டால் குறைந்தது 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.


ஆனால் இன்னும் நல்ல பலனைப் பெற வேண்டுமானால், இரவில் தலைக்கு போட்டு காலையில் அலசுவது தான் சிறந்தது. முக்கியமாக அப்படி மாஸ்க் போடும் முன், எண்ணெய் கொண்டு லேசாக மசாஜ் செய்துவிட்டு, பின் மாஸ்க்குகளைப் போட வேண்டும்.

மேலும் மாஸ்க் போட்ட பின்னர், தலைக்கு ஷவர் கேப் அணிந்து கொண்டு, படுக்க வேண்டும். சரி, இப்போது இரவு நேரத்தில் எந்த ஹேர் மாஸ்க்குகளைப் போடுவது சிறந்தது என்று பார்க்கலாம்.

• கோடையில் தலையில் ஏற்படும் வறட்சியைத் தடுப்பதற்கு, இரவில் படுக்கும் போது தலைக்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளிக்க வேண்டும். இதனால் முடி வறட்சியடையாமல், நன்கு ஆரோக்கியமாக வளரும்.

• அதற்கு வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேன் சேர்த்து கலந்து, இரவில் தலையில் தடவி ஷவர் கேப் அணிந்து ஊற வைத்து, காலையில் குளித்தால், மென்மையான ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

• பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அதனை இரவில் படுக்கும் முன் தலைக்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் குளிர்ச்சியான நீரில் அலசினால், முடியின் ஆரோக்கியமானது பாதுகாக்கப்படும்.

• பீர் உடன் விளக்கெண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முடிக்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து மறுநாள் காலையில் குளியுங்கள். இதனால் உங்கள் முடி சூப்பராக இருக்கும். ஆலிவ் ஆயிலில், கற்றாழை ஜெல் மற்றும் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து கலந்து, ஹேர் மாஸ்க் போட்டால், பொலிவிழந்து வறட்சியுடன் காணப்படும் முடியை பொலிவாக்கலாம்.
Disqus Comments