.

Sunday, May 25, 2014

வெள்ளைநிற பற்கள் ஆரோக்கியமானவையா?


டூத் பேஸ்ட் நிறுவனங்கள். ‘ஒயிட்னர் பேஸ்ட்’ என்ற பெயரில் பற்களை வெள்ளையாக்கும் பேஸ்ட்டுகள் இங்கு அறிமுகமாகி உள்ளன. டென்ட் டிஸ்ட்டுகள் பரிந்துரைக்கும் பேஸ்ட்டுகள்…  டென்ட்டிஸ்ட்டுகளே உபயோகிக்கும் பேஸ்ட்டுகள்… என எல்லாமும் சேர்ந்து நம் பற்களை வெள்ளையாக்க வாக்குறுதி தருகின்றன.திடீரென நம் பற்களை வெள்ளை நிறத்தில் பளீரிட வைப்பதில் அக்கறை காட்டத் தொடங்கியிருக்கின்றன 
விளம்பர வாக்குறுதி நிறைவேறாததால் தனியாக டென்ட்டிஸ்ட்டுகளைப் பார்த்து பற்களை பிளீச்சிங் செய்து வெள்ளையாக்குபவர்களும் இப்போது  பெருகிவிட்டார்கள். ஆனால், “ஆரோக்கியமான பற்கள் என்பவை மஞ்சளாகத்தான் இருக்கும்’’ என்கிறார்கள் இன்றைய  மருத்துவ நிபுணர்கள்.
பற்களின் மஞ்சள் தன்மையைப் பார்த்து அதை ஏதோ நோய் என்றே நிறைய பேர் நினைத்து விடுகிறார்கள். பல்லின் “எனாமல்” எனும் வெளிப்புற  அடுக்கும், “டென்டின்” எனும் உட்புற அடுக்கும் வலிமையாக இருப்பதன் அடையாளமே மஞ்சள் நிறம்’’ என்கிறார் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி  பல் மருத்துவப் பிரிவின் பேராசிரியரான பாலாஜி.
இதை விட முக்கியம், டூத் பேஸ்ட்களால் பற்களுக்கு வெண்மை நிறத்தைத் தர முடியாது என்பதுதான். வெள்ளையாகும் வரை பற்களை முரட்டுத்தனமாக நீண்ட நேரம் தேய்த்தால், எனாமல் தேய்ந்து பல் பலவீனமாவதும் பற்கூச்சம் ஏற்படுவதும்தான் மிஞ்சும்.
‘‘பற்களில் ‘எனாமல்’, ‘டென்டின்’, ‘பல்ப்’ என்று மூன்று முக்கிய அடுக்குகள் உண்டு. இதில் ‘எனாமல்’ தேய்ந்தால், ‘டென்டின்’ வெளிப்படும்.பல்  கூச்சத்துக்குக் காரணம் இதுதான்.இந்த பல் கூச்சத்தைப் போக்க, இன்னும் நன்றாக பல் துலக்க வேண்டும் என்று நினைக்கும் நம் மக்கள், நீண்ட நேரத்துக்கு பற்களை தேய்க்கின்றனர். இது பற்களை மேலும் பலவீனப்படுத்திவிடும்.
நாங்கள் பல் துலக்குதல் என்பதை ‘மணிக்கட்டு செயல்’ என்கிறோம். அதாவது, மணிக்கட்டை மட்டும் பயன்படுத்தி மெதுவாக செய்ய வேண்டிய  செயல் அது. மேலிருந்து கீழும் கீழிலிருந்து மேலுமாகத்தான் பிரஷ்ஷை அசைக்க வேண்டும். இருபுறமும் உள்ள கடவாய்ப் பற்களை மட்டுமே நேராகத்  துலக்க வேண்டும், அதுவும் மென்மையாக! பலரும் இப்படிச் செய்வதில்லை. அதற்குக் காரணம் அவர்கள் மனதில் வேரூன்றிவிட்ட வெண்மைப்  பற்களுக்கான மோகம்தான்’’ என்கிறார் பாலாஜி.
அந்த மோகத்தால் நாம்தான் பற்களை எப்படியெல்லாம் கஷ்டப்படுத்துகிறோம். ரசாயனத்தால் பற்களைக் குளிப்பாட்டி வெளுக்க வைக்கும் பிளீச்சிங்  அதில் முக்கியமானது. சருமநோய் மற்றும் அழகியல் பிரிவு மருத்துவ நிபுணர் ஜி.ஆர்.ரத்னவேலிடம் அந்த பிளீச்சிங் பற்றி கூறியதாவது: ‘‘பற்களுக்கான பிளீச்சிங் என்பது இன்று சர்வ சாதாரணமாகிவிட்டது. ஏதேனும் ஃபங்ஷன் என்றால் முகத்தை பிளீச் செய்வது போல் பற்களையும்  ப்ளீச்சிங் செய்யத் துவங்கிவிட்டனர்.
இதை எப்போதாவது செய்தால் பரவாயில்லை. அடிக்கடி செய்தால் ஆபத்து’’ என்கிறார் அவர். ‘‘பிளீச்சிங் செய்வதற்கு பல்வேறு முறைகள் உள்ளன.  அவை எல்லாவற்றிலும் ஓரளவு கெமிக்கல்கள் பயன்படுத்தப்படுகின்றன. அமிலத் தன்மை உள்ள அந்த கெமிக்கல்கள் பற்களில் உள்ள கறைகளையும்  அழுக்குகளையும் நீக்கி விடுவதால்தான் வெண்மை நிறம் கிடைக்கிறது. அந்த கெமிக்கல்களால் ஈறுகள் உட்பட மற்ற பகுதிகள் பாதிக்கப்படாதபடி  நிபுணர்களால் கவனமாகச் செய்யப்படுவது இந்த பிளீச்சிங்.
தற்போது அறிமுகமாகியுள்ள ஒயிட்னர் பேஸ்ட்களால் பற்களுக்கு பிளீச்சிங் செய்வது போன்ற வெண்ணிறம் கிடைக்காது. ஆனாலும் இவற்றில்  அமிலத் தன்மை அதிகம் இருக்கும். இதனால் அதிக நேரம் துலக்கினால், பற்களில் உள்ள எனாமல் தேய்வதோடு, ஈறுகள் உள்ளிட்ட சருமப் பகுதியும்  பாதிக்கப்படும். இதேபோல வாய்ப் புத்துணர்ச்சியை முன்வைத்து விற்கப்படும் ஜெல் வகை பேஸ்ட்களிலும் அமிலத் தன்மை உண்டு. வாய்ப்புண்,  முகத்தில் வலி என என்னிடம் வரும் நோயாளிகளில் பலர், பற்களை அதிக நேரம் துலக்குபவர்களாக இருக்கிறார்கள்’’ என்கிறார் அவர் கவலையோடு.
Disqus Comments