மலம் கழிக்கும் போது, மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவது என்பது சாதாரணமானது அல்ல. ஒவ்வொருவரும் தங்களின் வாழ்நாளில் ஒருமுறையாவது இப்பிரச்சனையால் அவஸ்தைப்பட்டிருப்போம்.
சிலருக்கு இந்நிலை ஏற்படுவதற்கு சிறிய பிரச்சனை காரணமாக இருந்தாலும், இன்னும் சிலருக்கு அது தீவிர உடல்நல பிரச்சனையினாலும் ஏற்படும். உடலின் உட்பகுதியில் அதுவும் மலக்குடல் அல்லது மலப்புழையின் பாதையில் ஏதேனும் தொற்றுகள், காயங்கள் மற்றும் இரத்தக்கசிவுகள் இருந்தாலும், மலம் கழிக்கும் போது எரிச்சலை சந்திக்கக்கூடும்.
இந்நிலை இப்படியே நீடித்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இங்கு மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படுவதற்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து காரமான உணவுகளை உட்கொண்டு வந்தால், அதன் காரணமாக மலம் கழிக்கும் போது மலப்புழையில் எரிச்சல் ஏற்படக்கூடும். அளவுக்கு அதிகமான கார உணவுகள் சில நேரங்களில் வயிற்றுப்போக்கை கூட ஏற்படுத்தும்.
மலப்புழையில் சிறு பிளவுகள் ஏற்பட்டாலும் எரிச்சலை உணரக்கூடும். அதுவும் மிகவும் இறுகிய மலத்தை வெளியேற்றும் போது சென்சிவ்வான சருமத்தைக் கொண்ட மலப்புழையில் வெட்டுக்காயம் ஏற்பட்டு, அதனால் எரிச்சலை சந்திக்க நேரிடும். இன்னும் சில நேரங்களில், இரத்தக்கசிவுடன் கூடிய மலம் வெளியேறவும் வாய்ப்புள்ளது.
சிலருக்கு ஹெர்பீஸ் தொற்றுகள் மலப்புழையின் அருகில் உள்ள சருமத்தில் வெடிப்பை ஏற்படுத்தும். இந்நிலையில் மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
குறிப்பிட்ட நோய்த்தொற்றுகள், மோசமான சுகாதாரம் மற்றும் அவ்விடத்தில் ஏற்படும் தொடர்ச்சியான அரிப்புக்களால், மலம் கழிக்கும் போது எரிச்சலுடன் மிகுந்த வலியையும் அனுபவிக்க நேரிடுகிறது.
எப்போது குதத்துக்குரிய நரம்புகள் வீங்கி இருந்தாலோ அல்லது அவ்விடத்தில் சதை வளர்ச்சி ஏற்பட்டிருந்தாலோ, மலம் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும்.
மலச்சிக்கல் மற்றும் இதன் தீவிர நிலையான பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தாலோ, அதன் காரணமாகவும் மலம் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலியை சந்திக்க நேரிடும்.
புரோக்டால்ஜியா ஃபுகாக்ஸ் (Proctalgia Fugax) என்னும் நிலையால் பாதிக்கப்பட்டிருந்தாலும், எரிச்சல் மற்றும் வலியை உணரக்கூடும். இந்நிலையின் போது அவ்விடத்தில் ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்துவிட்டு, உடனே மருத்துவரை அணுகுங்கள்.