.

Sunday, August 28, 2016

யாரெல்லாம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது?


மஞ்சள், மிளகு, இஞ்சி, பூண்டு போன்ற உணவுகளை அன்றாட உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும் என அனைவரும் கூறுவார்கள். ஆம், இவை உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்களை அளிக்கும் சிறந்த இயற்கை உணவுகள் ஆகும்.

அதே சமயம் உடநலன் அறிந்து உணவருந்த வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுகள் கூட ஒருசில உடநலக் குறைபாடு உள்ளவர்களுக்கு தீய விளைவுகளை உண்டாக்கும் வாய்ப்புண்டு.
அந்த வகையில் பூண்டை சிலர் உணவில் சேர்த்துக் கொள்ள கூடாது என அறிவுரைக்கப்படுகிறது.
கல்லீரல் கோளாறு! 
கல்லீரல் நோய் / கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது கல்லீரல் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் தாக்கத்தை குறைக்க செய்கிறது.

கர்ப்பிணி பெண்கள்! 
கர்ப்ப காலத்தில், தாய்பாலூட்டும் காலத்தில் மாதவிடாய் ஏற்படும் போது பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம் என அறிவுரைக்கப்படுகிறது.
குறைந்த இரத்த அழுத்தம்! 
பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. எனவே, குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்துவிடுவது நல்லது.

அறுவை சிகிச்சை! 
அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள போகும் நபர்கள், இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்துவிடுங்கள். 
இது, அதிக இரத்த போக்கை உண்டாக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில், பூண்டுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் தன்மை இருக்கிறது.
வயிற்றுப்போக்கு! 
வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். இது, குடல் இயக்கத்தை ஊக்க்ப்படுதில், வயிற்றுப்போக்கை அதிகப்படுத்தும்.
 கண்! 
கண் சார்ந்த நோய் / கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண்டை சேர்த்துக் கொள்ள வேண்டாம். இது, கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்க / கூடும்.

மருந்துகள்! 
எந்த வித மருந்துகள் உட்கொண்டு வந்தாலும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது, மருந்துகளின் ஆற்றலை மாற்றும் தன்மை கொண்டுள்ளது. எனவே, மருந்து உட்கொள்ளும் காலத்தில் மருத்துவரை அணுகிய பிறகு பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Disqus Comments