.

Friday, August 26, 2016

தூக்க மாத்திரை உபயோகிக்கிறீர்களா?



நமது மூளையில் சுரக்கும் மெலடோனின் நமது நரம்புகளை அமைத்திப்படுத்தி, நல்ல தூக்கத்தை தரும். சில சமயங்களில் சுற்றுப்புற சூழ்நிலையாலும், பல்வேறு மனப் பிரச்சனைகளாலும் மெலடோனின் சுரப்பது குறையும். பின்னர் சம நிலைக்கு வந்து தூக்கம் வந்துவிடும்.


ஆனால் வெகுகாலமாக இன்சோம்னியா என்ற தூக்கமின்மையில் அவதிப்படுபவர்கள், அறுவை சிகிச்சை செய்திருப்பவர்கள், மன நோய் உள்ளவர்கள், ஜெட் லாக்கினால் தூக்கமில்லாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு தூக்க மாத்திரை மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டு. ரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்களுக்கும் பரிந்துரை செய்வார்கள். தூக்க மாத்திரை என்பது மூளையில் மெலடோனின் உற்பத்தியை தூண்டுவதே ஆகும். மெலடோனின் சுரப்பை அதிகரிக்கச்செய்வதோடு, தூக்க மாத்திரையின் வேலை முடிந்துவிடுவதில்லை. அதோடு நிறைய பக்க விளைவுகளையும் கொடுக்கும். அதில் முக்கியமானது, தலை சுற்றல். பின்னர் அடிக்கடி தலைவலி, ஸ்திரமான பேச்சு இல்லாமை, குழப்பங்கள், எரிச்சல் , மன அழுத்தம் ஆகியவை ஏற்படும்.

மிக நீண்ட காலமாக நீங்கள் மெலடோனின் சுரக்க தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், அதுவே பழக்கமாகிவிடும். இயற்கையாக மெலடோனின் சுரப்பதை விட்டு, மாத்திரைகளால் மட்டும் அது சுரக்கும் நிலமை ஏற்படும். பின்னர் மாத்திரை இல்லாமல் உங்கள் தூக்கம் இல்லை என்ற நிலை உருவாகக் கூடும்.

அதோடு மட்டுமில்லாமல் நீங்கள் வேறு ஏதாவது நோய்க்கு மருந்து எடுத்துக் கொண்டிருக்கிறீர்களேயானால், அவற்றுடன் வினை புரிந்து மோசமான பாதகத்தை தரும். உதாரணத்திற்கு கர்ப்பத்தை தள்ளிப் போடும் மாத்திரைகள், சர்க்கரை வியாதிக்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் இவற்றோடு இந்த தூக்க மாத்திரைகளை உட்கொண்டால் பக்க விளைவுகளைத் தரும். எவ்வாறு தூக்க மாத்திரைகளை உபயோகப்படுத்த வேண்டும்
: நம் விருப்பப்படி தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவரிடம் உரிய பிரச்சனையை தெளிவாக கூற வேண்டும். தூக்கம் இல்லாமல் இருப்பதற்கும், இன்சோம்னியா என்ற தூக்கமின்மை வியாதிக்கும் வித்தியாசம் உள்ளது. அதோடு, நீங்கள் வேறு ஏதாவது ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதனையும் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

சரியான அளவு :

மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் மாத்திரிகளை வாங்கினாலும் அதில் குறிப்பிட்டுள்ள அளவிற்கும் குறைவாகவே எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு மாத்திரை விழுங்கச் சொன்னால், அரை மாத்திரையுடன் நீங்கள் தொடங்கலாம். எப்போதும் குறைந்த டோஸில் எடுத்துக் கொண்டால், பின்னாளில் வரும் பிரச்சனைகளை தள்ளிப்போடலாம்.

மாத்திரையின் விழுங்குவதில் கூட நிறைய முறைகள் இருக்கிறது. மாத்திரையை வாயில் போட்டுக் கொண்டு நீரை குடிக்கக் கூடாது. அது வயிற்றில் சென்று கரைவதை விட, வாயிலேயே சிறிது கரைய அனுமதிக்க வேண்டும். நீரினை வாயில் ஊற்றிக் கொண்டு, மாத்திரையை வாயில் போட்டு, சில நொடிகள் இருந்துவிட்டு பின்னர் முழுங்குவதே நல்லது. நேரடியாக மாத்திரையை விழுங்குவது நல்லதல்ல. அதேபோல் மாத்திரையை குடித்தவுடன்,. நிறைய நீர் அருந்துதல் நல்லது. இல்லையெனில் அதன் நச்சுக்கள் சிறு நீரகத்திலேயே தங்கிவிடும்.

அதேபோல் மாத்திரைகளை அதிக சூட்டிலோ அல்லது குளிர்ச்சியிலோ வைக்கக் கூடாது. சாதாரண அறை வெப்பத்திலேயே வைத்துக் கொள்ள வேண்டும் மருத்துவர் ஒரு மாத்திரை பரிந்துரைத்தால், நாளடைவில் இரண்டு மாத்திரைகளை போடுபவர்களே நிறைய இருப்பார்கள். இது மிக ஆபத்து. உங்கள் கல்லீரலை பாதித்துவிடும். சிறு நீரகத்தையும் பாதிக்கும். ஆகவே நாளுக்கு நாள் மாத்திரையின் அளவை குறைக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். அதிகரிக்க அல்ல.
Disqus Comments