.

Wednesday, June 22, 2016

மஞ்சளை எப்போதெல்லாம் உணவில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என தெரியுமா?



மஞ்சள் ஓர் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் கொண்டுள்ள மருத்துவ உணவுப் பொருளாகும். பல நூற்றாண்டுகளாக நமது முன்னோர்கள் மஞ்சளை நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக பயன்படுத்தி வந்துள்ளனர். மஞ்சள் இயற்கையாகவே உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அளவை
அதிகரிக்க உதவுகிறது. இது நோய் எதிர்ப்பு மண்டலம் மற்றும் உடற்சக்தி அதிகரிக்க உதவுகிறது

1) பித்தப்பை கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை தவிர்ப்பது நல்லது. மஞ்சள் பித்தப்பை பிரச்சனையை பெரிதாக்கும் தன்மை உடையது.

2) மஞ்சள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் திறன் உடையது. எனவே, குறைந்த இரத்த சர்க்கரை அளவு பிரச்சனை உள்ளவர்கள் மஞ்சளை தவிர்க்க வேண்டும்.

3) மஞ்சளை அதிகளவு உணவில் சேர்ப்பது, இரும்புச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்

4) அதிகமாக மஞ்சளை சேர்ப்பது கருவளத்தில் குறைப்பாட்டை உண்டாக்கும் இதனால், குழந்தை பெற்றுக் கொள்ள இருக்கும் தம்பதிகள் மஞ்சளை அதிகளவு சேர்த்துக் கொள்ள வேண்டாம்.

5) இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD), பிரச்சனை உள்ளவர்கள், மஞ்சளை தவிர்த்துவிடுங்கள். இதனால், வயிறு சார்ந்த கோளாறுகள் ஏற்படலாம்.

மஞ்சளை எந்தெந்த உணவில் சேர்த்து சமைப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என இனிக் காணலாம்...

முட்டை பொரியல், டோஃபுபோன்ற உணவுகளில் மஞ்சள் சேர்த்து சாப்பிடுவது நல்லது. இது உணவில் வண்ணம் சேர மட்டுமின்றி, ருசி மற்றும் ஆரோக்கியமும் அளிக்கிறது.

வறுத்து சமைக்கும் காய்கறி உணவுகளில் லேசாக மஞ்சளை தூவி சமைத்து சாப்பிடலாம். இத்துடன் மிளகுத்தூள் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கும் நல்லது. காலிஃபிளவர், உருளைக்கிழங்கு, மற்றும் வேர் காய்கறிகள் இதை நீங்கள் பின்பற்றலாம்.

காலே, முட்டைக்கோஸ் போன்ற பச்சை காய்கறிகளை வேகவைத்து சாப்பிடும் போது லேசாக அதன் மேல மஞ்சள் சேர்த்து உண்ணலாம். மேலும், சைவம் மற்றும் அசைவ சூப்களில் கூட மஞ்சள் சேர்ப்பது நல்லது.

சளி, காய்ச்சல், தொண்டை கரகரப்பு பிரச்சனை உள்ளவர்கள் பால் / தேநீர் பருகும் போது அதில் சற்று மஞ்சள் சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் பெறலாம்.

மருத்துவ நற்குணங்கள் கொண்டுள்ள மஞ்சளை, இஞ்சி மட்டுமின்றி, பூண்டு, வெங்காயம் சேர்க்கும் உணவுகளிலும் சேர்த்து உண்பது ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.


Disqus Comments