.

Monday, May 16, 2016

குக்கரில் சமைத்த உணவால் சர்க்கரை நோய் வருமா ?



அவசர வாழ்வில், துரித உணவு முறையில் குக்கர் இன்றியமையாததாக மாறிவிட்டது. பெரும்பாலான மக்கள் இதை பயன்படுத்துகிறோம்.   சில ஆண்டுகள் வரை இப்படிப்பட்ட குக்கர் பயன்படுத்தும் பழக்கம் நம் சமையல் முறையில் இல்லை.



உடல் உழைப்பு அதிகம் இருந்த நம் முந்தைய தலைமுறையினர் பெரும்பாலும் சாதத்தை வடித்து அதில் உள்ள கஞ்சியை வடிகட்டி பிறகு உணவை உண்டனர்.  கிராமப்புறங்களில் இந்த வடிகட்டிய கஞ்சியை  அதிக உடல் உழைப்பு உள்ளவர்கள் குடிப்பதும், உடல் உழைப்பு இல்லாதவர்கள் பெரும்பாலும் வடிகட்டிய உணவை சாப்பிடுவதும் வழக்கம்.


இதற்கு    உணமையான காரணம், அரிசி கொதித்தவுடன் அதில் உள்ள ஸ்டார்ச் வடிகட்டும்போது வெளியேறிவிடுகிறது.  மீதம் உள்ளது குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள கலோரியை மட்டுமே கொண்ட அரிசி சக்கையாகும்.  குக்கர் உணவில் இந்த ஸ்டார்ச் சாதத்துடன் தங்கிவிடுகிறது.  இது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு குளுக்கோஸை அதிகமாக்கிவிடுகிறது.
 உதாரணமாக, சர்க்கரை நோய் உள்ளவர்கள் சமைத்து வடித்த உணவை சாப்பிடுவது உங்கள் சர்க்கரை அளவை குறைக்கும் மேலும் அதிக உணவும் சாப்பிடலாம்.  தோராயமாக ஒரு கப் குக்கர் உணவிற்கு பதில் நான்கு முதல் ஐந்து கப் வரை வடிகட்டிய உணவை சாப்பிடலாம்.


இரத்த பரிசோதனை செய்யும் வசதி உள்ளவர்கள் இதை பரிசோதித்துப் பார்க்கலாம்.

நம் முன்னோர்கள் இன்றைய அறிவியல் விஞ்ஞானிகளைவிட புத்திசாலிகள். எந்த உபகரணமும் இல்லாத காலத்தில் பலதை கண்டுபிடித்தவர்கள். இன்றைய ஆராய்ச்சி வசதிகள் இல்லாத காலத்தில் பல மருந்துகளை கண்டறிந்து வாழ்ந்துள்ளார்கள். எனவே உடல்நலம் மேல் அக்கறை உள்ளவர்கள் நம் முன்னோர் வாழ்வியல் முறையை ஆராய்ந்து அவற்றில் உள்ள பல நல்ல நடைமுறைகளை, ஆரோக்கிய விஷயங்களை பின்பற்றலாம்.
Disqus Comments