.

Tuesday, April 12, 2016

இரவில் சீக்கிரமாக சாப்பிட வேண்டும் ஏன் தெரியுமா ?




ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுவது முக்கியமில்லை, அந்த உணவுகளை சரியான நேரத்திற்கு சாப்பிடுவது தான் முக்கியம் என்பதை கருத்தில் கொள்க.


ஏனெனில், உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளாவிட்டால், செரிமானப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, குறிப்பாக இரவு உணவுகளை தூங்குவதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்னரே எடுத்துக்கொள்வது நல்லது.

அவ்வாறு இரவு உணவுகளை சீக்கிரமாக சாப்பிடுவதற்கான 3 காரணங்கள் இதோ,

உடல் எடை குறையும்

தூங்குவதற்கு முன்னர் சீக்கிரமாகவே உணவு உட்கொண்டால் அந்த உணவில் உள்ள கலோரிகள் விரைவில் செரிமானம் அடைந்துவிடும்.

இதனால் உடல் எடை குறைய வாய்ப்புண்டு, மேலும் தூங்குவதற்கு முன்னர் உணவு உட்கொண்டால், அந்த உணவால் சிலவித உடல் உபாதைகளுக்கு ஆளாகி இரவு நேரதூக்கம் கெட்டுவிடும், இதனால் அடுத்தநாள் சுறுசுறுப்பாக உங்களால் செயல்பட முடியாது, இதே நிலை தொடர்ந்தால் மன அழுத்தம் மற்றும் இதய நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

இனிமை தரும் கனவு

பொதுவாக இரவு நேரத்தில் அதிகமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது, பழங்கள் மற்றும் சப்பாத்தி வகைகளை உட்கொள்ளுங்கள்.

இவ்வாறு, அதிகமான உணவுகளை தவிர்த்தால், ஆழந்த உறக்கத்திற்கு செல்லும் உங்களுக்கு இனிமை தரும கனவும் வரும் என்பதில் எவ்வதி சந்தேகமுமில்லை.

ஆரோக்கியம்

நீங்கள் இரவு உணவை தாமதமாக உட்கொண்டால், triglyceride எனும் கொழுப்பு அமிலத்தின் அளவு அதிகரிக்கும், இவ்வகையான கொழுப்பு ரத்தத்தில் எளிதில் கலந்துவிடும், இதனால் இதயப்பிரச்சனைகள் போன்றவற்றிற்கு வழிவகுக்கிறது.

எனவே, ஆரோக்கியம் கருதி உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள்.
Disqus Comments