.

Wednesday, April 13, 2016

காபியை விரும்பி குடிப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்


காபியை விரும்பி குடிப்பவரா நீங்கள்? இந்த தகவல் உங்களுக்கு தான்

உலகில் கோடிக்கணக்கான மக்களின் உற்சாக பானமாக காபி விளங்கி வருகிறது. நம்மில் பலரும் காலையில் எழுந்ததும் காபி குடிப்பதை முதல் வேலையாக கொண்டுள்ளோம்.


உணவு கூட வேண்டாம் காபியே போதும் என்று கூறுபவர்கள் பலர் உள்ளனர். காபியில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன.

அதேவேளையில் அளவுடன் காபியை பருகுவதே நன்று என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

அப்படிப்பட்ட காபியை பற்றிய சுவையான தகவல்கள் கீழ் தரப்பட்டுள்ளன:

*காலையில் எழுந்தவுடன் காபியை பருகக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்போது உடலில் கார்டிசோலின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால் நள்ளிரவு மற்றும் நண்பகலில் பருகுவதே சிறந்தது.

*நாம் பருகும் காபி 10 நிமிடங்களில் நமது உடலுக்குள் செயல்பட தொடங்குகிறது. 3 முதல் 5 மணி நேரம் வரை காபியின் தாக்கம் உடலில் இருக்கும்.

*ஆண்களை விட பெண்களும், புகை பழக்கம் இல்லாதவர்களை விட புகைப்பவர்களுமே காபியை வேகமாக ஜீரணிக்கின்றனர்.

*உலகில் 60 வகையான செடிகளில் இருந்து காபின் (caffeine) பெறப்படுகிறது.

*தொடர்ந்து காபி பருகுவது உங்களை அதற்கு அடிமைப்படுத்தும். காபி பருகாமல் எந்த செயலும் செய்ய முடியாத நிலையை உண்டாக்கும்.

*அளவுக்கு அதிகமாக காபி பருகினால் அதுவே உங்களுக்கு எமனாக கூட அமையலாம்.

*கர்ப்பிணிகள் அளவுடனேயே காபியை பருகவேண்டும். இல்லையென்றால் கருவிலுள்ள குழந்தையின் இதயத்தை அது தாக்கக்கூடும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

* காபின் என்பது காபியில் மட்டும் இருப்பதில்லை.நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவு பதார்த்தங்களின் காபின் நிறைந்துள்ளது.

* அளவுக்கு அதிகமாக மது அருந்துவதினால் ஏற்படும் தலைவலியை காபி பருகுவதால் கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுவது வெறும் பிரமையே. காபியில் அப்படி எந்த சிறப்பு பொருட்களும் இல்லை.

* காபியை அளவுடம் பருகிவருவது பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

*காபி பருகுவது உங்களின் உற்சாகத்தையும், மூளையின் செயல்பாட்டையும் அதிகரிக்கிறது. கூடவே உடல் எடையையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
Disqus Comments