.

Saturday, December 5, 2015

சேற்றுப் புண்ணை போக்க எளிய வழிமுறைகள்
தொடர் மழையால் பெரும்பாலான சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. மழைநீரில் அதிகமாக நடப்பவர்களுக்கு கால்களில் சேற்றுப்புண், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது. சேற்றுப்புண் என்பது மண் காய்ச்சல் (Mud Fever) என்றும் அழைக்கப்படுகிறது.


முதியோர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்தத் தொற்றுக்கு எளிதில் பாதிக்கப்படுவார்கள். இதனால் மழை நேரங்களில் வெளியே சென்று வந்தவுடன் கால், கைகளை நன்றாக கழுவி சுத்தப்படுத்த வேண்டும்.

காய்ந்த துண்டை வைத்து துடைத்துவிட்டு கால் விரல்களில் தேங்காய் எண்ணெய் போட வேண்டும். இதன் மூலம் கால்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியும். தொற்று, சேற்றுப்புண் ஏதேனும் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்


சிலரு‌‌க்கு மழை‌க்கால‌த்‌திலு‌ம், பலரு‌க்கு எ‌ப்போதுமே கா‌லி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது. எ‌ப்போது‌ம் த‌ண்‌ணீ‌ரி‌ல் ‌‌நி‌ன்று கொ‌ண்டு வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு சே‌ற்று‌ப் பு‌ண் ஏ‌ற்படு‌கிறது.

இது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும்.

ஈரமும்  வெப்பமும் கலந்திருக்கும் சூழலில் இது இலகுவாகத் தொற்றி விடும்.

அடிக்கடி கால் கழுவுவதால் ஏற்படலாம்.

 நீச்சலில் நீண்ட நேரம் ஈடுபடுதல்,

வெப்பமான காலநிலையில் வியர்க்கும்போது நீண்ட நேரம் காலணி அணிந்திருத்தல்,

அதிலும் முக்கியமாக வியர்வையை ஊறிஞ்சாத நைலோன் காலணிகளை அணிதல் ஆகியன பங்கஸ் தொற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.

விரல்களுக்கு இடையேயான இடைவெளிகள் மிக நெருக்கமாக இருப்பதும் காரணமாகலாம்.

சே‌ற்று‌ப் பு‌ண்ணை‌த் த‌வி‌ர்‌க்க மருதா‌ணி ந‌ல்ல மரு‌ந்தாக உதவு‌கிறது.

மருதா‌ணி இலையுட‌ன் ம‌ஞ்சளை சே‌ர்‌த்து அரை‌த்து இர‌வி‌ல் சே‌ற்று‌ப் பு‌ண் உ‌ள்ள இட‌ங்க‌‌ளி‌ல் ப‌ற்று‌ப் போ‌ல் போ‌ட்டு ‌விடு‌ங்க‌ள். ‌

மிகவு‌ம் கு‌ளி‌ர்‌ச்‌சியான உட‌ல் அமை‌ப்பை‌க் கொ‌ண்டவ‌ர்க‌ள் லேசாக‌த் த‌ட‌வி‌க் கொ‌ண்டா‌ல் போது‌ம். ஏனெ‌னி‌ல் மருதா‌ணி உடலு‌க்கு கு‌ளி‌ர்‌ச்‌சியை ஏ‌ற்படு‌த்‌தி‌விடு‌ம்.

காலை‌யி‌ல் எழு‌ந்து த‌ண்‌ணீ‌ர் கொ‌ண்டு கழு‌வி ‌விடவு‌ம். இ‌வ்வாறு மூ‌ன்று நா‌ட்க‌ள் செ‌ய்து வ‌ந்தா‌ல் சே‌ற்று‌ப்பு‌ண் குணமா‌கி‌விடு‌ம்.

இவற்றை குணப்படுத்த தேனுடன் மஞ்சள் கலந்து பூச விரலிடுகளில் பூசினால் சேற்றுப்பண்ணிலிருந்து விடுதலைப் பெற்றுவிடலாம். மருந்திடுவதற்கு (before apply the paste) முன்பு சேற்றுப்புண் உள்ள காலை நன்றாக வெண்ணீரில் கழுவி துடைத்தப் பிறகே மஞ்சள், தேன் கலந்த கலவையை(Turmeric, honey Mixture) சேற்றுப்புண் உள்ள இடங்களில் பூச வேண்டும். இந்தக் கவலை விரைவில் சேற்றுப் புண்ணை குணமாக்கும்.


புண்ணில் ஈரத்தன்மை அண்டாமல் பார்த்துக்கொள்வதாலும் இதை குணப்படுத்தலாம். முழுமையாக குணமாக அதிகபட்சமாக ஒரு வாரம் வரை ஆகலாம்.

சேற்றுப் புண் மீது இரண்டு நாட்கள் பாம் ஆயில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப் புண் வராது

அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலரவைப்பது அவசியம்.

இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வெறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்த வேண்டாம். இல்லையேல் உடலின் ஏனைய இடங்களிலும் பங்கஸ் தொற்று ஏற்படலாம்.

காலணி அணியும் போது கால்களுக்கடையில் மருந்துகளை பவுடராக போடுவதன் மூலமும் நோய் தொற்றுவதைக் குறைக்கலாம்.

மூடிய காலணிகளுக்குப் பதில் திறந்த காலணிகளை அணிவதும் உதவலாம்.
இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரமின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.

மேலு‌ம் சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல், த‌ண்‌ணீ‌ரி‌‌ல் ‌நி‌ன்று வேலை செ‌ய்யு‌ம் போது கா‌லி‌ல் ‌சி‌றிது தே‌ங்கா‌ய் எ‌ண்ணெயை‌த் தட‌வி‌க் கொ‌ள்ளவு‌ம்.

இ‌வ்வாறு செ‌ய்தா‌ல் ‌நிர‌ந்தரமாக சே‌ற்று‌ப்பு‌ண் வராம‌ல் தடு‌க்கலா‌ம்.
Disqus Comments