நம்மில் பலர் இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டிருக்கிறோம், இன்றும் பட்டுக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள். இவர்களுக்கு இரவு சாப்பிட்டு படுத்தவுடன் தூக்கம் வராததால், படம் பார்ப்பது, நன்பர்களுடன் மெசேஜ்மூலம் பேசுவது, பாடல்கள் கேட்பது அல்லது புரண்டு புரண்டு படுப்பது என செய்வதுண்டு. தூக்கம் வராமல் அவதிப்படுவது(insomnia) இன்சோம்னியா குறைபாடு என்று மருத்துவர்களால் குறிப்பிடப்படுகிறது.
உங்களுக்கு இன்சோம்னியா இருக்கிறதா என நீங்களே உணர்ந்து கொள்ளலாம். நீங்கள் தூங்கி எழுந்ததும், உங்களுக்கு இன்னும் உங்கள் உடலில் மிகுதியான சோர்வுடன் தூங்காத ஒரு மன பாங்கும் ஏற்பட்டால் உங்களுக்கு இன்சோம்னியா இருக்கிறது என்று அர்த்தம்.
பொதுவாக நம்மில் பலருக்கு காலையில் படுக்கையிலிருந்து எழும்ப தோனது. இது இன்சோம்னியா கிடையாது சோம்பல். மிகுந்த சோர்வுடன், கண்களில் மற்றும் முகத்தில் வாட்டம் ஏற்படுவதுடன், இரவு முழுவதும் தூக்கம் இல்லாமை தான் இன்சோம்னியாவின் அறிகுறிகள். தூக்கத்தின் தரத்தை வைத்தும் இன்சோம்னியா முடிவு செய்யப்படுகிறது. இன்சோம்னியாவை மருத்துவரிடம் செல்லாமல் நாமே சரி செய்து கொள்ளலாம். முதலில் உங்கள் இன்சொம்னியாவின் காரணம் என்ன என்று கண்டறிய வேண்டும்.
இன்சோம்னியாவின் காரணங்கள்:
இன்சோம்னியாவின் காரணங்களில் மிகவும் பொதுவானது, மனநிலை. உங்களுக்கு அதிகமான வேலைப் பளு, கவலை, தோல்வி போன்றவற்றால் தூக்கமின்மை ஏற்படும். இந்த வகை இன்சோம்னியாவை சரி செய்வது காரணமான பிரச்சனையை முடிப்பது தான். இதற்கான சரியான தீர்வு நீங்கள் பாதிக்கப்பட்ட அல்லது உங்கள் கவலைக்கான காரணத்தை மறப்பது தான்.
சில வலி மருந்துகளாலும் தூக்கமின்மை ஏற்பட வாய்புள்ளது. நமது உடலில் மெலட்ரின் என்ற ஒரு வேதியல் பொருள் சுரக்கிறது. இது உறக்கம் ஏற்பட உதவுகிறது. இந்த வேதிப்பொருட்களை வலி மாத்திரைகளின் வேதி பொருட்கள் பாதிப்பதால் தூக்கமின்மை ஏற்படலாம்.
வழக்கமான நேரத்தை மாற்றி தூங்குவதும் தூக்கமின்மைக்கு காரணமாகும். நமது மூளை தன்க்குள்ளாக ஒரு கடிகார நேரத்தை கணித்து வைத்திருக்கும். நாம் அந்த நேரத்தை கடந்து தூங்கினாலோ அல்லது சீக்கிரம் தூங்க முயன்றாலோ தூக்கம் வராது. இது சாதாரனமாக, ஓரிரு நாட்களில் சரியாகிவிடும்.
தூக்கம் வர தூக்கமாத்திரையை உட்கொள்வது சரியான, முடிவு இல்லை. தூக்க மாத்திரையால் பக்க விளைவுகள் மிகவும் அதிகம். முடியாத நிலையில், உடலில் ஏற்படும் வலியின் போது மட்டுமே தூக்க மாத்திரையை உபயோகிக்க வேண்டும்.
இதை தவிற உண்வு பழக்கங்கள் மூலமாகவும் இந்த தூக்கமின்மையை கட்டுபடுத்த முடியும். மெலடோனின் வேதிப்பொருள் சுரக்க உதவும் உணவுகளை தூங்கப்போவதற்கு முன் உட்கொள்வதால் எளிதில் தூங்க முடியும். செர்ரி, வாழைப்பழம் போன்ற உணவுகளில் மெலடோனினை அதிகப்படுத்தும் தன்மை உள்ளது.
ரொட்டி, ஓட்ஸ், போன்ற கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ள, உணவுகள் சர்க்கரையை உற்பத்தி செய்து உடலில் இன்சுலினை சுரக்க செய்கிறது. இன்சுலின் அதிகமாக சுரக்கும் போது உறக்கம் ஏற்படும். எனவே இரவில் நாம் கார்போ ஹைட்ரேட் அதிகம் உள்ள அரிசி சாதம் உட்கொள்வது மிகவும் நல்லது.
இறுதியாக பால். பல ஆண்டுகளாக, நமது முன்னொர்கள் இரவி தூங்கப்போகும் முன் பால் குடிக்கும் பழக்கம் கொண்டிருந்தனர். இதற்கு இதுவும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். தூக்கமினமையை தடுக்க பாலில் உள்ள ட்ரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உதவுகிறது. இதோடு பலில் உள்ள கால்சியமும் தூக்கத்தை தூண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.