.

Friday, October 23, 2015

பாடி பில்டர் போன்ற உடலைப் பெற பின்பற்ற வேண்டியவை




ஒவ்வொரு ஆணும் தன் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள நினைப்பார்கள். அதற்காக அவர்கள் அன்றாடம் ஜிம் செல்வார்கள். சில ஆண்களுக்கு தசைகளே இருக்காது. அத்தகையவர்கள் பாடி பில்டர் போன்ற உடலைத் தம்மால் பெற முடியாதோ என்று நினைத்து வருந்துவார்கள்.


ஆனால் அப்படி நினைப்பது தவறு. கட்டாயம் அனைவராலும் தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். அதற்கு சரியான வழி என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றைப் பின்பற்றினால், நிச்சயம் பாடி பில்டர் போன்று உடலை வைத்துக் கொள்ள முடியும்.

சரி, இப்போது உடலில் தசைகளின் வளர்ச்சியை அதிகரித்து, பாடி பில்டர் போன்று உடலைப் பெறுவதற்கான சில அடிப்படை வழிகளைக் காண்போம்.

புரோட்டீன் உணவுகள்

தசைகள் உடலில் வளர்ச்சி அடைய வேண்டுமெனில், புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். எனவே நீங்கள் பாடி பில்டர் போன்ற உடலைப் பெற முதலில் செய்ய வேண்டியது புரோட்டீன் உணவுகளை உட்கொள்ள வேண்டியது தான்.

கலோரிகளை சற்று அதிகரிக்கவும் 

தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க விரும்பினால், ஆரம்பத்தில் தினமும் 500 கலோரிகளை அதிகமாக எடுத்து வர வேண்டும். அதற்கு கலோரிகள் நிறைந்த உணவுகளையும் அதிகம் உட்கொள்ள வேண்டும்.

எடை தூக்குதல்

நல்ல புரோட்டீன் மற்றும் கலோரிகள் நிறைந்த உணவுகளை எடுக்கும் போது, ஜிம்மில் தூக்கும் எடையின் அளவையும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க வேண்டும். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு எடையை அதிகரிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்.

மார்பக தசைகளை வளர்க்க...

மார்பக தசைகளை வளர்க்க வேண்டுமானால், பென்ச் பிரஸ் பயிற்சியை அன்றாடம் செய்து வர வேண்டும். இதனால் உங்கள் உடலின் மேல் பகுதி நல்ல வடிவத்தைப் பெறும்.

கால் தசைகளை வளர்க்க...

ஆம், கால் தசைகளை வளர்க்க வேண்டுமானால், சிம்பிளான ஸ்குவாட்ஸ் பயிற்சியை செய்தாலே போதும். அப்படி செய்யும் போது கொஞ்சம் கொஞ்சமாக தூக்கும் எடையின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

ஓய்வு

வாரத்திற்கு 4 நாட்கள் ஜிம் சென்று, மீதமுள்ள நாட்களில் நன்கு ஓய்வு எடுக்க வேண்டும். நீங்கள் எவ்வளவுக்கு எவ்வளவு ஓய்வு எடுக்கிறீர்களோ, உங்கள் தசைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். வேண்டுமெனில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஜிம் செல்லலாம்.

கார்டியோவை மறக்க வேண்டாம் 

ஸ்ட்ரெட்சிங் செய்வது மற்றும் கார்டியோ பயிற்சிகளான ரன்னிங் போன்றவற்றை வாரத்திற்கு ஒருமுறையாவது மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்கள் உடலின் ஸ்டாமினா அதிகரித்து, கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

நல்ல தூக்கம்

அவசியம் ஜிம் சென்றால் மட்டும் உங்கள் தசைகளின் வளர்ச்சி அதிகரிக்காது. அதோடு நல்ல தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக குறைந்தது 8 மணிநேர தூக்கத்தை ஜிம் செல்வோர் மேற்கொண்டால் தான், முழு பலனையும் பெற முடியும்.

Disqus Comments