.

Friday, October 30, 2015

உங்க இரத்தம் சுத்தமா இருந்தா தான் உடம்பு சுத்தமா இருக்கும், அதுக்கு என்ன பண்ணலாம்?



நமது உடல் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும் பொருள் தான் இரத்தம். இரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு, இரத்த ஓட்டம் என எதில் குறைபாடு ஏற்பட்டாலும் அது நமது உடலை வலுவாக பாதிக்கும் வகையில் முடிந்துவிடும். அப்படிப்பட்ட இரத்தத்தை நாம் மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதற்காக நீங்கள் ஆங்கில மருத்துவம், மாத்திரை, மருந்துகளை நாட வேண்டும் என்றில்லை. நாம் தினசரி காணும், உணவில் சேர்க்கும் சில இயற்கை பொருள்களை கொண்டே நாம், நமது உடலில் ஓடும் இரத்தத்தை எளிய முறையில் சுத்திகரிப்பு செய்யலாம்....


செம்பருத்தி

செம்பருத்திப்பூவின் இதழ்களை எடுத்து சுத்தம் செய்துக் காய வைத்து பொடி செய்துக் கொள்ளுங்கள். இதை தினமும் காலை, மாலை 1 டம்ளர் சுடு தண்ணீரில் ஒரு ஸ்பூன் கலந்து பருகி வந்தால், உடலில் பலவீனம் குறைந்து இரத்தம் தூய்மையடையும்.

ஆப்பிள் சாறு

ஒரு டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் அடையும். உடல் சக்தி அதிகரிக்கும்.

திராட்சை 

திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகி இரத்தம் சுத்தமடையும்.

நன்னாரி மற்றும் பால் 

நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.

விளாம்பழம்

அவ்வப்போது விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.

இஞ்சி சாறு

உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவற்றை நன்றாக கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பருகி வந்தால், இரத்தம் தூய்மை அடையும்.
Disqus Comments