சில நேரங்களில் காலையில் எழுந்ததும் பலரது முகம் பொலிவிழந்து சோர்வுடன் காணப்படும். அப்படி காலையில் எழுந்து அலுவலகத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் கண்ணாடியை பார்க்கும் போது முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படாவிட்டால், நமக்கே நம்மை பிடிக்காமல் போகும்.
மேலும் அப்படியே அலுவலகத்திற்கு சென்றால், அங்குள்ளவர்கள் நன்றாக இருக்கும் போதே என்ன உடல்நிலை சரியில்லையா என்று கேட்பார்கள். இதுவே நம்முடைய அன்றைய நல்ல மனநிலையை கெடுத்துவிடும். ஆகவே நீங்கள் எப்போதும் புத்துணர்ச்சியுடன் காணப்பட காலை வேளையில் ஒரு 10 நிமிடம் செலவழித்தால் போதும்.
அந்த 10 நிமிடங்களில் ஒருசில மந்திரத்தின் மூலம் முகத்தில் புத்துணர்ச்சியை மலரச் செய்யலாம். சரி, இப்போது முகத்தின் பொலிவையும், புத்துணர்ச்சியையும் அதிகரித்து வெளிக்காட்ட உதவும் சில டிப்ஸ்களைப் பார்ப்போம். குறிப்பாக இந்த டிப்ஸ்களை ஏதேனும் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் முன் செய்தாலும், முகத்தில் புத்துணர்ச்சியை மலரச் செய்ய முடியும்.
எலுமிச்சை ஜூஸ்
எலுமிச்சை ஜூஸை பாலுடன் சேர்த்து கலந்து, அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தின் பொலிவு அதிகரித்திருப்பதை உடனே காணலாம்.
வெள்ளரிக்காய் ஜூஸ்
வெள்ளரிக்காய் வீட்டில் இருந்தால், அதன் சாற்றினை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவுங்கள். இல்லாவிட்டால், ஒரு வெள்ளரிக்காய் துண்டை எடுத்து, முகத்தை சிறிது நேரம் தேய்த்து ஊற வைத்து கழுவுங்கள். இதன் மூலமும் சோர்வுடன் காணப்படும் முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டலாம்.
உருளைக்கிழங்கு
கருவளையங்கள் உங்கள் முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? அப்படியென்றால் உருளைக்கிழங்கை நீரில் 5 நிமிடம் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு முகத்தை கழுவுங்கள். இல்லையெனில் உருளைக்கிழங்கை வெட்டி அதனைக் கொண்டு கண்கள் மற்றும் முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவுங்கள்.
டூத் பேஸ்ட்
தூங்கி எழுந்து பார்க்கும் போது முகத்தில் பிம்பிள் உள்ளதா? அப்படியெனில் டூத் பேஸ்ட்டை பிம்பிள் மேல் வைத்து, 10 நிமிடம் கழித்து கழுவினால், பிம்பிள் அளவு குறையும்.
தக்காளி
முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், முகத்தின் மென்மைத்தன்மை நீங்கும். ஆகவே முகச்சருமத்தை மென்மையாக்க தக்காளியை வெட்டி, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவினால், முகம் அழகாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.
ஓட்ஸின் மாயம்
காலையில் ஓட்ஸ் சாப்பிடுபவரா? உங்களுக்கு வறட்சியான சருமமா? அப்படியெனில் ஓட்ஸ் பொடியுடன் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்து, அதனைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், ஓட்ஸ் முகத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, முகத்தை புத்துணர்ச்சியுடன் வெளிக்காட்டும்.
க்ரீன் டீ
காலையில் க்ரீன் டீ குடித்தீர்களா? அப்படியெனில் அந்த க்ரீன் டீ பையை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின் அந்த நீர்மத்தை முகம் மற்றும் கழுத்தில் தடவி, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனாலும் முகம் புத்துணர்ச்சியுடனும் பொலிவோடும் காணப்படும்.
தினமும் காலையில் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி உலர வைத்து, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால், முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக இருக்கும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், முகம் பொலிவோடு நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கூட சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் போது தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி முகம், கை, கால்களுக்கு தடவி மசாஜ் செய்து படுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால் சருமம் நன்கு பொலிவோடு புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஆப்பிள் சாறு
ஒரு டம்ளர் ஆப்பிள் பழச்சாறு எடுத்து அதில் கேரட் சாறு மற்றும் இஞ்சிச்சாறு கலந்து குடித்து வந்தால் உடல் சோர்வு குறைந்து இரத்தம் சுத்தம் அடையும். உடல் சக்தி அதிகரிக்கும்.
திராட்சை
திராட்சை பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகி இரத்தம் சுத்தமடையும்.
நன்னாரி மற்றும் பால்
நன்னாரி வேரை இடித்து சாறு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த கோளாறுகள் குறையும்.
விளாம்பழம்
அவ்வப்போது விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் குறையும்.
இஞ்சி சாறு
உணவு சாப்பிட்ட பிறகு சிறிதளவு இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, தேன் இவற்றை நன்றாக கலந்து இரண்டு தேக்கரண்டி அளவு பருகி வந்தால், இரத்தம் தூய்மை அடையும்.