வேகமான வாழ்க்கை முறைகள் மற்றும் சுகாதாராமில்லாத உணவுகள் ஆகியவற்றால் இதுவரையிலும் கண்டிராக மற்றும் கற்பனைக்கும் எட்டாத பிரச்சனைகள் நமது வாழ்க்கைக்கு முன் வருகின்றன. இவற்றில் சில பிரச்சனைகள் இப்போதைக்கு மிகவும் சிறியதாகவே இருந்தாலும், முறையான சிகிச்சைகள் செய்யாமல் விட்டு விட்டால் மிகப்பெரிய சுகாதார சவால்களாக வலிந்து வளரத் தொடங்கி விடுகின்றன.
கல்லீரலில்
கொழுப்பு மிகுந்து விடும் பிரச்சனைகளுக்கு எளிதாகவும் மற்றும் மிகவும் திறமையாகவும் வீட்டிலேயே நிவாரணங்களை செய்ய முடியும். இந்த நிவாரணங்கள் பல தலைமுறைகளை கடந்து பயன்படுத்தப்பட்டு மனிதனின் கல்லீரல்களுக்கு உதவி வருகின்றன.
கல்லீரல் கொழுப்பு என்ற இந்த பிரச்சனையினால் தேவையில்லாத கொழுப்புகள் கல்லீரலில் சேர்ந்து, அந்த உறுப்பை நிரந்தரமாக பாதித்து விடுகின்றன. இந்த நோயினால் ஏற்படும் எரிச்சலால், கல்லீரலில்தழும்புகள் ஏற்படவும் மற்றும் அதன் தசைகளை கடினப்படவும் செய்து விடுகிறது.
நீங்கள் பாதுகாப்பாகவும் மற்றும் ஆரோக்கியமாகவும் இருக்க விரும்பினால், வீட்டிலேயே கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கான சிகிச்சைகளை செய்ய வேண்டியது அவசியமாகும்.
மோசமான உணவு முறை மட்டுமல்லாமல், தொடர்ந்து ஆல்கஹாலை அதிகமாக குடித்தல், தொப்பை போன்ற விஷயங்களும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வர காரணமாக உள்ளன.
இந்த பிரச்சனைக்கான காரணம் உணவு முறையை ஒட்டியோ துவங்குவதால், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடத் துவங்குவது நல்லது. இதோ இந்த கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளை சரி செய்வதற்கான சில நிவாரணங்களைப் பற்றி இங்கே கொடுத்துள்ளோம்.
கல்லீரல் பிரச்சனைகளை தவிர்க்க சில யோசனைகள்!
க்ரீன் டீ
க்ரீன் டீ குடிப்பதன் காரணமாக இந்த கல்லீரல் பிரச்சனையை பெருமளவு பின்னோக்கி தள்ள முடியும். உங்களுடைய தினசரி உணவில் க்ரீன் டீயை சேர்த்துக் கொண்டு, அதிலுள்ள ஆக்ஸிஜன் எதிர்பொருட்களின் உதவியுடன் நல்ல பலன்களைப் பெற முயற்சி செய்யுங்கள்.
சிட்ரஸ் பழங்கள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சனைக்கு வீட்டிலேயே தீர்வு காண விரும்பினால் வைட்டமின் சி நிரம்பிய சிட்ரஸ் பழங்கள் உங்களுக்கு கை கொடுக்க காத்திருக்கின்றன. ஆரஞ்சு அல்லது எலுமிச்சை சாறுகளை வெறும் வயிற்றில் நீங்கள் குடித்துப் பாருங்கள் – விளைவுகள் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
பாகாற்காயின் பாதுகாப்பு
பாகற்காய் சாப்பிடுவதற்கு கசப்பாக இருந்தாலும், கல்லீரல் கொழுப்புகளைக் குறைக்கும் இனிப்பான வேலைகளை செய்கின்றன. ஒரு கப் அல்லது ½ கப் பாகற்காயை தினமும் உங்களுடைய உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன்களை நீங்கள் பெற முடியும். மேலும், நீங்கள் இதை சாறாகவும் குடிக்க முடியும்.
பால் நெருஞ்சில்
பால் நெருஞ்சில் என்ற மூலிகை உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை நீக்கி, உடலில் பல்வேறு வகையான ஆச்சரியங்களை ஏற்படுத்தும் குணம் கொண்டதாகும். கல்லீரலில்சேதமடைந்துள்ள செல்களை குணப்படுத்த விரும்பினால் தினமும் இந்த மூலிகையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
முழு தானியங்கள்
முழு தானியங்களுக்கு கல்லீரல் கொழுப்பை உடைத்து அவற்றிலுள்ள தீங்கு விளைவிக்கக் கூடிய பொருட்களை வெளியேற்றும் குணங்கள் உள்ளன. உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால், பதப்படுத்தப்பட்ட தானியங்களுக்குப் பதிலாக முழு தானியங்கள் மற்றும் அவற்றின் பகுதிப் பொருட்களை தினமும் சாப்பிடத் தொடங்குங்கள்.
தக்காளி
தினமும் சமையலுக்காக பயன்படுத்தப்படும் தக்காளியை பச்சையாக சாப்பிடுவதால் கல்லீரல் கொழுப்பை நீக்க முடியும். மிகவும் எளிதாக கிடைக்கும் தக்காளியை தினமும் சாப்பிட்டு, கல்லீரல் கொழுப்பு பிரச்சனைகளுக்கு தீர்;வு காணுங்கள்.
இதர வழிகள்
கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை சமாளிக்க எண்ணற்ற இயற்கையான வழிகள் உள்ளன. ரோஸ்மேரி, அதிமதுரம், டான்டேலியன் மற்றும் அது போன்ற பிற மூலிகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமும் கொழுப்பினை குறைக்க முடியும்.
எனினும், இந்த மூலிகைகளை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதை மறந்து விட வேண்டாம்.
குறிப்பு
கல்லீரல் கொழுப்பு பிரச்சனையிலிருந்து விடுபட நினைத்தால், மனம் போன படி உணவு உண்ணுவதை நிறுத்துவதுடன், ஆரோக்கியமான மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகளை சாப்பிட்ட உடலை வளர்க்க வேண்டும்.
பட்டினி கிடந்து உடலின் கொழுப்புகளை குறைக்க முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது மிகவும் தவறு. உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் கல்லீரல் அபாயத்திற்குள்ளாகி, கல்லீரல் கொழுப்பு பிரச்சனை வரச் செய்து விடும் சூழல்களும் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் தினமும் சாப்பிடும் உணவுடன், இயற்கையான பழச்சாறுகள் மற்றும் நிறைய தண்ணீர் ஆகியவற்றை சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.