.

Thursday, July 9, 2015

மிக அதிகமான வியர்வை சில நோய்களுக்கான அறிகுறி என்பது உங்களுக்கு தெரியுமா?



ஓடி.., ஓடி, உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும், உடல் முழுதும் நல்லா வியர்க்கனும்.. அது தான் உங்கள் உடலுக்கும், மனதுக்கும் மிகவும் நல்லது. அப்படி என்றால் வியர்ப்பது நல்லது தானே? அதில் என்ன பிரச்னை இருக்கிறது. உழைத்ததன் காரணமாய் வியர்த்தால் நல்லது, வெறுமென இருந்ததற்கே வியர்த்துக் கொட்டினால்..?


 ஆம், நிறைய பேருக்கு இதுப் போன்று எந்த வேலையும் செய்யாமல் நிறைய வியர்வை வெளிப்படும். ஆனால், அவர்கள் இது உடலுக்கு நல்லது, உடலில் உள்ள கழிவுகள் எல்லாம் வெளிவருகிறது என்று எண்ணுவார்கள். ஆனால், இது சில உடல்நலக் கோளாறுகளின் அறிகுறிகள்.

 மாரடைப்பு, குறைந்த இரத்த சர்க்கரை அளவு போன்ற பல உடல்நலக் கோளாறுகள் வரப்போகிறது என்று உங்கள் உடல் உங்களுக்கு அடிக்கும் எச்சரிக்கை மணி தான் இந்த அதிகப்படியான வியர்த்தல். இனி, எந்த வேலையும் செய்யாமல் அதிகமாக வியர்ப்பது எந்தெந்த உடல்நலப் பிரச்சனைகளின் அறிகுறி என்று பார்க்கலாம்....

அதிகமான மன அழுத்தம்

வேலை பளுவின் காரணமாகவோ அல்லது பதட்டத்தின் காரணமாகவோ உங்களுக்கு அதிகமான மன அழுத்தம் ஏற்பட்டால் அதிகமான வியர்வை வெளிப்படும். இது போன்ற அதிகப்படியான மன அழுத்தம் உங்கள் உடல் நலத்தைக் கெடுக்கும்.

மாதவிடாய் நிற்கும் காலம்

85% மேலான பெண்களுக்கு, அவர்களது மாதவிடாய் சுழற்சி காலம் நிற்கும் போது அதிகமான வியர்வை வெளிப்படும். 40 - 45 வயதிலான பெண்களுக்கு அதிகமான வியர்வை வெளிபடுகிறது எனில் அதற்கு இதுவும் ஓர் காரணமாக இருக்கலாம்.

வெப்ப பக்கவாதம்

அதிகப்படியான வெயிலின் தாக்கம் இருக்கும் போது வெப்ப பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. வெயிலின் காரணமாக அதிகமானா வியர்வை வெளிப்படுவது இயல்பு தான்.

ஆயினும், அளவுக்கு மீறி வியர்வை வெளிப்படுகிறது எனில் உங்களுக்கு வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது என்பதற்கான அறிகுறி தான் அது.

குறைந்த இரத்த சர்க்கரை அளவு 

உங்கள் உடலில் இரத்த சர்க்கரை அளவு குறைந்து வருகிறது என்பது அதிகப்படியான வியர்வை வெளிவருவதை வைத்துக் கண்டறியலாம். முக்கியமாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கான அறிகுறி இது.

ட்ரைமெத்தைலேமினுரியா (Trimethylaminuria)

ட்ரைமெத்தைலேமினுரியா (Trimethylaminuria) என்பது ஓர் மரபணு கோளாறு. இதன் காரணமாக அதிகப்படியான வியர்வை வெளிவருதல், சிறுநீர் கழிந்தால் நாற்றம் ஏற்படுவதும், வாய் துர்நாற்றம் போன்றவை ஏற்படும். இது போன்ற கோளாறுகள் உங்களுக்கு ஏற்பட்டால் மருத்துவரை அணுகுவது தான் சரியான முறை.

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய்

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் ஏற்பட்டிருந்தால் கூட இதுப் போன்று அதிகமான வியர்வை வெளிபடுதல் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

உடல்நல பாதிப்புகள்

நிணநீர்ச் சுரப்பிப் புற்று நோய் மட்டுமின்றி, பார்கின்சன் நோய், ஹைபர்தைராய்டு போன்ற நோய்களின் தாக்கம் இருந்தால் கூட இதுப் போன்ற அதிகமாய் வியர்வை சுரக்குமாம்.
Disqus Comments