.

Saturday, July 11, 2015

பாலில் தேன் கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!!



பால் குடிக்கும் போது அத்துடன் தேன் சேர்த்து குடித்து வருவது நல்லது என்று சொல்வார்கள். ஆனால் அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்று பலருக்கு தெரியாது. தெரியாமலேயே நல்லது நல்லது என்று சொல்லி மட்டும் குடிப்பார்கள்.


ஆனால் எப்போதும் ஒருவிஷயத்தைப் பற்றி முழுவதும் தெரியாமல், ஏனோ சொல்கிறார்கள் என்று நினைத்து செய்வதை விட, அதனால் என்ன நன்மை கிடைக்கும் என்று தெரிந்து கொண்டு செய்வது தான் புத்திசாலித்தனம்.

செரிமானம்

பாலுடன் தேன் சேர்த்து குடித்தால், செரிமான பிரச்சனைகள் குணமாகும். இதற்கு இவ்விரண்டிலும் உள்ள புரோபயோடிக் தான் காரணம். இவை நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து, செரிமானத்தை மேம்படுத்தும்.

ஸ்டாமினா

கோடையில் உடலின் ஸ்டாமினாவானது விரைவில் குறையும். எனவே ஸ்டாமினாவை அதிகரிக்க காலையில் பாலுடன் தேன் கலந்து தினமும் குடிப்பது நல்லது.

எலும்புகளின் ஆரோக்கியம் 

எலும்புகளின் ஆரோக்கியத்தை பால் மேம்படுத்தும் என்பது தெரியும். ஆனால் பாலுடன் தேன் சேர்த்து குடித்து வந்தால், எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.

தூக்கமின்மை

தூக்கமின்மையால் அவஸ்தைப்பட்டால், இரவில் தூங்கும் முன் பாலுடன் தேன் கலந்து குடித்து வாருங்கள். இதனால் இரவில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

மலச்சிக்கல் 

மலச்சிக்கலால் அவஸ்தைப்பட்டால், அது குணமாவதற்கு வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடித்து வாருங்கள். அதிலும் இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.

சளி நிவாரணி

கோடையில் சளியால் கஷ்டப்பட்டால், வெதுவெதுப்பான பாலுடன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் அவற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, சளி தொல்லையில் இருந்து நிவாரணம் தரும்.

ஆரோக்கியமான இனப்பெருக்க மண்டலம்

புதுமணத் தம்பதியர்கள் வெதுவெதுப்பான பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால், அவற்றில் உள்ள கனிமச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்களால், இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைக்கும் போது, எவ்வித பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியமான குழந்தையைப் பெற்றெடுக்கலாம்.

எடை குறைவு

இதுவரை உடல் எடையைக் குறைக்க எத்தனையோ வழிகளைப் பின்பற்றி இருப்பீர்கள். ஆனால் பால் மற்றும் தேனை ஒன்றாக கலந்து பருகியிருக்கமாட்டீர்கள். இப்படி குடிப்பதால், உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதில் கரைந்து, உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

நெஞ்செரிச்சல் 

நெஞ்செரிச்சல் உள்ளவர்கள், உணவு உட்கொண்ட பின்னர் பாலுடன் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்செரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.
Disqus Comments