வாழையின் அனைத்து பாகங்களும் உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் சத்துக்களை உள்ளடக்கியுள்ளது. அதில் அனைவருக்கும் வாழைப்பழத்தின் நன்மைகளைப் பற்றி தெரியும். அதே சமயம் வாழைத்தண்டின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குறிப்பாக இக்கால தலைமுறையினருக்கு வாழைத்தண்டின் நன்மைகள் பற்றி தெரியாது.
அதிலும் வாழைத்தண்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம் என்ற ஒன்றே தெரிந்திருக்காது. மற்ற பழங்களை ஜூஸ் போட்டு குடிப்பது போல வாழைத்தண்டையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம். இதனை வீட்டில் மிகவும் சிம்பிளாக செய்து குடிக்கலாம். இங்கு வாழைத்தண்டு கொண்டு எப்படி ஜூஸ் செய்வதென்றும் அதனைக் குடிப்பதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னவென்றும் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக கற்களால் பாதிக்கப்படுவோர் அதிகம். இதற்கு போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது எனலாம்.
சிறுநீரக கற்கள் வராமல் இருக்கவும் இருக்கும் சிறுநீரக கற்கள் விரைவில் கரையவும் குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது வாழைத்தண்டு ஜூஸ் குடிக்க வேண்டும்
என்ன சத்துக்கள்?
அதிக நீர்ச்சத்து நார்ச்சத்து கொண்டது. சர்க்கரைச் சத்தும் உள்ளது.
பலன்கள்
கொழுப்பைக் குறைக்கும். வயிற்றுப் புண்களைச் குணப்படுத்தும்.சிறுநீர் எரிச்சலைப் போக்கும். ஊளைச் சதையைக் கரைத்து, உடல் பருமனைக் குறைக்கும்.
ரத்த அழுத்தம் குறையும், சிறுநீரக் கல் கரைக்கும்.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள், தொப்பை உள்ளவர்கள் அடிக்கடி வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால் நலம்.
இரண்டு ரெசிபி
1) வாழைத்தண்டு ஜூஸ்
வாழைத்தண்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிளகு, சீரகம், பூண்டு, எலுமிச்சை சாறு கலந்து உப்பு போட்டு கொதிக்க வைத்து காலை உணவுக்கு முன் குடித்து வந்தால் உடல் கனம் குறைவதோடு ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
2) வாழைத்தண்டு மோர்
வாழைதண்டு- 6
தயிர்- 1 லிட்டர்
இஞ்சிச் சாறு- 1 ஸ்பூன்
எலுமிச்சை இலை - 5 அல்லது 6
பெருங்காயத்தூள்- சிறிது
உப்பு- தேவைக்கேற்ப
செய்முறை:
வாழை தண்டிலிருந்து நாரினை நீக்கவும்.
வாழைத் தண்டை துண்டு துண்டாக நறுக்கி சிறிதளவு மோரில் போட்டு மிக்சியில் அடித்து வடிகட்டி வைக்கவும். மீதமுள்ள தயிரைக் கடைந்து தாராளமாக நீர் ஊற்றி ஐஸ்போட்டோ அல்லது பிரிட்ஜில் வைத்தோ குளிரவைக்கவும்.இதில் வடி கட்டி வைத்துள்ள வாழை தண்டு சாற்றை கலக்கவும்.
இஞ்சிச்சாறு, உப்பு, பெருங்காயத்தூள்சேர்க்கவும்.
எலுமிச்சை இலையை கசக்கி மோரில் போடவும்.
வயிற்று உப்பிசம், வயிற்று கோளாறு நீங்கும். கிட்னி ஸ்டோன் உள்ளவர்களுக்கு வாழைத்தண்டு சிறந்த பலனை தரும். நீர் கடுப்பு நோய் உள்ளவர்களுக்கு உபாதைகளை நீக்கும். உடல் பருமனாக உள்ளவர்கள்தொடர்ந்து பருகி வர பருமன் குறையும்.