.

Sunday, June 7, 2015

சர்க்கரையை நோயை வீட்டிலேயே குணப்படுத்த உதவும் சில வீட்டு சிகிச்சைகள்!!!இந்த உலகத்தில் வாழும் கோடிக்கணக்கானோர் ஒன்று தங்கள் இரத்தத்தில் குறைந்த அளவிலான சர்க்கரையுடன் வாழ்கின்றனர் அல்லது அதிக அளவிலான சர்க்கரையுடன் வாழ்கின்றனர்.

சர்க்கரை நோயாளிகள் அன்றாடமும் உடல்நல பிரச்சனைகளோடு போராட வேண்டி வருகிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தாமல் விட்டாலோ அல்லது கவனிக்காமல் விட்டாலோ கண் தெரியாமை, சிறுநீரக நோய், இரத்த குழாய் பாதிப்பு, தொற்று, இதய நோய், நரம்பு பாதிப்பு, அதிக இரத்த கொதிப்பு, வாதம், மூட்டு ஊனம் மற்றும் கோமா போன்றவைகள் ஏற்படும்.


உங்களுக்காக, உங்கள் சர்க்கரை நோய்க்காக நாங்கள் சில வீட்டு சிகிச்சைகளைப் பற்றி கூறுகிறோம். உடல் எடை மற்றும் இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடுகளுக்கான உணவு சிகிச்சைகளும் இதில் அடக்கம்.

சமைக்கப்படாத இயற்கை உணவு 

அனைத்து வகையான நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குவது சமைக்கப்படாத இயற்கை உணவு தான். இந்த உணவுகளில் அவைகளுக்கென சொந்த என்ஸைம்கள் உள்ளது. இவைகள் ரசாயனத்துடன் நீர்க்கப்படுவதில்லை. முளைத்த பயறு, பழங்கள், பழச்சாறுகள், நட்ஸ் போன்றவைகளை அப்படியே பச்சையாக உண்ணலாம். நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உண்ணும் போது நம் உடலில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுகிறது.

இதனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் சமநிலையுடன் விளங்கும். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை நிலை நிறுத்தும் வேலையை திறம்பட செய்யும் கரைகின்ற வகையிலான நார்ச்சத்து. ஆப்பிள், ஆப்ரிகாட், பீட்ரூட், பெர்ரி, கேரட், சிட்ரஸ் பழங்கள், முள்ளங்கி வகை கிழங்கு போன்ற சில பழங்கள் மற்றும் காய்கறிகளில் கரைகின்ற நார்ச்சத்து வளமையாக உள்ளது. சர்க்கரை நோய் உள்ள பலரும் அவதிப்பட்டு வரும் எல்.டி.எல். கொலஸ்ட்ரால் உயர்வை குறைக்கவும் கூட கரைகின்ற நார்ச்சத்து உதவுகிறது.

முழுமையான உணவு

காய்கறிகள் மற்றும் பழங்கள் அடங்கிய உணவுகளில் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்சிடன்ட்கள் வளமையாக உள்ளது. தமனி சுவர்கள் நச்சு அடையாமல் இருக்கவும், பாதிப்படையாமல் இருக்கவும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் தடுக்கும். அப்படி இல்லாத பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு இதய நோய் உண்டாகிவிடும்.

உடற்பயிற்சி

மருந்து மாத்திரை இல்லாமல் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவுகிறது உடற்பயிற்சி. இந்த நோயின் தீவிரத்தை இது குறைக்கும். அதனால் நீண்ட கால சிக்கலையும் குறைக்கும். உடற்பயிற்சிக்கு தேவையான ஆற்றல் உடல் எடையை குறைக்க உதவும். இதனால் உடல் பருமன் பிரச்சனையும் நீங்கும். உடற்பயிற்சி என்பது இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும். இதனால் டைப் 2 வகை சர்க்கரை நோய்க்கு மூல காரணமாக விளங்குவதை இது கையாளும். மேலும் சீரான முறையில் உடற்பயிற்சி செய்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவும், இரத்த கொதிப்பும் கூட குறையும். தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் கூட நல்ல பயன் கிடைக்கும்.

தியானம்

தியானம் செய்வதால் நம் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு குறையும். கார்டிசோல், அட்ரினாலின் மற்றும் நோராட்ரினலின் போன்ற சில மன அழுத்த ஹார்மோன்கள் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அளவுகளின் உற்பத்தியை தீவிரப்படுத்தும். ட்ரான்ஸ்சென்டென்ட்டல் தியான முறை மூலமாக நரம்பியல் ஹார்மோன்களை குறைத்தால், இரத்தத்தில் உள்ள இன்சுலின் மற்றும் க்ளுகோஸின் அளவு சமநிலையுடன் விளங்கும். மெட்டபாலிக் சிண்ட்ரோம் மற்றும் சர்க்கரை நோயை நடுநிலையாக்க இது உதவும்.

துளசி இலை

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க துளசி இலை உதவுகிறது. துளசி இலையில் விஷத்தன்மையுள்ள அழுத்தத்தை போக்கும் ஆற்றல்மிக்க ஆன்டி-ஆக்சிடன்ட்கள் உள்ளது. இந்த அழுத்தம் தான் சர்க்கரை நோயில் பல சிக்கல்களை உண்டாக்குகிறது.

ஆளி விதைகள்

இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் அளவை நிலைப்படுத்த ஆளி விதைகள் உதவும். குறிப்பாக ஆளி விதைகளை உட்கொண்டு வந்தால் உணவிற்குப் பிற்பட்ட சர்க்கரை அளவு 28 சதவீதமாக குறையும்.

இலவங்கப்பட்டை

உணவில் 1 கிராம் அளவில் இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு அதை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு குறையும்.

கிரீன் டீ

கிரீன் டீ என்பது புளிப்புச்சத்து ஏறாத வகையாகும். அதனால் அதில் பாலிஃபீனால் அளவு அதிகமாக இருக்கும். இதனால் திடமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஹைபோக்ளைசெமிக் தாக்கங்கள் இருக்கும். இரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பாடான அளவில் வெளியேற பாலிஃபீனால் உதவும்.

முருங்கைக்காய் இலைகள்

இந்த இலைகளில் உள்ள நார்ச்சத்து தெவிட்டான நிலையை அதிகரித்து உணவு உடைபடுவதை குறைக்கச் செய்யும்.

நாவல் பழ விதைகளின் பருப்பு சர்க்கரையை கட்டுப்படுத்தி சர்க்கரை நோய்க்கான அறிகுறியை பறந்தோட வைக்க உதவும் நாவல் பழ இலைகள். எனவே சர்க்கரை நோயாளிகள் நாவல் இலைகளை மெல்ல பரிந்துரைக்கப்படுகிறது.

பாகற்காய்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்க உதவும் பையோ ரசாயனமான இன்சுலின்-பாலிபெப்டைட் இந்த செடியில் உள்ளது. பாகற்காயை குழம்பில் மற்றும் சூப்களில் பயன்படுத்தலாம்.

வேம்பு 

சர்க்கரை நோய்க்கான சிகிச்சைக்கு கொழுந்து வேம்பு இலைகளை பயன்படுத்தலாம். அதிலிருந்து எடுக்கப்படும் சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலனை அளிக்கும்.

கருப்பு சீரகம்

கருப்பு சீரகம் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால், சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.

நாவல் பழ விதை

நாவல் பழ விதைகளில் உள்ள க்ளுகோசைட், ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றுவதை தடுக்கும். இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும். மேலும் இன்சுலின் உயர்வை கட்டுப்பாட்டில் வைக்கும். மேலும் இதயத்தை பாதுகாக்கும் குணங்களையும் இந்த பழம் கொண்டுள்ளது.

Disqus Comments