.

Thursday, June 11, 2015

மவுத்வாஷ் பயன்படுத்துபவரா நீங்கள்?



வாய் துர்நாற்றத்தை தவிர்ப்பதற்காக தினசரி இருவேளை மவுத்வாஷ் உபயோகிப்பவர்களுக்கு இதயநோய் வரும் வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். காரணம் மவுத்வாஷ் பயன்படுத்தும் போது அதில் உள்ள ரசாயனங்கள் பற்களிலும், ஈறுகளிலும் உள்ள நல்ல பாக்டீரியாக்களையும் கொன்று விடுகின்றனவாம்.
லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரியவந்துள்ளது. ஆரோக்கியமான நபர்களை ஆய்வு செய்து பார்த்த போது அவர்களின் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. காரணம் அவர்கள் தினசரி இரண்டு நேரம் மவுத்வாஷ் உபயோகிப்பவர்கள் என்று தெரியவந்தது.


அதேபோல வாய்க் கொப்பளிக்கும் மவுத்வாஷ்களை நீண்ட காலமாக பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆஸ்திரேலியா விஞ்ஞானிகள் இதுதொடர்பாக, இரண்டு நாடுகளின் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள் வெளியாகின. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைகழகமும், மெல்போர்ன் பல்கலைக்கழகமும் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டன. அந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளன.



பற்சிதைவு, வாய் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த பிரபலமான பல மவுத்வாஷ்கள் உள்ளன. அவை பயன் அளித்தாலும், குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொடர்ந்து மவுத்வாஷ் பயன்படுத்துவோருக்கு வாய் புற்றுநோய் ஏற்பட 9 மடங்கு வாய்ப்புள்ளது.

மது அருந்துபவர்களுக்கு… புகைபிடிப்பவர்களுக்கு இது பல மடங்கு புற்றுநோய் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. மது அருந்துவோருக்கு 5 மடங்கு அபாயம் உள்ளது. எனவே, மவுத்வாஷ்களை குறுகிய காலத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று ஆய்வில் கூறப்பட்டது

ஆல்ஹலால் கொண்ட மவுத்வாஷ்களைப் பயன்படுத்துவதால் புற்றுநோய் அபாயம் மட்டுமின்றி வாயில் எரிச்சல் உணர்வு, வறட்டுத்தன்மை, வலி ஆகியவையும் ஏற்படலாம். மவுத்வாஷில் ஆல்கஹால் சேர்ப்பதால் எந்தப் பயனுமில்லை என்பதை அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உணர வேண்டும் என்றும் ஆய்வில் கூறப்பட்டது

இங்கிலாந்தின் நியூகேசில் பல்கலைக்கழக ஆய்வில், ‘ஆல்கஹால் உள்ள மவுத்வாஷ்களைப் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏற்படலாம். எனவே, அவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க நோயாளிகளுக்கு பல் டாக்டர்கள் அறிவுறுத்த வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் சொத்தை ஆவதைத் தடுக்கவும், பற்சிதைவைக் குறைக்கவும், ஈறு தொடர்பான நோய்களைத் தொடக்கக் காலத்திலே தடுக்கவும் மவுத் வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது.

விளம்பரங்களைப்பார்த்து சுயமாக மவுத் வாஷ் செய்யக்கூடாது.
சாதாரணமாக, வெந்நீரில் கல் உப்பு போட்டு, வாய் கொப்பளிப்பதே சிறந்தது.
குழந்தைகளுக்கும் வாய் கொப்பளிக்கும் முறையை, சிறு வயதில் இருந்தே சொல்லித்தரலாம்.
பல் மருத்துவர், மவுத் வாஷ் செய்யச்சொல்லி பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் செய்யலாம்.
மருந்துச்சீட்டில் குறிப்பிட்டுள்ள கால அளவு மட்டுமே மவுத் வாஷ் செய்ய வேண்டும்.
Disqus Comments