காலை உணவு எந்த அளவிற்கு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். காலை உணவைத் தவிர்ப்பது, உடல் எடைக் குறைப்பிற்கு உதவும் என்பது தவறான கருத்து. இது ஒரு நாள் உணவில், மிகவும் இன்றியமையாத உணவு. மற்ற நேர உணவுகளை விட,அதிக நேர இடைவெளிக்கு பின் எடுக்கப்படும் உணவு காலை உணவே ஆகும்.
பொதுவாக, மதிய உணவு அல்லது இரவு உணவு முதலானவை முந்தைய உணவிற்கு பின் 3-4 மணி நேர இடைவெளியில் அமைகிறது. ஆனால் இரவு உணவிற்கு பின் 7-8 மணி நேர இடைவெளிக்குப் பின் காலை உணவு எடுக்கப்படுகிறது. நல்ல பசிக்கு பின், நீண்ட நேர இடைவெளிக்குப் பிறகான உணவு, நல்ல சத்துகளும், புரதமும் நிறைந்ததாக இருக்க வேண்டும். இந்த காலை நேர உணவானது மிகவும் இன்றியமையாததாகும்.
காலை உணவைத் தவிர்ப்பது, உங்கள் உடலுக்கு எதிராக நீங்கள் செய்யும் பாவமான காரியம் ஆகும். காலை உணவைத் தவிர்ப்பது, உடல் எடைக் குறைப்பிற்கு உதவும் என்பது தவறான கருத்து. பாலிஷ் செய்யப்பட்ட அரிசியினால் செய்யப்பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதை மதிய உணவு வரை தொடர்ச்சியாக எடுக்கக் கூடாது.
பான் கேக் மற்றும் சர்க்கரைப்பாகு
இது மிகவும் சுவை மிகுந்ததாகவும், நினைத்தாலே நாவில் நீர் ஊறுவதாகவும் இருக்கும். வழக்கமாக காலை உணவிற்கு பான் கேக்கை எடுப்பது ஆரோக்கியமானது அன்று. இது மாவு, சர்க்கரை மற்றும் சர்க்கரைப்ப்பாகு போன்றவற்றால் சுவைமிகுந்ததாகத் தயாரிக்கப்படுகிறது. இதில் நார் சத்தே இல்லை. மேலும் இதில் அதிக அளவிலான கொலஸ்ட்ரால் அடங்கி உள்ளது. எனவே இதை காலை உணவாக உட்கொள்வது தவறான செயல்.
இனிப்பு மிகுந்த மற்றும் வண்ணமூட்டப்பட்ட தானியங்கள்
கார்ப்ரேட் கம்பெனிகள், தங்களுடைய தயாரிப்புகளை பெரிய அளவில் மக்களிடையே விற்றுத் தள்ளுகின்றன. இதில் நீங்கள் தானியங்களை தேர்வு செய்யும் போது,கவனத்துடன் தேர்வு செய்ய வேண்டும். பெரும்பாலும் அங்கே பளபளப்பாக்கப்பட்ட மற்றும் வண்ணம் ஊட்டப்பட்ட தானியங்கள், ஆரோக்கியமற்ற செய்முறை மற்றும் அதில் அடங்கி உள்ள ஆரோக்கியமற்ற பொருட்கள் போன்றவையே அங்குள்ள தானியங்களில் அடங்கி உள்ளன. வண்ண மயமான வளையங்கள் மற்றும் நட்சத்திர வடிவில் கண்ணை கவரும் வண்ணம் அவை தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் கெடுதலானது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
காலை உணவிற்கு இறைச்சியை எடுத்துக் கொள்ளுவது, ஆரோக்கியமானது. ஆனால் உப்புக்கண்டம், பன்றியின் தொடைக்கறி, மிதவதக்கல் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆரோக்கியமானதன்று. இதில் அதிக அளவில் அடங்கி உள்ள நைட்ரேட், பெருங்குடல் மற்றும் மலக்குடலில் புற்று நோயைத் தோற்றுவிக்கிறது. எனவே இந்த பழக்கத்தை நீங்கள் கண்டிப்பாக மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். இதற்கு பதிலாக, பிரஷான வறுத்த மீனை எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான மாற்றமாக இருக்கும்.
வறுத்த பண்டங்கள்
ஒரு நாளைய உணவில் காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கும். முழுவதும் வறுக்கப் பட்ட உணவுகளை காலை உணவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முழுதும் எண்ணெய்யில் வறுக்கப்பட்ட மீன், பூரி, உருளைக்கிழங்கு வறுவல், சமோசா மற்றும் பட்டுரா போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை உங்கள் உடலுக்கு தேவையான கொலஸ்ட்ராலை தருவதுடன்,தேவையற்ற கொழுப்புகளையும் உடலில் தங்கச் செய்கின்றன.
ஸ்வீட்ஸ்
இந்தியாவில் வங்காளம் மற்றும் வட மாநிலங்களில் பெரும்பாலும் காலை உணவாக ஸ்வீட்ஸ் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு டைம் பாம் ஆக செயல்பட்டு, அதிக அளவு கொலஸ்ட்ராலை தோற்றுவித்து ரத்தக் குழாய்களை அடைக்கச் செய்கிறது. பாஸ்ட்ரி, பணியாரம் மற்றும் பெஜேல் போன்றவை உடலுக்கு மிகவும் கெடுதலானவை.
வட பாவ்
துரித உணவுகளான பீட்சா, பர்கர், வட பாவ், கச்சோரி, சமோசா போன்றவை நீண்ட இடைவெளிக்கு பிறகான காலை உணவிற்கு மிகவும் கெடுதலானவை. இவைகளில் சத்துக்களே இல்லை. ஆனால் கெட்ட கொழுப்புகள் அதிக அளவில் அடங்கி உள்ளன. இந்த உணவுகள் எந்தவித சத்துக்களையும் உடலுக்கு அளிப்பதில்லை.