பூசணிக்காய் என்றதும் நமக்கெல்லாம் திருஷ்டி பொம்மை தான் நினைவுக்கு வரும். மற்றவரது திருஷ்டிகளை எல்லாம் தன் மேல் ஏற்றிக்கொண்டு உடைந்து சிதறும் அந்தப் பூசணிக்காய்க்கோ, அதை உடைப்பவர்களுக்கோ அதன் நற்குணங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை பலரும் அதை ஒரு காயாகவே மதிப்பதில்லை. உடலை இளைக்கச் செய்வதி லிருந்து, சிறுநீரகக் கோளாறுகளை சரி செய்வது வரை வெள்ளை பூசணிக்குள் ஒளிந்திருப்பது அத்தனையும் அற்புதமான மருத்துவக் குணங்களே!
டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம் எனப் பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள், பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்ட்’ என்று பெயர். ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு. அசிடிட்டி பிரச்சினைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து.
‘கேஸ்ட்ரைடிஸ் என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், காபோவைதரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் கூறுகின்றார்கள். அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
இத்தனை நல்ல குணங்கள் இருக்கிற காரணத்தினால், தினசரி பூசணிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாமா எனக் கேட்டால், கூடாது என்றுதான் சொல்வேன். இந்த விதி பூசணிக்காய்க்கு மட்டுமல்ல எல்லா காய்கறிகளுக்குமே பொருந்தும். சோறும் பருப்பையும் தவிர, வேறு எந்த உணவையும் தினசரி உண்பது சரியல்ல. இயற்கையின் படைப்பில் நமக்கு எத்தனையோ காய்கறிகளும், பழங்களும் கிடைக்கிற போது, ஒன்றை மட்டுமே தொடர்ந்து எடுப்பது தவறு. அது எத்தனை சத்தானதாக இருந்தாலும் அப்படித்தான்...’’ என்கிற தாரிணி கிருஷ்ணன், பூசணிக்காயை வைத்துத் தயாரிக்கக் கூடிய ஆரோக்கிய ரெசிபியும் தருகிறார்.
பூசணி பத்தையை நறுக்கிய பிறகு கழுவாமல், முழு பத்தையையும் கழுவி விட்டு, பிறகு சின்ன துண்டுகளாக நறுக்கி சமைக்கவும். பூசணிக்காய் சீக்கிரமே வெந்துவிடும் என்பதால் மற்ற காய்கறிகளைப் போல நீண்ட நேரம் சமைக்க வேண்டியதில்லை. ரொம்பவும் வெந்துவிட்டால், அது கரைந்து, கூழாகி விடும். பூசணிக்காய்க்கென தனி ருசி கிடையாது. அத்துடன் சேர்க்கிற மற்ற பொருட்களின் மணத்தையும் ருசியையும் தானும் கிரகித்து அப்படியே பிரதிபலிக்கக் கூடியது. எனவே, பூசணிக்காயை சூப், கூட்டு, பாயசம், அல்வா, கிரேவி என எதில் வேண்டுமானாலும் சேர்க்கலாம். நறுக்கிய பூசணிக்காயை ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். ஆனாலும், அதை அதிக பட்சம் 2 நாட்களுக்குள் பயன்படுத்தி விடுவதே நல்லது.
பூசணித் தகவல்கள்
மனநலம் தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்கும் சக்தி கொண்டதாம் பூசணி. ஆயுர்வேதத்தில் மனநோய்களுக்கான மருந்துத் தயாரிப்பில் பூசணிக்காயின் பங்கு பிரதானமானது. வயிற்றுப்புண்ணை ஆற்றும் சக்தி கொண்டது. அல்சர் பாதித்தவர்களுக்கு பூசணிக்காய் சாறு கொடுக்கும் பழக்கம் கிராமங்களில் உண்டு.ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள், ரத்த தொடர்பான நோய்கள், சிறுநீரகப் பாதை தொடர்பான நோய்கள், சிறுநீரகக்கல் போன்றவற்றுக்கும் பூசணிக்காய் பலன் தருகிறது. பூசணிக்காயின் அத்தனை பகுதிகளுமே மருத்துவக் குணம் வாய்ந்தவை. அடிபட்ட காயத்தின்
மேல் பூசணி இலையைத் தேய்த்தால் சீக்கிரமே ஆறும். பூசணி விதைக்கு, குடல் புழுக்களை அகற்றும் சக்தி உண்டாம்.
எப்படி வாங்குவது?
இப்போதெல்லாம் பூசணி பத்தையாகக் கிடைக்கிறது. அதன் சதைப் பகுதி வெள்ளையாக, மஞ்சள் படராமல், நிறம் மாறாமல் இருக்கவேண்டும். முழு பூசணிக்காயாக வாங்குவதென்றால் கெட்டியாக இருக்க வேண்டும். நல்ல கனமான, அழுத்தமான காய் சிறந்தது.
‘‘டயட்டீஷியன்களின் பேராதரவு பூசணிக்காய்க்கு எப்போதும் உண்டு. பருமன் குறைய உதவும் உன்னத காய் என்பது அதில் முதல் காரணம்’’ எனப் பெருமையுடன் ஆரம்பிக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன். வெண்பூசணியின் நல்ல தன்மைகளைப் பற்றி அவர் தருகிற தகவல்கள், பூசணியின் ருசியைப் போலவே புத்தம் புதுசு. ‘‘ஆங்கிலத்தில் பூசணிக்காய்க்கு ‘ஆஷ் கார்டு’ என்று பெயர்.
ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு.
ஆயுர்வேதத்தில் வெண்பூசணிக்கு முக்கிய இடமுண்டு.
அசிடிட்டி பிரச்னைக்கு பூசணிக்காய் சாறு மாமருந்து. ‘கேஸ்ட்ரைடிஸ் ஈஈஸாஃபேகல் ரிஃப்ளெக்ஸ் டிசீஸ்’ என்பது ஒருவகை செரிமானக் கோளாறு (நெஞ்செரிச்சல்). வயிற்றிலிருந்து அமிலம் போல ஒரு திரவம் தொண்டைக்கு வருவதை உணர்வார்கள். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு பூசணிக்காய் சாறு தீர்வு தரும். பூசணிக்காயை தோலும் விதையும் நீக்கி, அப்படியே மிக்ஸியில் அடித்து, 2 நாட்களுக்கொரு முறை வீதம், 10 நாட்களுக்கு வெறும் வயிற்றில் குடித்தால் நிவாரணம் தெரியும்.
பூசணிக்காயில் கலோரி குறைவு என்பதால் எடை குறைக்க நினைப்போருக்கு மிகவும் சிறந்தது. கொழுப்பில்லாத காரணத்தினால் நீரிழிவு பாதித்தவர்கள், இதய நோயாளிகளுக்குக் கூட இது சிறந்தது. 100 கிராம் பூசணிக்காயில் இருப்பது வெறும் 10 கலோரிகள் மட்டுமே. புரதச் சத்து 0.48 கிராமும், கார்போஹைதரேட் 1.9 கிராமும், இரும்புச்சத்து 0.8 மி.கிராமும், கொழுப்புச்சத்து 0.1 கிராமும் மட்டுமே இருப்பதால், யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
96 சதவிகிதம் தண்ணீர் சத்து கொண்டது என்பது ஹைலைட். சிறுநீரகக் கோளாறுகளை விரட்டும் குணமும் கொண்டது. பூசணிக்காயை பச்சையாக எடுத்துக் கொண்டால் சளி பிடிப்பதாக சிலர் சொல்வர். அது நிரூபிக்கப்படாதது என்றாலும், அப்படி ஒத்துக் கொள்ளாதவர்கள் பச்சையாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.