எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று போற்றப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ எலுமிச்சை கனியில் வைட்டமின் . சி உயிர்சத்து அதிகம் உள்ளது. அத்துடன் சுண்ணாம்பு சத்தும், பாஸ்பரசும் அதிக அளவில் உள்ளன.
இது உடல் உஷ்ணத்தை தணிக்கும் ஆற்றல் பெற்றது. தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்
எலுமிச்சையில் அதிக நீரும், 30-க்கும் மேற்பட்ட எளிதில் ஆவியாகும் எண்ணெய் பொருட்களும் உள்ளன. இதில் ஆல்கஹால்கள், அல்டிஹைடுகள், எஸ்டர்கள், ஹைடிரோகார்பன், கீட்டோன்கள், ஆக்ஸைடுகள், சிட்ரிக் அமிலம், சிட்ரால் டெர்பினால்கள் போன்றவை உள்ளன.
தூக்கமின்மையை போக்கும்
வயிறு தொடர்புடைய கோளாறுகளை குணமாக்கும். மலச்சிக்கலையும் நீக்கும். பித்த காய்ச்சல், கிறுகிறுப்பு, வாந்தி போன்ற தொல்லைகளைப் போக்கும். வாய், வயிறு, போன்ற இடங்களில் ஏற்படும் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். பற்களுக்கு பலத்தை அளிக்கும். கண்நோய்களை குணமாக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தூக்கமின்மையை போக்கி ஆழ்ந்த நித்திரையை கொடுக்கும். தோல் வறட்சியை போக்கும். சருமம் மிக மிருதுவாக இருக்க இதன் சாறு உதவுகிறது. உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் கோளாரை சரி செய்யும் ஆற்றல் உண்டு.
கொசுக்கடிக்கு மருந்து
விஷத்தை முறிக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. தேள் கொட்டி விட்டால் கொட்டிய இடத்தில் ஒரு துண்டு எலுமிச்சம் பழத்தை தேய்க்க விஷம் இறங்கும்.
கொசுக் கடித்த இடத்தில் எலுமிச்சை சாற்றினை பூசினால் எரிச்சல் குணமடையும். இரவில் தூங்கும் முன் சாற்றினை பூசினால் கொசுக்கடியில் இருந்து தப்பலாம்.
கிருமிகளுக்கு எதிரானது
பொதுவாகவே இயற்கையில் விளையும் கனிகள் மருத்துவ குணம் உடையவை. எலுமிச்சைக்கு அதில் முதலிடம். இது கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நோய் வராமல் தடுக்கின்றன. எலுமிச்சையில் உள்ள சாற்றில் சிட்ரிக் அமிலம் என்னும் முக்கிய பொருள் உள்ளது. இது வைட்டமின் சி குறைபாட்டினால் ஏற்படும் ஸ்கர்வி என்னும் நோயை குணப்படுத்த உதவுகிறது. பசியை தூண்டுகிறது. ஜீரணத்தை எளிதாக்குகிறது. வாந்தி, வயிற்று வலி நோய்களை குணப்படுத்தும்.
நுரையீரல் நோய்கள்
எலுமிச்சை கனியின் சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப்போக்கும். நாடுவிட்டு நாடு செல்பவர்களுக்கும், கப்பல் பயணத்திற்கும் மிகவும் உதவும். நுரையீரல் நோய்களை போக்கும்.
எலுமிச்சை சாறுடன் சம அளவு தண்ணீர் சேர்த்து கொப்பளித்தால் ஈறு மென்மையாதல் மற்றும் வைட்டமின் சி குறைவினால் ஏற்படும் வாய்ப்புண்கள் குணமடையும்.
எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளிகளின் தாகத்தை தீர்க்கும் ஆற்றல் கொண்டது.
எலுமிச்சை ஊறுகாய்
அனைத்து வீடுகளும் இருக்கக்கூடிய அத்தியாவசிய உணவுப்பொருள் எலுமிச்சை ஊறுகாய். இது கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களை குணப்படுத்த உதவுகிறது.