.

Tuesday, April 21, 2015

இரவு 9 மணிக்கு மேல் நிச்சயம் தவிர்க்க வேண்டிய உணவுப் பொருட்கள்!!!



மனிதனுக்கு உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் மட்டுமின்றி, நிம்மதியான தூக்கமும் மிகவும் இன்றியமையாதது. மனிதன் ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தைக் கடைப்பிடிக்காவிட்டால், அவனது உடலில் பல பிரச்சனைகள் அழையா விருந்தாளியாய் வந்து ஒட்டிக் கொள்ளும். இன்றைய காலத்தில் நைட் ஷிப்டில் வேலை செய்வோர் கூட, ஒரு நாளைக்கு வேண்டிய தூக்கத்தை மேற்கொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களோ இரவு நேரத்தில் தூக்கம் வராமல் கவலைப்படுகின்றனர்.

இதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். இரவில் சிலர் தூங்குவதற்கு 1/2 மணிநேரத்திற்கு முன் சாப்பிட்டுவிட்டு, உடனே பெட்டில் படுக்க சென்றுவிடுவார்கள். ஆனால் இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற ஆசைப்பட்டால், இரவு 9 மணிக்கு மேல் ஒருசில உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இங்கு அப்படி இரவில் நல்ல தூக்கத்தைப் பெற இரவு 9 மணிக்கு மேல் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!! 

பால் 

இரவில் 9 மணிக்கு மேல் பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். பாலில் எவ்வளவு தான் புரோட்டீன், கால்சியம் இருந்தாலும், இரவில் படுக்கும் முன் குடித்தால், அதில் உள்ள லாக்டோஸ் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தி, நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் செய்துவிடும்.

பாஸ்தா 

இரவு நேரத்தில் பாஸ்தா உட்கொள்வதைத் தவிர்க்கவும். ஏனென்றால் பாஸ்தாவில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், இரவில் தூங்க முடியாது. ஆகவே இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

சாக்லேட் 

பலருக்கு சாக்லேட் மிகவும் விருப்பமான ஒன்று. இதில் சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் இருக்கிறது. ஆகவே இதனை இரவில் சாப்பிட்டால், நல்ல தூக்கத்ப் பெற முடியாது போய்விடும். இப்படி தினமும் இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாவிட்டால், உடலில் கார்டிசோல் அளவு அதிகரித்து, திசுக்கள் உடைய வழிவகுக்கும்.

பிட்சா 

இன்றைய காலத்தில் பிட்சா சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. பிட்சாவில் கார்போஹைட்ரேட், கொழுப்புக்கள், சோடியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், அவற்றை இரவு 9 மணிக்கு மேல் சாப்பிட வேண்டாம். அதை மீறியும் சாப்பிட்டால், உடல் பருமனடைந்துவிடும். பின் அவற்றை குறைப்பது சிரமமாகிவிடும்.

பச்சை மிளகாய் 

பச்சை மிளகாய் சாப்பிட்டால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும். ஆனால் அதனை பகல் நேரத்தில் சாப்பிட்டால் நல்லது. அதுவே இரவில் பச்சை மிளகாய் சேர்த்து செய்யப்படும் உணவை சாப்பிட்டால், தூக்கமின்மை ஏற்படும். பின் பகல் நேரத்தில் சோர்வுடனேயே இருக்க நேரிடும்.

இறைச்சிகள் 

இரவில் சிலர் இறைச்சியை சாப்பிடுவார்கள். இறைச்சியில் புரோட்டீன் அதிகம் உள்ளது. பொதுவாக புரோட்டீன் உள்ள உணவுகள் செரிமானமாவதற்கு அதிக அளவு எனர்ஜி தேவைப்படும். ஆனால் இரவில் அவ்வளவு ஆற்றல் கிடைக்காததால், இறைச்சியை இரவில் உட்கொண்டால், நிம்மதியான தூக்கத்தை பெற முடியாது.

வெள்ளை சாதம் 

வெள்ளை சாதத்தைக் கூட இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. இவை கூட இரவில் தூக்கத்தைக் கெடுக்கும். முக்கியமாக இரவு 9 மணிக்கு மேல் இதனை சாப்பிடவே கூடாது. இல்லாவிட்டால் தூக்கத்தை தொலைக்கக்கூடும்.

பழச்சாறு 

இரவு நேரத்தில் ஆரஞ்சு ஜூஸ், திராட்சை ஜூஸ் போன்றவற்றை குடிக்கக்கூடாது. இதில் அசிடிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி, இரவில் தூங்க முடியாமல் செய்யும். மேலும் இதில் சர்க்கரை அதிகம் இருப்பதால், இது தூக்கத்தைக் கெடுக்கும்.
Disqus Comments