வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய் முக்கியமான காரணமாக உருவெடுத்துள்ளது.
மருந்தை விட, அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும்
உடல் எடையைக் குறைப்பது, உணவுக் கட்டுப்பாடு, தேவையான கலோரிகளை உட்கொள்வது போன்ற நடைமுறைகளையே, ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தும்
இவற்றுடன் சீரான உடல் இயக்கத்தையும். அதாவது ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்காமல் உடலுக்கு அவ்வப்போது அசைவும், வேலையும் கொடுத்து வந்தால், ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு . ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களும், தங்களது முன்னோர்களுக்கு ரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் இந்த பரிந்துரைகளைக் கவனத்தில் கொள்வது நல்லது.
அவ்வப்போது குறித்த கால இடைவெளியில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்து கொள்வது மிக முக்கியம். இதன் மூலம் உடலில் ரத்த அழுத்தத்தின் நிலையை அறிந்துகொள்ள இயலும்.
உடல் எடைக்கும், ரத்த அழுத்த நோய்க்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனவே உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதிகமான உடல் எடையைக் குறைப்பதில் கவனம் தேவை. தேவையான எடையைக் குறைத்துவிடக் கூடாது.
சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் அடங்கிய உப்புக்கும், உடல் பருமனடைவதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. உடல் பருமனடைந்தால் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்வது நல்லது. ஒரு நாளைக்கு 6 கிராம் அளவுக்கும் குறைவாக சேர்த்துக்கொள்ளலாம்.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த உணவுக் கட்டுப்பாடு அவசியம் என்று ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கான உணவுக்கட்டுப்பாடு ஆய்வில் (Dietary Approach to Stop Hypertension study - DASH) கண்டறியப்பட்டுள்ளது. வழக்கமாக உட்கொள்ளும் கொழுப்புச் சத்தைவிட 35 சதவீதம் குறைவாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். வேகவைக்கப்படாத காய்கறிகளும், பழங்களும் உணவில் அதிகம் இடம்பெற வேண்டும். ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பால், நெய், தயிர், மோரைக் குறைத்தல் அல்லது தவிர்த்தல் நல்லது. முன்பே தயாரித்து, குளிர்சாதன பெட்டிகளில் வைத்திருந்து பின்னர் எடுத்துச் சாப்பிடுவது போன்ற பழக்கங்களை அறவே தவிர்க்க வேண்டும்.
பொருத்தமான, தொடர்ச்சியான உடற்பயிற்சியை செய்துவர வேண்டியது அவசியம். பிராணயாமம் என்று சொல்லப்படுகின்ற மூச்சுப்பயிற்சி, ரத்த அழுத்த நோயை முழுமையாக கட்டுப்படுத்தும் சிறப்பு வாய்ந்தது. இந்த எளிய பயிற்சியைச் செய்து வந்தாலே ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல நோய்கள் நம்மை அணுகாது.
மது, புகையிலை, கோகெய்ன் போன்ற புகையிலைப் பொருட்களை அறவே ஒதுக்க வேண்டும். ரத்த அழுத்த நோய்க்கான முழு முதல் காரணிகள் மது உள்ளிட்ட போதைப் பொருட்கள்தான். எனவே போதைப் பழக்கத்தை வைத்துக்கொண்டு, ரத்த அழுத்த நோயை நிச்சயமாக குணப்படுத்த முடியாது.
பெண்களைப் பொறுத்தவரையில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் உணவில் அதிகம் இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டாலே ரத்த அழுத்த நோயைத் தவிர்க்க முடியும் என்று பெல்ஜியத்தில் நடைபெற்ற ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை இரண்டு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினர் மக்னீசியம், மற்றும் கால்சியம் சத்துள்ள உணவுகளையும், மற்ற பிரிவினர் அது இல்லாத உணவினையும் இரண்டு வாரங்கள் உண்ணவைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் கழித்து பரிசோதனை செய்து பார்க்கும்போது கால்சியம், மக்னீசியம் சத்துள்ள உணவை உட்கொண்ட பெண்களின் ரத்தழுத்த அளவு மிகவும் சீராக இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் மற்றவற்றை விட ஆலிவ் எண்ணெயே சிறந்தது என்று பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கூடுதலாக மீன் எண்ணெயையும் சமையலில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம் என்றும் ரத்த அழுத்த நோய் தொடர்பான ஆய்வுகள் கூறுகின்றன. இவை இரண்டும் அறவே கொழுப்புச் சத்து இல்லாதவை என்பதே இதற்குக் காரணம்.
சி வைட்டமின் சத்துள்ள பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்தலாம். ஏ மற்றும் ஈ வைட்டமின்களுக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் குணம் இல்லை.
ரத்த அழுத்த நோய்க்கு மருத்துவ சிகிச்சைகளை விட, மனதை இலகுவாக்க உதவும் தியானப் பயிற்சியே சிறந்த மருந்து என்பதை சர்வதேச மருத்துவ ஆய்வுகள் உறுதியாகக் கூறுகின்றன.
ரத்த அழுத்த நோயைக் கட்டுப்படுத்த, அல்லது குணப்படுத்த மருந்துகளைவிட அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்துகொள்வதும் உணவுக் கட்டுப்பாடும், உடல் மன பயிற்சியும் அவசியம் என்பதை, மேலே உள்ள பரிந்துரைகள் நமக்கு உணர்த்துகின்றன.
எனவே, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருந்துகளைத் தேடி ஓடாமல், தங்கள் மனதையும் உடலையும் செம்மைப்படுத்தும் முயற்சியை முதலில் தொடங்கலாமே.