.

Monday, September 29, 2014

முகத்திற்கு வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் போது பின்பற்ற வேண்டியவைகள்!!!

வெள்ளரிக்காய் மாஸ்க்

அழகை அதிகரிக்க பணத்தை செலவழித்து அழகு நிலையங்களுக்குச் சென்று ஃபேஷியல், ஃபேஸ் பேக் என்று பலவற்றை செய்து வருவோம். அப்படி ஒருமுறை அழகு நிலையங்களுக்குச் சென்று கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிக்க ஆரம்பித்தால், அதனை வாழ்நாள் முழுவதும் சீரான இடைவெளியில் செய்து வர வேண்டும். இல்லாவிட்டால், சருமமானது சுருக்கத்துடன், சோர்வாக, பொலிவிழந்து காணப்பட ஆரம்பிக்கும்.
அப்படி அழகு நிலையங்களுக்குச் சென்று பணத்தை செலவழித்து செல்வதை விட, வீட்டிலேயே உட்கார்ந்து பணம் அதிகம் செலவழிக்காமல் வெறும் இயற்கைப் பொருட்களாலேயே சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் பொலிவோடு வைத்துக் கொள்ளலாம்.

வெள்ளரிக்காய் மாஸ்க் போடும் முன், முகத்தை நன்கு நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக முகத்திற்கு க்ரீம் போட்டிருந்தால், அதனை முற்றிலும் நீக்கி விட வேண்டும். அதிலும் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்துக் கொண்டு, முகத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீக்கிவிடும்.

வெள்ளரிக்காய் மாஸ்க்கின் மூலம் பொலிவான சருமம் பெற வேண்டுமானால், புதினாவை நிச்சயம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் புதினாவானது முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கும். எனவே வெள்ளரிக்காய் மாஸ்க் செய்யும் போது, அத்துடன் புதினாவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின்பு வெள்ளரிக்காயை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதனால் மாஸ்க் போடும் போது வசதியாக இருக்கும். குறிப்பாக இத்துடன் புதினா சேர்த்துக் கொள்ளவும்.

அரைத்த வெள்ளரிக்காயுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

வெள்ளரிக்காய் மாஸ்க் தயார் ஆன பின்பு, அதனை முகத்தில் தடவ வேண்டும். ஆனால் கண்களைச் சுற்றி தடவக்கூடாது. ஏனெனில் இதனால் கண்களுக்கு பாதிப்பு கூட ஏற்படலாம். இப்படி முகத்திற்கு மாஸ்க் போட்ட பின்னர், கண்களின் மேல் வெள்ளரிக்காய் துண்டுகளை வைத்து, 25 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவிட வேண்டும்.
Disqus Comments