இன்றைய காலக்கட்டத்தில் அலுவலகம் செல்லும் பலர் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகின்றனர். எந்த ஒரு உணவையும் எதனால் உண்கிறோம் என்ற அறிவு நம் அனைவருக்கும் இருக்க வேண்டும்.
அதனுடன் அதை எப்பொழுது உண்ண வேண்டும் என்ற அறிவும் இருத்தல் வேண்டும். கண்ட உணவை கண்ட வேளையில் எடுத்துக் கொண்டால் பிரச்சனைதான். அதுவும் அலுவலகத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு பல வித பிரச்சனைகள் வருகின்றன.
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பதால் உடலின் செரிமான தன்மை குறைந்து உடலுக்கு தேவையான சக்தி கிடைக்காமல் போகின்றது. இதனால் உடலுக்கு பல வித பிரச்சனைகள் உண்டாகின்றது. சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கையை வாழ முடியும்.
அந்த வாழ்க்கையை வாழ தேவை ஆரோக்கியம். அந்த ஆரோக்கியத்தை அடைய சத்தான உணவு தேவை. சத்தான உணவுகள் எவை என்பதை அறிந்து கொள்வதோடு அதை உண்ணவும் வேண்டும். பலர் எல்லாம் தெரிந்தாலும் அலட்சியத்துடன் வாழ்கின்றனர். இதோ இங்கு வேலைக்கு செல்பவர்களுக்கான சில சத்துள்ள உணவுகளின் பட்டியல்.
சத்துள்ள உணவுகளின் பட்டியல்
பருப்புகளையும் விதைகளையும் அதிக அளவில் உண்ண வேண்டும். அதிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் பாதாம், முந்திரி, பரங்கி விதை போன்றவற்றில் அதிக அளவில் புரதமும், மக்னீசியம், வைட்டமின் பி, மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் சூரிய காந்தி விதையிலும் அதிக அளவில் இருப்பதால் அவற்றை அதிக அளவில் எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இவை இரத்தத்தில் உள்ள சக்கரை அளவை குறைக்கும். காலை உணவுடன் இவற்றை எடுத்துக் கொண்டால், அதிக அளவு உடலுக்கு தேவையான சக்தியை பெற முடியும்.
பச்சை காய்கறிகளும்.. குளிரூட்டப்பட்டு துண்டாக்கப்பட்ட இறைச்சியும்..
அதிக அளவில் பச்சைக் காய்கறிகளை எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் அதிக அளவு சக்தி கிடைக்கும். செலரி, ப்ராக்கோலி போன்றவற்றில் அதிக அளவு பச்சை தன்மைக் குறிய சத்துக்கள் உள்ளதால் இரத்தத்தில் உள்ள சக்கரை தன்மையை குறைக்கும். வான்கோழி, பாலாடை கட்டி போன்றவற்றில் அதிக அளவு புரதச்சத்துக்கள் உள்ளதால், இவற்றை உண்பதால் உடலுக்கான வலிமையை பெற முடியும்.
தினமும் முட்டை சாப்பிடவும்
முட்டையில் அதிக அளவில் புரதம் உள்ளது. திசுக்களில் உள்ள நைட்ரோஜனை அதிகப்படுத்துவதுடன் உடலின் அதிக அளவு கலோரியை குறைக்கவும் முட்டை உதவுகின்றது. மேலும் இவற்றில் அதிக அளவில் வைட்டமின் டி சத்து உள்ளது. முட்டை தேவையற்ற கொழுப்பின் கெடுதலில் இருந்து நம்மை காக்கவும் செய்கின்றது.
ஊலாங் டி
சைனா டீயான ஊலாங் டீ, இரத்த சர்க்கரையையும், கார்டிசால் அளவையும் குறைக்கும். இதனால் உடலில் கொழுப்பு தேங்குவதை கட்டுப்படுத்த முடியும். முக்கியமாக அலுவலகம் செல்பவர்கள் இடை இடையிடையே இந்த டீயை அருந்தி வந்தால் நல்லது.