.

Wednesday, August 20, 2014

வெள்ளையாக வேண்டுமா? அப்ப அதுக்கு பாதாம் தான் பெஸ்ட்...

வெள்ளையாக வேண்டுமா?

அனைவருக்குமே நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் பல்வேறு அழகு சாதனப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம்.
இதனால் சருமத்தின் நிறம் அதிகரிக்கிறதோ இல்லையோ, சருமத்தில் மட்டும் எண்ணற்ற பிரச்சனைகள் தவறாமல் ஏற்படுகிறது. எனவே எப்போதும் அழகை அதிகரிக்க செயற்கை வழிகளை முயற்சிப்பதை விட, இயற்கை வழிகளை முயற்சித்தால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதுடன், சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

அப்படி சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும் இயற்கை பொருட்களில் ஒன்று தான் பாதாம். பாதாம் விலை அதிகமாக இருந்தாலும், இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். அதையே சருமத்தில் பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும். இங்கு அந்த பாதாமை எப்படியெல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்.

பாதாம் மற்றும் பால் பேக்

 2 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடியை, பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் போது சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

பாதாம், முட்டை மற்றும் எலுமிச்சை

1 டீஸ்பூன் பாதாம் பொடியில், முட்டையின் வெள்ளைக் கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தின் நிறம் விரைவில் அதிகரிக்கும்.

பாதாம் எண்ணெய் மசாஜ்

பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வந்தால், உடலில் இரத்த ஓட்டத்தின் அளவு அதிகரித்து, சருமம் ஆரோக்கியமாகவும், பொலிவுடனும் இருக்கும்.

பாதாம் மற்றும் தேன்

பாதாமை நீரில் இரவில் படுக்கும் போது ஊற வைத்து, காலையில் எழுந்து அதன் தோலை நீக்கிவிட்டு அரைத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.

பாதாம்-ஓட்ஸ் ஃபேஸ் பேக்

1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பொடி சேர்த்து, அத்துடன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் சேய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். அதிலும் இந்த முறையை வறட்சியான சருமம் உள்ளவர்கள் பயன்படுத்துவது சிறந்தது.

Disqus Comments