.

Sunday, August 24, 2014

பைல்ஸ் என்னும் மூல நோய்க்கான சில ஆயுர்வேத சிகிச்சை!


ஹெமோராய்ட்ஸ் என அழைக்கப்படும் மூல நோய் என்பது ஆசன வாய் பகுதியை சுற்றி ஏற்படும் சிறிய வீக்கங்களாகும். மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் கழிக்கும் போது வலி உண்டாகும். அதனுடன் சேர்த்து இரத்த கசிவும் ஏற்படும். பொதுவாக நடுத்தர வயதில் தான் மூல நோய் வளர்ச்சி காணப்படும். ஆனால் எதுவும் உறுதியாக சொல்வதற்கு இல்லை. நடுத்தர வயதிற்கு முன்பும் பின்பும் மூல நோய் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதற்கான சிகிச்சைக்கு ஆயுர்வேதம் பெரிதும் கை கொடுக்கிறது. மிகவும் நம்பிக்கை தரும் பலனையும் அளிக்கிறது.

ஆயுர்வேதம் என்பது ஹிந்து பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறை என்பது நம் அனைவருக்கும் தெரியும். பண்டைய காலம் முதலே அது நம் இந்திய கண்டத்திற்கு சொந்தமானதாக விளங்குகிறது. எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லாமல் இது அளிக்கும் பல பயன்களை பற்றி நமக்கு தெரிவதால் இவ்வகையான சிகிச்சை மிகவும் புகழ் பெற்று வருகிறது. குறிப்பாக மூல நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சை சிறந்த பயனை அளிப்பதை அனைவரும் உணர்ந்தனர். மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை என வரும் போது வீட்டு சிகிச்சைகள் முக்கிய பங்கை வகிக்கிறது.

மூல நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் மலச்சிக்கல் ஏற்படுத்தும் செரிமான அமைப்பும் ஒன்றாகும். இதனால் மலம் கழித்தல் கடினமாகும். இதனால் மேலும் பிளவுகள் உண்டாகும். இதனால் தான் ஆயுர்வேதமும் உங்கள் வாழ்க்கை முறையில் மாற்றங்களை எதிர்ப்பார்க்கிறது. மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சையில் வீட்டு சிகிச்சையும் வாழ்வு முறையில் மாற்றங்களும் உள்ளடங்கியிருப்பதால், அதனை கடைப்பிடிப்பது சுலபமாகி விடும்.

நார்ச்சத்து உட்கொள்ளல்

ஆரோக்கியமான செரிமான அமைப்பை பெறுவதற்கு நார்ச்சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வது மிகவும் முக்கியமாகும். மூல நோய்க்கு ஆயுர்வேத சிகிச்சையை தொடங்கும் போது, முதலில் வலியுறுத்துவதே நார்ச்சத்து அடங்கியுள்ள உணவுகளை உட்கொள்வது தான். இதில் முழு தானியங்கள், நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் அடங்கும்.

மோர்

உப்பு மற்றும் எலுமிச்சை பிழியப்பட்ட மோரை பருகி வர வேண்டும்.

இஞ்சி 

இஞ்சி, தேன், சாத்துக்குடி ஜூஸ் மற்றும் புதினா கலந்த தண்ணீர் குடித்து வருவது நல்லது.

சீரகம் 

அரை டீஸ்பூன் சீரகம் கலந்த ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து வரவும்.

வெங்காயம்

 வெங்காய சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும்.

சரியான நிலை

மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

வெங்காயம் 

வெங்காய சாறு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் குடிக்க வேண்டும்.

வேப்பிலை கஷாயம்

வேப்பிலை சாற்றுடன் தேன் மற்றும் அரை கப் மோர் கலந்த வேப்பிலை கஷாயம்.

துளசி

துளசி ஊற வைக்கப்பட்ட தண்ணீர். ஊற வைத்த 30 நிமிடங்கள் கழித்து குடிப்பது சிறந்தது.

அத்திப்பழம்

நன்கு உலர வைத்த அத்திப்பழத்தை, ஒரு நாளைக்கு இரண்டு முறை உட்கொள்ளவும்.

வெளிப்புற மருந்துகள்

மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சையில், வீட்டு சிகிச்சை என்றால் உட்கொள்ள கூடிய பொருட்கள் மட்டும் அல்ல. மாறாக ஆய்ன்மண்ட் போன்ற வெளிப்புற மருந்துகளும் அதில் அடக்கம். * பாதிப்புள்ள இடத்தில் விளக்கெண்ணெய்யை தடவி, பின் வெதுவெதுப்பான ஒத்தடம் அளிப்பது. * வீங்கிய பகுதியில் பேக்கிங் சோடா தடவுதல்.

தண்ணீர் பருகுதல் 

உடலில் நீர்ச்சத்து குறைந்தால் பொதுவாகவே மலச்சிக்கல் உண்டாகும். இதனால் மூல நோய் ஏற்படும். மூல நோயை தவிர்க்க போதிய அளவிலான நீரை பருக வேண்டும். ஒரு வேளை, மூல நோயால் அவதிப்பட்டு வந்தாலும் கூட தண்ணீர் குடிப்பது முக்கிய பங்கை வகிக்கிறது. தண்ணீர் என்பது உடலுக்கு பல விதமான பயனை அளிக்க கூடிய பானமாகும். மேலும் அது உங்கள் செரிமான அமைப்பை சுத்தமாக வைத்திருக்கும். அதனால் மூல நோய்க்கு போதிய அளவிலான தண்ணீர் பருக வேண்டும் என்று மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை கூறுகிறது.

அளவுக்கு அதிகமான மசாலாக்களை தவிர்க்கவும்

சரியான அளவிலான மசாலாவை எடுத்துக்கொள்வது அனைவருக்கும் நல்லதே. ஆனால் அதுவே அளவுக்கு அதிகமாக செல்லும் போது தான் பிரச்சனைகள் பிறக்கிறது. மூல நோயால் அவதிப்படுபவர்கள், கூடுதல் மசாலா கலந்த பொருட்களை உட்கொண்டால், மேலும் சிக்கல்கள் உண்டாகும். இது நோயை மேலும் கடுமையாக்கும். அதனால் மசாலா உட்கொள்ளல் அளவை அளவாகவே வைத்துக் கொள்ள வேண்டும்.

வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம்

மூல நோயில் இருந்து உடனடி நிவாரணம் பெற, வெதுவெதுப்பான நீரில் ஒத்தடம் கொடுக்கலாம். சிறப்பான விளைவிற்கு, வெதுவெதுப்பான நீரை கொண்ட சட்டியில் அமர்ந்து கொள்ளலாம்.

உடற்பயிற்சி 

போதிய உடற்பயிற்சி இல்லாத காரணத்தினாலும் மலச்சிக்கல் ஏற்படும். முனைப்புடனான வாழ்க்கை முறையை வாழ்பவர்களுக்கு ஆரோக்கியமான செரிமான அமைப்பு இருக்கும். இதனால் மூல நோய் ஏற்படும் அபாயம் குறைவே. மூல நோய்க்கான அறிகுறிகள் இருப்பவர்கள் உடற்பயிற்சியில் ஈடுபட்டால், செரிமானத்திற்கு உதவி புரிந்து, அசௌகரியத்தை நீக்கும். மூல நோய்க்கான ஆயுர்வேத சிகிச்சை, அதன் அறிகுறிகளை நீக்க உதவுவதோடு மட்டுமல்லாமல் அதனை கட்டுப்பாட்டில் வைக்கவும் செய்யும். இதனால் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லாமல் போகும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் சரியானதை சாப்பிட்டு முனைப்புடன் செயல்படுவது.
Disqus Comments