'காது கொடுத்துக் கேட்டேன், ஆஹா குவாகுவா சத்தம்', எனக் காவல்காரன் படத்தில் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தோன்றும் ஒரு பாடல் காட்சி உண்டு. இனி ஆண்கள், காது கொடுத்து மட்டும் கேட்க வேண்டியதில்லை. குழந்தை அசைவதை நேராகவே உணரலாம்.
கருவுற்று, வயிற்றுக்குள் சிசு மெல்ல மெல்ல வளர்வதும் அதை உணர்வதும் இதுநாள் வரை பெண்களுக்கே மட்டுமே உரித்தான அனுபவமாக இருந்தது. ஆனால், இப்போது ஆண்களுக்கும் இந்த அனுபவம் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பட்டையை அணிந்துகொண்டு வருங்கால அப்பாக்கள் எப்படியெல்லாம் அனுபவிக்கிறார்கள் என்று பாருங்கள்.