.

Wednesday, July 16, 2014

சர்க்கரை நோய்க்கு மாற்றுத் தீர்வு என்ன?


எனக்கு நீரிழிவு நோய் உள்ளது. தற்போது 66 வயது ஆகிறது. பிராஸ்ட்டேட் சுரப்பி வீக்கம் அடைந்துள்ளது. PSA சுரப்பி 13.5 இருக்கிறது. கடந்த மாதம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்தேன், அது 400 இருந்தது. மருந்து சாப்பிட்டு வருகிறேன். இதற்கு ஆயுர்வேதத் தீர்வு ஏதாவது உண்டா?

பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்

மருந்தைச் சாப்பிட்டுவிட்டு 3 மாதங்கள் கழித்து பரிசோதிக்கவும். புற்று போன்ற நிலை இருந்தால் மிகவும் அதிகமாக PSA கூடியிருக்கும். இது வயதில் வரும் வீக்கத்தால் ஏற்பட்ட அளவு என்றே நினைக்கிறேன். மருந்தைச் சாப்பிட்ட பிறகு, மீண்டும் ஒருமுறை பரிசோதிக்கவும். 

தேவைப்பட்டால் Biopsy எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சாப்பிட்ட மருந்து நல்ல மருந்துதான். ஆனால் சம்பிரதாயமாகக் கபத்தால் அபான வாயு அடைக்கப்பட்டுள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு வருணதி கஷாயம், சந்திரபிரபா மாத்திரை, சுகுமார கிருதம் போன்றவற்றை நீங்கள் சாப்பிட்டு வர வேண்டும். மூன்று மாதச் சர்க்கரை அளவு (HbA1C) பார்த்து, அதை 7க்குக் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், சிறுநீர் பழுப்பு அணுக்கள் வரலாம்.

தங்களுடைய சர்க்கரை கட்டுப்பாடு போதாது, நீங்கள் இன்னும் நன்றாகக் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். அதற்கு நிசாகதகாதி கஷாயம், கதக கதிராதி கஷாயம் 25 மி.லி. வீதம் எடுத்து 200 மி.லி. தண்ணீர் சேர்த்துத் தினசரி இரண்டு வேளை உணவுக்கு முன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

பழம் என்று எடுத்துக்கொண்டால் பாதி ஆப்பிள், ஒரு கைத்துண்டு மாதுளை, கொஞ்சம் பப்பாளி, நாவல் பழம், தர்ப்பூசணி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மாம்பழம், பலாப்பழம் அறவே வேண்டாம்.

நீங்கள் வெந்தயம் சாப்பிடுவதில் தவறில்லை. 20 நிமிடமாவது தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

நன்றி  ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் எல். மகாதேவன்

நன்றி: தி இந்து
Disqus Comments