.

Friday, June 6, 2014

மாதவிடாய் நிற்கும் காலத்தில் எடை அதிகரிப்பும் அதை தடுக்கும் வழிமுறைகளும்


பெரும்­பா­லான பெண்­க­ளுக்கு மாத­விடாய் நிற்கும் காலங்­க­ளிலும் அதைத் தொடர்ந்து மாத­விடாய் முற்­றாக நின்ற பின்­னரும் எடை அதி­க­ரிக்­கவே செய்­கி­றது. இடை அழ­கி­யாக இருந்­த­வர்கள் சள்ளை தொங்கும் குண்டுப் பீப்­பாய்­க­ளாக மாறு­வார்கள். இடுப்பில் மட்­டு­மின்றி வயிறும் பெரி­தாகும். அன்ன நடை நடந்த பெண்கள் ஆயாச நடையில் அரங்கி அரங்கி நடப்­பார்கள். இது உங்­க­ளுக்கும் வர­வேண்­டுமா?மாத­விடாய் பொது­வாக 50ற்கு சற்றுப் முன் பின்­ன­ராக நின்று போகி­றது. 50 முதல் 59 வய­து­வ­ரை­யான பெண்­களில் 30 சத­வி­கி­த­மா­ன­வர்­களின் எடை அதி­க­ரிக்­கி­றது. சாதா­ர­ண­மான அதி­க­ரிப்பு உள்­ள­வர்­க­ளாக (Overweight) மட்­டு­மின்றி அதீத எடை (Obesity) உள்­ள­வர்­க­ளா­கவும் அவ் வயதுப் பெண்கள் மாறு­வது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

அவ்­வா­றாயின் மாத­விடாய் நின்ற பெண்­களில் எடை அதி­க­ரிப்­பது நிய­தியா என்று கேட்டால். இல்லை என்றே சொல்­லலாம். போஷாக்­கான உணவு முறை­க­ளையும் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறை­யையும் கடைப்­பி­டித்தால் அந்­நே­ரத்­திலும் எடை அதி­க­ரிப்பைத் தடுக்க முடியும்.

ஏன் அதி­க­ரிக்­கி­றது

மாத­விடாய் நிற்கும் போது பெண்­களில் உட­லி­லுள்ள பெண் ஹோர்­மோ­னான ஈஸ்ட்­ரோஜன் அள­வு­களில் வீழ்ச்சி ஏற்­ப­டு­கி­றது. இந்த மாற்­ற­மா­னது உடலின் இயக்­கத்தின் வேகத்தைக் குறைத்து சோம்­பலைக் கொண்டு வரு­வ­­துடன் அதி­க­மாக உண்­ணவும் வைக்­கி­றது என எலி­களில் செய்­யப்­பட்ட ஆய்வு ஒன்று கூறு­கி­றது. இது பெண்­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக இருக்­கலாம்.

அதே­போல ஈஸ்ட்­ரோஜன் அளவு குறை­யும்­போது உடலின் வளர்­சிதை மாற்ற விகிதம் தாழ்ச்­சி­யு­று­கி­றதாம்.

மாத­விடாய் நின்ற பெண்­களின் சில பிரச்சினை­க­ளுக்­காக ஈஸ்ட்­ரோஜன் மாத்­தி­ரை­களை மருந்­தாகக் கொடுக்­கும்­போது அவர்­க­ளது உடலின் வளர்­சிதை மாற்ற விகிதம் அதி­க­ரிப்­பது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் அத்­த­கைய ஹோர்மோன் மாற்றம் ஏற்­ப­டும்­போது உட­லா­னது மாப்­பொ­ரு­ளையும் குளுக்­கோ­சையும் பயன்­படுத்தும் ஆற்றல் குறை­கி­றது. இதனால் அவை உடலில் கொழுப்­பாக சேமிக்­கப்­பட்டு உடை அதி­க­ரிக்­கி­றது என்­கி­றார்கள்.

மாத­விடாய் நிற்கும் கால எடை அதி­க­ரிப்­பிற்கு ஹோர்மோன் மாற்­றங்கள் ஒரு கார­ண­மாகச் சொல்­லப்­பட்­ட­போதும் அது தவிர்ந்த வேறு பல கார­ணங்­களும் இருக்­கின்­றன. வய­தா­கும்­போது உடல் உழைப்புச் செயற்­பாட்­டிலும் வாழ்க்கை முறை­யிலும் ஏற்­படும் மாற்­றங்கள் முக்­கி­ய­மா­னவை.

உதா­ர­ண­மாக வய­தா­கும்­போது தசை­களின் திணிவு குறை­கி­றது. அதே நேரம் அதி­லுள்ள கொழுப்பின் அளவு அதி­க­ரிக்­கி­றது. தசைத் திணிவு குறை­யும்­போது அவற்றால் முன்­னரைப் போல கலோரிச் சத்தை பயன்­ப­டுத்த முடி­வ­தில்லை. ஆனால் இவை தவிர்க்க முடி­யாத விட­யங்கள் அல்ல. உட்­கொள்ளும் உணவைச் சற்றுக் குறைத்து உடற் செயற்­பாட்டை அதி­க­ரிப்­பதன் மூலம் எடை ஏறு­வதை நிச்­ச­யமாகக் குறைத்துக் கொள்ள முடியும்.

வேறு வார்த்­தை­களில் சொல்­வ­தானால் இள வயதில் உட்­கொண்­டது போன்ற அள­வு­களில் உண­வு­களைத் தொடர்ந்து உட்­கொண்­ட­படி உட­லுக்கு போதி­ய­ளவு வேலையைக் கொடுக் காவிட்டால் எடை அதி­க­ரிக்­கவே செய்யும்.

பரம்­பரை அம்­சங்­களும் அந்­நேர எடை அதி­க­ரிப்­பி­ற்கு கார­ண­மா­கலாம். உதா­ர­ண­மாக உங்கள் அம்மா அல்­லது அப்பா தொந்­தியும் சள்­ளை­யு­மான பருத்த உடல்­வாகு உள்­ள­வ­ரானால் நீங்­களும் அவ்­வாறு ஆவ­தற்­கான சாத்­தியம் அதி­கமே.

மன உளைச்­சல்­களும் கார­ண­மா­கலாம். அந்த வயதில் பிள்­ளைகள் உங்­களை விட்டுப் பிரிய நேரலாம், கணவன் மர­ண­ம­டை­யலாம், மண­மு­றிவு ஏற்­ப­டலாம். இத்­த­கைய சம்­ப­வங்­களால் மன உளைச்­சல்கள் ஏற்­ப­டலாம். அதன் கார­ண­மாக ஒருவர் தனது உணவு முறையில் அக்­கறை செலுத்­தாது விடு­­வார்கள். மனம் தளர்ந்து சுறு­சு­றுப்­பாக இயங்­காது சோர்ந்து கிடக்­கவும் செய்வர். இவற்றால் எடை அதி­க­ரிக்கும்.

60 சத­வி­கி­த­மா­ன­வர்கள் தங்கள் முது­மையில் போது­மான உடற்­ப­யிற்சி செய்­வ­தில்லை என அறிக்­கைகள் கூறு­கின்­றன. தொடர்ந்து வயது அதி­க­ரிக்­கும்­போது உடல் இயக்­கத்தில் குறை­பாடும் அதி­க­ரிக்­கி­றது. இதைத் தவிர்த்து உள பூர்­வ­மாக உடற் பயிற்­சி­களில் ஈடு­ப­டு­வது அவ­சி­ய­மாகும்.

எடை அதி­க­ரிப்பால்

ஏற்­படும் பாதிப்­புகள் எவை

உடல் எடை­யா­னது தேவைக்கு அதி­க­மாக அதி­க­ரிக்கும் போது உடலில் பல்­வேறு சிக்­கல்­களும் நோய்­களும் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது.

* பிரஸர் அதி­க­ரிக்கும்,

* நீரி­ழிவு நோய் வரு­வ­தற்­கான சாத்­தியம் அதி­க­மாகும்.

* மார­டைப்பு நோய்க்­கான சாத்­தி­யமும் அதி­க­மாகும்.

* அதை­போல மூட்டு வருத்­தங்­க­ளுக்­கான சாத்­தியம் அதி­க­ரிக்கும்.

குண்­டான பலர் முழங்கால் மூட்டில் தேய்வு வீக்கம் என அவ­திப்­ப­டு­வதை நீங்­களே அவ­தா­னித்­தி­ருப்­பீர்கள்.

எடை அதி­க­ரிப்­பா­னது கொழுப்பு அதி­க­ரிப்­ப­தோடு தொடர்­பு­டை­ய­து­தானே. இந்த கொழுப்­பா­னது வயிற்­றறைப் பகு­தியில் அதி­க­மா­கவே சேரும். அதனால் வயிறு பானை­போ­லாகும். வயிற்­றறைச் சுற்­ற­ள­வா­னது 35 அங்­கு­லத்­திற்கு அதி­க­மானால் அது மேலே கூறி­யது போன்ற பல­வித ஆபத்­துக்­களை ஏற்­ப­டுத்தும் என்­பது தெரிந்­ததே. எனவே அதைத் தவிர்க்க வேண்டும்.

எடை அதி­க­ரிப்­பதைத் தடுப்­பது எப்­படி?

எடை அதி­க­ரிப்தைத் எடையைக் குறைப்­ப­தற்கு மாயா­ஜால முறைகள் எதுவும் கிடை­யாது. மருத்­து­வர்கள் கிறுக்­கித்­தரும் மாத்­தி­ரை­களோ, ஊட­கங்­களில் விளம்­ப­ரப்­ப­டுத்தும் மருந்­து­களோ, கிறீன் ரீயோ, கொள்ளுச் சாப்­பி­டு­வது போன்­ற­வையோ மட்டும் உதவப் போவ­தில்லை.

உங்கள் முயற்­சிதான் அதி­முக்­கிய விட­யாகும்.

சோர்ந்­தி­ருக்­கா­தீர்கள்

கூடி­ய­வ­ளவு உடல் உழைப்பில் ஈடு­ப­டுங்கள். சோர்ந்து கிடக்­கா­தீர்கள். நடந்தால் கால் உளைவு கை உளைவு என்று சாட்டுச் சொல்­லா­தீர்கள். முயற்­சியில் இறங்­குங்கள். அந்த வய­திற்கு ஏற்­றது நடைப் பயிற்சி. வாரத்தின் பெரும்­பா­லான நாட்­களில் 30 நிமி­டங்­க­ளுக்கு குறை­யாது கை கால்­களை விசுக்கி வீசி நட­வுங்கள். துள்ளல் நடை நீச்சல் பயிற்­சி­களும் நல்­லது.

வீட்டுத் தோட்டம் செய்­யுங்கள். மாடிப்­ப­டி­களில் ஏறி இறங்­குங்கள்.

இவற்றைத் தவிர நாளாந்த வீட்டு வேலை­க­ளிலும் ஈடு­ப­டுங்கள். கூட்­டுங்கள் கழு­வுங்கள், தூசு தட்­டுங்கள்.

உணவில் கவனம் எடுங்கள்

சாப்­பி­டுங்கள் பட்­டினி கிடக்­கா­தீர்கள். உணவைத் தவிர்க்­கா­தீர்கள்

ஆனால் உணவின் அள­விலும் எத்­தகை உணவு உண்­பது என்­ப­திலும் மாற்­றங்கள் செய்­யுங்கள். எண்ணெய், பொரியல், கொழுப்பு போன்­றவற்றை மிகவும் குறை­யுங்கள். சோறு, இடி­யப்பம், புட்டு, பாண் போன்ற மாப்­பொருள் உணவுகளை அளவோடு உண்ணுங்கள். அல்லது சற்றுக் குறையும். அதற்கான மொத்த உணவின் அளவைக் குறைக்க வேண்டியதில்லை. காய்கறிகள் பழவகைகளை அதிகம் சேருங்கள்.

அதே போல அருந்தும் பானங்களும் அதிக கலோரி வலு அற்றதாக இருக்க வேண்டும். மென்பானங்கள், இனிப்பூட்டிய பழச் சாறுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நாளாந்த அருந்தும் தேநீர் கோப்பி போன்றவற்றிக்கு சேர்க்கும் சீனியின் அளவையும் குறைப்பது அவசிய மாகும்.

தண்ணீர், மோர். அதிகம் இனிப்பு சேர்க்காத உடன் பிழிந்த பழச்சாறுகள், இளநீர் போன்றவற்றை கூடியளவு உப யோகியுங்கள்.

இவற்றைக் கடைப்­பி­டித்தால் மாத­விடாய் நின்ற பின்­னரும் மோக­வைக்கும் கும­ரி­போல உங்கள் உடல் வனப்பைப் பேணிக்­கொள்­ளலாம்.

Disqus Comments