நம் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் ஆதி காலத்திலிருந்தே உள்ளது. டைனிங் டேபிளில் ஹாயாக உட்கார்ந்து டி.வி. பார்த்துக் கொண்டோ அல்லது படுக்கையில் உட்கார்ந்து கொண்டோ சாப்பிடுவது வசதியாக இருப்பது போல் நமக்குத் தோன்றலாம்.
ஆனால், கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு கட்டாந்தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது அழகு மட்டுமல்ல, ஆரோக்கியமும் கூட என்பது நம் முன்னோர்கள் கண்டறிந்த உண்மை! தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது மிகவும் நல்லது என்பதற்கான சில காரணங்கள் இதோ…
செரிமான சக்தி அதிகரிக்க…
நாம் கால்களை குறுக்காக மடக்கி, சம்மணம் போட்டு தரையில் உட்காரும் போது, இயல்பாகவே ஒரு ஆசன நிலைக்கு வந்து விடுகிறோம். இதற்கு ‘சுகாசனா’ அல்லது ‘பாதி பத்மாசனா’ என்று பெயர். இந்த போஸில் அமைதியாக சாப்பிட உட்காரும் போதே, செரிமானத்திற்குத் தயாராகுமாறு மூளைக்குத் தகவல் சென்று விடுகிறது. சாப்பாட்டுத் தட்டு தரையில் இருப்பதால், நாம் இயல்பாகவே குனிந்து நிமிர்ந்து சாப்பிடுகிறோம். இதனால், வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிந்து அமிலம் சுரந்து, நாம் சாப்பிடும் உணவை செரிக்க வைக்கிறது.
உடல் எடையைக் குறைக்க…
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால், நாம் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பதையும் மூளை தெளிவாக நமக்குச் சொல்லி விடுகிறது. இதனால் நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. தேவையான உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும் இது வழி வகுப்பதால், நம் உடல் எடையும் தானாகக் குறையத் தொடங்குகிறது.
மிகவும் இலகுத் தன்மையாளராக மாற்ற…
‘பத்மாசனா’ நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றியுள்ள தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன. மேலும் இந்த ஆசன நிலையில் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால், நாம் திருப்தியாக சாப்பிட முடிவதோடு நம் செரிமான சக்தியும் அதிகரிக்கிறது.
மன நிம்மதியுடன் சாப்பிட…
நாம் ஒரு குடும்பமாக தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, ஒரு மன அமைதி கிடைக்கிறது. மேலும், நல்ல உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடவும் இது உதவுகிறது.
குடும்பப் பிணைப்பை அதிகரிக்க…
ஒரு நாளில் ஒரு முறையாவது குடும்பத்தோடு சேர்ந்து சாப்பிடுவது நல்லது என்று சொல்வார்கள். அப்போது சில நல்ல, முக்கியமான முடிவுகளும் எடுக்கப்படுவதுண்டு. அதுவும் தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, குடும்பத்தினருக்கு இடையேயான பிணைப்பு இன்னும் அதிகரிக்கவே செய்யும்.
உடல் தோரணை முன்னேற…
நாம் தரையில் நேராக அமர்ந்து சாப்பிடும் போது, முதுகெலும்பும் தோள்களும் சீரான நிலையில் இருக்கின்றன. இதனால், தாறுமாறான போஸில் உட்காருவதால் ஏற்படும் வலிகளும், அசதியும் பறந்து விடுகின்றன.
நீண்ட நாள் வாழ…
தரையில் அமர்ந்து எழுந்திருப்பதால், நம் உடலின் வலிமை அதிகரித்து ஆயுளும் கூடுவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
முழங்கால்கள், இடுப்பெலும்புகள் வலுப்பெற…
‘பத்மாசனா’ நிலையில் இருக்கும் போது, நம் உடலின் ஒவ்வொரு பாகமும் பலனடைகிறது. குறிப்பாக, தரையில் அமர்வதால், முழங்கால் மூட்டுக்களும், இடுப்பெலும்புகளும் வலுவடைகின்றன. அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால், இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.
மனதைத் தளர்த்தி, நரம்புகளை சாந்தப்படுத்த…
தரையில் உட்கார்ந்து சாப்பிடும் போது, நாம் நல்ல உணவைத் தேர்ந்தெடுத்து சாப்பிடுவதால், இது மனதை தளர்த்தி நரம்புகளை சாந்தப்படுத்த உதவுகிறது. மேலும் இதனை ஆயுர்வேத மருத்துவமும் வலியுறுத்துகிறது.
தை பலப்படுத்த…
டைனிங் டேபிளில் அமரும் போது, புவி ஈர்ப்பு விசை காரணமாக கால்களுக்கெல்லாம் இரத்தம் பாய்கிறது. ஆனால், தரையில் உட்காரும் போது இது குறைந்து, இரத்தஓட்டம் இதயத்தில் மட்டுமே சீராக இருப்பதால், நம் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.