.

Saturday, May 24, 2014

சொரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் பற்றிய தகவல்கள்



சோரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் முதலில் சிலருக்குத் தலையில் பொடுகுபோல ஆரம்பிக்கும். பொடுகு போலவே தோற்றமளித்து பின்னர் மீன் செதில் போல கொட்டத் தொடங்கும். அது மினுமினுப்புடனும் இருக்கும்.



சிலருக்கு முழங்கை, முழங்காலில் வரும். தடிப்புடன் கூடிய சிவந்த படை போல இது இருக்கும். மற்றொரு வகை சோரியாசிஸ், உடல் முழுவதும் பொட்டு அளவிலும், கோலப்புள்ளி, பைசா நாணயம், ஒரு ரூபாய் நாணயம் அளவில் முதுகு, முன்புறத்தில் வெண்மையான நிறத்தில் செதில்படையாக உருவாகும். தொண்டைக் கழலை (டான்சில்) தொற்று நோயால் இது வருகிறது. பாதங்களிலும் இது வரும்.

சிலருக்கு கை நகம் சொட்டையாகி மஞ்சள் புள்ளிகள் நகத்தில் ஏற்படும். அபூர்வமாக இந்த செதில்படை உதடு, பிறப்புறுப்பின் முன் உள்ள மெல்லிய பகுதியிலும் வரும். கண்ணைச் சுற்றிக் கூட வரும். செதில் உதிரும் நோயாளிகளிடம் இதர தோல் நோய்கள் பெரும்பாலும் வருவதில்லை.

காது உள், மேல் மடல்களில் படை போன்று தெரிந்தால் அது சோரியாசிஸ் தானா என்பதை தோல் நோய் நிபுணரிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சோரியாசிஸ் நோய்க்கு சித்த மருந்துகளால் பின் விளைவு, பக்க விளைவு இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை. சிலருக்கு இவ்வியாதி பரம்பரையாக வந்துவிடுகிறது. சிவப்பு நிறம், எலுமிச்சை நிறம் உள்ளவர்கள் நல்ல கருப்பு நிறத்தில் உள்ளவரை மணப்பதால் அடுத்த சந்ததிக்குப் பிறக்கும் குழந்தைக்கு நோய் வரும் வாய்ப்பு குறைவு.

காலை வெயிலில் சித்த மூலிகை தைலம் தடவி நிற்க வேண்டும். தைலம் தடவாமலும் உடல் முழுவதும் வெயில் படும்படி சூரியக்குளியல் செய்வதால் நோய் சீக்கிரம் குணமாகும்.

சோரியாசிஸ் என்ற செதில் உதிர்தல் சிலருக்கு தொண்டையில் நுண் கிருமியின் தொற்று ஏற்படும்போது வருகிறது. இது தோலில் ஒரு சென்டி மீட்டர் சுற்றளவில் வட்ட நாணயங்களைப் பரப்பியது போன்று இருக்கும். இவ்வாறு நுண்கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் சோரியாசிஸ் இரண்டு மாத காலத்தில் மறைந்துவிடும். இந்நோயாளிகளிடம் சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின்களும் உடலில் இருந்து குறைந்துவிடும்.

சோரியாசிஸ் நோயில் சிலருக்கு கை மூட்டு, விரல் மூட்டுகளில் வீக்கம் ஏற்படும். இவர்கள் வேப்ப எண்ணெய்யில் தயாரித்த சோப்புகளை உபயோகிக்க வேண்டும். பருத்தி ஆடையை அணிதல் அவசியம்.

உடலில் இருந்து செதில்கள் மூலம் இரும்புச் சத்து அதிகம் வெளியாகிறது.

இரும்புச் சத்து பெற அத்திப்பழம், பேரீச்சை, கிஸ்மிஸ் திராட்சை, சுண்டக்காய், கீரைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுதல் அவசியம். வியர்வைத் துவாரங்கள் நல்ல முறையில் இருக்கும் வகையில் கோடையில் இரண்டு முறை குளிப்பது அவசியம். ஒருநாள் விட்டு ஒரு நாள் பாசிப்பயறு மாவு கொண்டு குளிப்பது தோலில் உள்ள எண்ணெய்ப் பசை குறைந்து அரிப்பு வராமல் தடுக்கும்.

மன அமைதி இந்நோயை விரைவில் குறைக்கும். மனப் பதற்றம், நரம்புச் சோர்வு நோயை அதிகப்படுத்தும். மற்றபடி சோரியாசிஸ் தொற்று நோய் கிடையாது.

Disqus Comments