.

Friday, May 30, 2014

ரன்னிங் பயிற்சியை மேற்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்


ஒவ்வொருவரும் உடல் நலத்தை பேணி காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். உடற்பயிற்சி என்றதுமே அனைவரும் ஜிம்முக்கு தான் படை எடுப்பர். ஆனால் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வதை காட்டிலும், நாம் எளிதான ஒரு உடற்பயிற்சியை செய்யலாம். அது தான் ரன்னிங்/ஓடுதல். அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு மேல் ஓடினால், உடலில் உள்ள நல்ல கொழுப்புகளானது அதிகரிப்பதாகவும், கெட்ட கொழுப்பு, ட்ரைகிளிசரைடின் அளவையும் குறைத்து, இதய நோய் ஆபத்தை குறைக்கிறது.

மேலும் ஓடுதல் சிறந்த உடற்பயிற்சி மட்டுமல்ல, அது உடலின் எடை குறையவும், ஆரோக்கியமாகவும், அழகிய உடலமைப்புடன் இருக்கவும் உதவுகிறது. இப்போது ரன்னிங்/ஓடுதல் மூலம் ஒவ்வொருவரும் பெறக்கூடிய ஆரோக்கிய நலன்கள் பற்றி தொகுத்து வழங்கியுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டு, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

உடலின் அதிகப்படியான எடையை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், ஓடுதல் என்பது சிறந்த பயிற்சி ஆகும். ஏனெனில் ஓடுதல் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கும்.

ஓடுதல் பயிற்சியை பழகி, அதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலில் உள்ள எலும்புகள் மற்றும் தசைகள் வலுப்படும் மற்றும் எலும்புப்புரை, மூட்டுவலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் எதுவும் அணுகாது. அது மட்டுமல்லாமல் கால், இடுப்பு பகுதிகளில் உள்ள எலும்பின் பரப்பளவும் அதிகரிக்கும்.

ஜாக்கிங் செய்வதை பழக்கமாக வைத்து கொண்டால் அலர்ஜி, இருமல், காய்ச்சல் போன்ற தொந்தரவுகள் வராது. ரன்னிங் பழக்கத்தை வழக்கமாக கொண்டால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு நோயும் கிட்ட நெருங்காது.

ஓடுதல் உடலை ஆசுவாசபடுத்தும் பயிற்சி ஆகும். அதிலும் உடலின் சுகாதாரத்தை அதிகப்படுத்தி, மன அழுத்தத்தை குறைக்க உதவும் பயிற்சி ஆகும்.

ஓடுதல் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயம் சம்பந்தமான நோய்களின் தாக்கத்தில் இருந்து இதயத்தை காக்கிறது.

காலையில் விழிக்கும் போது, சோம்பலாக உடலில் ஆற்றல் இல்லாதது போல் உணர்ந்தால், உடனே ஓட ஆரம்பித்து விட வேண்டியது தான். ஏனெனில் ஓடுதல் உடலில் ஆற்றலை அதிகப்படுத்தி, தினசரி அலுவலில் ஈடுபட உதவும்.

ஓடுதல், செரிமானத்தை அதிகப்படுத்தி பசி ஏற்படவும் தூண்டுகிறது. ஓடுதல் பயிற்சியானது கலோரிகளை எரிப்பதால், ஓடி முடித்தவுடன் அதிக பசி ஏற்படும். ஆகவே ஓடும் முன்பு ஆரோக்கியமான சிற்றுண்டி எடுத்து கொள்ளுதல் அவசியம்.

ஓடுதல் பயிற்சி கொழுப்பை உருவாக்கும் செல்களை சிதைத்து, அழகான உடலமைப்பைப் பெற உதவுகிறது மற்றும் ஜீவத்துவ பரிணாமத்தை (Metabolism) ஒழுங்குப்படுத்தி தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவுகிறது.

ரன்னிங் உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. இதனால் மூளைக்கும் இரத்தம் சீரான அளவில் பாய்வதால், மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. ஆகவே மூளை ஆரோக்கியமாகவும் இருக்கும்

தூக்கமின்மை பிரச்சனை இருந்தால், பகலில் ஓடுவது நல்ல தூக்கத்தை கொடுக்கும். ஏனெனில் ஓடுவதன் மூலம் உடல் களைத்து, இரவில் நிம்மதியான தூக்கம் வர வழிவகுக்கும்.

தொடர்ந்து ரன்னிங் பயிற்சியை மேற்கொண்டால், டைப்-2 நீரிழிவு நோய் ஆபத்தை தடுக்கும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஓடுதல் மன இறுக்கம் மற்றும் கவலைகளை குறைத்து, நம்மை பற்றி நாமே நன்றாக உணர தூண்டும்.

ஓடுதல் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், மிளிரும் நிறத்தையும் ஏற்படுத்தி, அழகிய தோற்றத்துடன் இளமையாக இருக்க செய்யும். மேலும் முதுமை தொடர்பான சிக்கல்களை குறைத்து, வலுவான உடலமைப்புடன் இருக்க உதவுகிறது.

ஓடுதல் பயிற்சி, உடலில் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து நிலையை பராமரிக்க உதவுகிறது மற்றும் கொழுப்பு சம்மந்தமான நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
ரன்னிங், தசை நார்கள் மற்றும் தசை நாண்களை வலுபடுத்தி, மூட்டு வலிமையை அதிகப்படுத்துகிறது, அதனால் கணுக்கால் மற்றும் முழங்கால் காயங்கள் ஏற்படுவது குறைகின்றது.

வழக்கமாக ஓடுதல் பயிற்சியைக் கொண்டால், கை கண்களுக்கு இடையே இருக்கும் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதோடு, உடல் சமநிலையையும் பராமரிக்க உதவுகிறது.

பொருத்தமான உடல் கட்டுடன் இருக்க வேண்டும் என்றால் ஓடுதல் அல்லது ஜாக்கிங் செய்ய வேண்டும். ஓடுதல் உடல் கட்டை பராமரிக்க ஒரு எளிய வழியாகும்.

ஓடுதல் பயிற்சியை வழக்கமாக கொண்டிருந்தால், ஏரோபிக் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பெறலாம். மேலும் இது நல்ல மன நிலையில் வைத்திருக்கவும், உடலையும் மனதையும் ஆரோக்கியமாய் வைத்திருக்கவும் உதவும்.

ஓடுதல் பயிற்சியை பழக்கமாக கொண்டிருந்தால், நம்மை நன்றாக உணர முடியும். அதுமட்டுமல்லாமல் நோய்களில் இருந்து உடலை குணமடைய செய்து பாதுகாக்கும். இம்மாதிரி ஓடுதல் பயிற்சி உடல் நலத்தையும், மன நலத்தையும், உணர்ச்சிகளையும் மேம்படுத்த உதவுகிறது.

ஓடுதல் பயிற்சியை அன்றாடம் மேற்கொள்வதால், தசை வலிமையை அதிகரிப்பதோடு, ஸ்டாமினாவை மேம்படுகிறது.


Disqus Comments