மலம் கழிக்கும் போது கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுகிறதா? தற்போது பெரும்பாலானோர் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுதல். பொதுவாக இந்த மாதிரியான நிலை ஏற்படுவதற்கு முக்கிய காரணம், ஒன்று உணவு முறை மற்றொன்று உட்கொள்ளும் மருந்துகள் தான். இந்த மாதிரியான நிலையை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சந்திக்கின்றனர். மேலும் நிபுணர்கள், கருப்பு நிறத்தில் மலம் வெளியேறினால், உள்ளுறுப்புக்களில் ஏற்படும் இரத்தக்கசிவு தான் காரணமாக தான் இருக்கக்கூடும். எனவே இந்த நிலை வந்தால், உடனே மருத்துவரை அணுகி அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
குறிப்பாக வயிற்றுப்புண் அல்லது வயிற்று அல்சர் இருந்தாலும், கருமையான நிறத்தில் மலமானது வெளிவரும். அதுமட்டுமின்றி, வேறு சில காரணங்களாலும், கருமையான மலம் வெளியேறும். எனவே திடீரென்று மலமானது கருப்பு நிறத்தில் வந்தால், உடனே மருந்துவரை அணுக வேண்டும். இப்போது இந்த மாதிரி கருமையான நிறத்தில் மலம் வெளியேறுவதற்கான வேறு சில காரணங்களைப் பார்ப்போம்.
குடலியக்கம் சரியாக செயல்படாமல், செரிமானப் பிரச்சனை ஏற்பட்டாலும், கருப்பு நிற மலமானது வெளியேறும். அதிலும் இரவில் படுக்கும் போது செரிமான மண்டலம் மெதுவாக இயங்குவதால், எளிதில் செரிமானமடையும் உணவுகளை உட்கொண்டு தூங்க வேண்டும். இல்லாவிட்டால், தூக்கமின்மையை சந்திப்பதோடு, காலையில் கருமையான நிறத்தில் மலமானது வெளிவரும்.
சிலர் காரமான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் வயிற்று உப்புசம் ஏற்பட்டு, கருமையான மலம் வெளியேறும் நிலை ஏற்படும்.
உட்கொள்ளும் மருந்துகளில் நல்ல அளவில் லெட் மற்றும் இரும்புச்சத்து நிறைந்திருந்தாலும், கருப்பு நிற மலத்திற்கு வழிவகுக்கும்.
குடல் புற்றுநோய் இருந்தாலும், கருப்பு நிற மலம் வெளிவரும். அதிலும் குடல் புற்றுநோய் இருந்தால், மலச்சிக்கல், முறையற்ற குடலியக்கம், இரத்தத்துடன் கூடிய மலம் வெளிவரும். எனவே மேற்கூறியவற்றுடன் மலம் கருப்பு நிறத்தில் வெளியேறினால், உடனே யோசிக்காமல் மருத்துவரை அணுகிட வேண்டும்.
உடலில் இரத்த உறைவு ஏற்பட்டிருந்தாலும், கருமை நிறத்தில் மலம் வெளியேறும். அதிலும் இந்த பிரச்சனை குடலில் நீண்ட நாட்களாக முற்றிய நிலையில் இருந்தால், அது பெரும் ஆபத்தை உண்டாக்கிவிடும். எனவே நீண்ட நாட்களாக கருமையான நிறத்தில் மலம் வெளியேறினால், மருத்துவரை அணுகி விட வேண்டும்.
தற்போது பெரும்பாலானோர் வயிற்று அல்சரால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அல்சர் இருக்கும் போது, செரிமான பாதையில் புண்கள் இருப்பதால், செரிமான மண்டலத்தில் செரிமானமடைந்து செரிமான பாதை வழியாக வெளியேறும் கழிவுகளில் இரத்தம் சேர்ந்து, கருப்பு நிற மலத்தை உருவாக்கிவிடும்.
பல பயனுள்ள மருத்துவ தகவல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள் உறவுகளே