.

Monday, May 26, 2014

வெங்காயம் அவசியம் சாப்பிடனும் ஏன் தெரியுமா?


வெங்காயம் என்றாலே எல்லோருக்கும் கண்ணில் தண்ணீர் வர வழைக்கும் காய் என்று தான் தெரியும். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களைப் பற்றி அறிந்து கொள்ள முயற்சி எடுப்பதில்லை. வெங்காயத்தை சமையலில் இருந்து தவிர்ப்பது என்பது இயலாத காரியம்.
மற்ற காய்களின் தேவை குறைந்தாலும், வெங்காயத்தின் தேவை மட்டும் எப்பொழுதும் இருக்கும். வெங்காய சாம்பார், வெங்காய குழம்பு, வெங்காய தொக்கு என்று ருசி பார்க்கும் நாம், அதன் மருத்துவ குணங்களை அறிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்.

வெங்காயத்தை அதிகப்படியாக உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த சோகை, புற்றுநோய், இதய நோய் போன்றவற்றை விரட்ட முடியும். இதில் வைட்டமின், ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்ற தன்மைகள் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றது. வெங்காயமானது சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம் மற்றும் வெள்ளை வெங்காயம் என்று பல விதங்களில் கிடைகின்றது.

எல்லா கடைகளிலும் கிடைக்கும் வெங்காயத்தின் மருத்துவ குணம் எண்ணில் அடங்காதது. வெங்காயத்தை வெட்டினால் கண் எரியும். ஆனால் அதன் மூலம் சருமம் அடையும் பலனையும் நாம் அறிந்து கொள்வதில்லை. நம் முன்னோர்கள் அதன் மருத்துவ குணத்தை அறிந்து வைத்திருந்தனர். ஆனால் இக்காலத்து தலைமுறையினர் அதன் தன்மையை விளையாட்டாக எண்ணி விடுகின்றனர். இதை தவிர்த்து வெங்காயத்தின் பயனை அறிந்து கொள்வோமா?

இதயம் சம்பந்தமான பல நோய்களுக்கு காரணம் அதிகபடியான கொலஸ்ட்ரால். தற்பொழுது வயதில் குறைந்தவர்களுக்கு கூட இதய சம்பந்தமான நோய்கள் வருகின்றது என்றால் அதற்கு காரணம் கொலஸ்ட்ரால் தான். எனவே இதை கட்டுப்படுத்துவது என்பது நம் தலையாய கடமையாகும். இப்படி அதிகப்படியான கொழுப்பைக் கட்டுப்படுத்த வெங்காயம் உதவுகின்றது. வெங்காயத்தின் தன்மையினால், உடல் மற்றும் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். எனவே வெங்காயம் எடுத்து கொண்டு இதய நோயில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.

வெங்காயத்தில் வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், முக்கியமாக வைட்டமின் சி இருப்பதால் உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை வெங்காயத்தால் கொடுக்க முடியும். வெங்காயம் உட்கொள்வதால் மருத்துவர் உதவி இல்லாமல் நம்மை பாதுகாக்க முடியும். பலவித தொற்று நோய்கள் மற்றும் கிருமிகளின் தொல்லைகளில் இருந்து நம்மை பாதுகாக்க வெங்காயம் போதுமானது.

க்யூயர்சிடின் என்ற மருத்துவ தன்மை வெங்காயத்தில் உள்ளது. இதனால் மன அழுதத்தை கட்டுப்படுத்த முடியும். ஆகையால் அதிகப்படியான வேலை உள்ள நேரத்திலும் மன அழுத்தம் அதிகமுள்ள நிலையிலும் வெங்காயத்தை உட்கொள்வதால் மன அழுத்தம் நேராமல் நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.

புற்றுநோயை கண்டு அனைவரும் பயந்து நடுங்குகின்றனர். இந்நோய் வந்தால் செல்கள் வலுவை இழந்து உயிருக்கு ஆபத்து விளைவிக்கின்றது. இந்த நோயை தடுக்கும் தன்மை வெங்காயத்துக்கு உள்ளது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் புற்று நோயில் இருந்து நம்மை காத்துகொள்ள உதவுகின்றது.

வெங்காயம் உட்கொள்வதற்கு மட்டுமல்ல அழகை பாதுகாக்கவும் தான். இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முகம் பொலிவு அடையவும், சுருக்கம் ஏற்படாமல் இருக்கவும் உதவுகின்றது. தழும்புகளையும் வடுக்களையும் போக்க வெங்காயம் உதவுகின்றது. வயதானால் சருமத்திற்கு வரும் பாதிப்பு அனைத்தையும் வெங்காயத்தால் விரட்ட முடியும்.


Disqus Comments