.

Tuesday, May 13, 2014

உடலில் சர்க்கரையின் அளவு குறையும்போது ...



சர்க்கரை நோயாளிகளுக்கு சக்கரையின் அளவைச் சரியாகப் பராமரிப்பது மிகக் கடினமாக இருக்கும். தொடர்ந்து மாத்திரை ஊசிகளைப் போடுவது கொஞ்சம் நாளாக ஆக அலுப்பூட்டும்.
இதனால் அவர்கள் தங்களின் சக்கரை அளவுகளை சரியாகக் கவனிக்காமல் இருந்து விடுவார்கள். இதனால் தாழ்நிலை சக்கரை, உயர்நிலைச் சக்கரை போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப் படுகின்றனர்.

இவற்றில் எது ஆபத்தானது? தாழ்நிலைச் சக்கரையினால் என்ன அறிகுறிகள் தோன்றும்? இவற்றை அறிந்து கொள்வது சக்கரை நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

தாழ்நிலைச்சக்கரை அறிகுறிகள்:

1.உடல் நடுக்கம்

2.படபடப்பு

3.வியர்வைப் பெருக்கு

4.பசி எடுத்தல்

5.உடல் சோர்வு

6.உடல் அசதி

7.தலைவலி

8.குழப்பமான மனநிலை

9.குழறிய பேச்சு

10.இரட்டைப் பார்வை

11.உடல் ஜில்லிட்டுப்போதல்

12.முகம் வெளுத்துப் போவது

13.மயக்கம், கோமா- சுய நினைவிழத்தல்

நாம் நமது சக்கரை அளவு கூடிவிடாமலும், குறைந்து விடாமலும் கவனித்துக்கொள்வது அவசியம். நல்ல சக்கரை கட்டுப்பாட்டில் உள்ளவர்களுக்கு தாழ்நிலை சக்கரை சில நேரங்களில் ஏற்படத்தான் செய்யும்.

ஆனால் உடல் இதற்கு ஏற்ப உடலில் சக்கரையை அதிகப்படுத்த முயற்சிக்கும். அப்படி முடியாத போது மேல் சொன்ன அறிகுறிகள் தோன்றும்.

சக்கரைக்குறைவினால் உடனடியாக பெரிய பாதிப்புகள் ஏற்படாது. உடனே சாக்லேட், சீனி போன்றவற்றைப் போட்டுக்கொண்டோ அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை செய்தோ உடலை சரிசெய்து கொள்ளலாம்.

அதே நேரம் சக்கரை அதிகமிருந்தால் மெதுவாக உடலில் மாற்றங்களை ஏற்படுத்தி உடலிலுள்ள உறுப்புக்களை எல்லாம் செயலிழக்க வைக்கும்.

தாழ்நிலை சக்கரையைத் தடுக்க சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

சுய ரத்தப் பரிசோதனை கருவிகளின் மூலம் வீட்டிலேயே சக்கரை அளவை சோதித்துக்கொள்ள வேண்டும்!!
Disqus Comments