.

Tuesday, May 13, 2014

இரத்த கொதிப்பு உள்ளவர்களுக்கு சில ஆலோசனைகள்



1. இரத்தக் கொதிப்பு ஒரு தனிப்பட்ட வியாதி அல்ல. அது சுகவீனத்தின் அடிப்படையான ஒரு குறியே.


2. சுவாசம் சீராக வேண்டும். தீர்க்கமாக மூச்சு இழுத்து விட்டுப் பழக வேண்டும். இரத்தக் கொதிப்பு இரத்தக் குழாய்களையும் இருதயத்தையுமே பொறுத்தது. ஆகவே அது உடலில் ஓடும் இரத்தத்தைப் பொறுத்திருக்கிறது.

3. தினசரி கவனமாகப் பயிற்சி செய்யுங்கள். இது உடலை நன்றாக வைக்கும். இரத்த ஒட்டம் சரியாக நடைபெறுவதற்கு இது பெரிதும் துணை செய்யும்.

4. அடிக்கடி ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். உடல் அதிர்ச்சியும் மனக் கிளர்ச்சியும் இரத்தக் கொதிப்பை அதிகம் ஆக்கும். மன வேலைகளில் ஈடுபடும் பொழுது இரண்டு மணிக்கு ஒரு தடவை ஐந்து நிமிஷமாவது ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். வேலை செய்யும் அறையிலாவது சற்று நடமாடினால் போதும். உடலுழைப்பின் பொழுது, உணவு வேளைக்குப் பிறகு ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.

5. மலம் தினசரி கழிய வேண்டும். மலச்சிக்கல் அதிகம் ஆகிவிட்டால், இரத்த ஓட்டம் மெதுவாகி, கொதிப்பு ஏற்படக் காரணமாகிறது. இரண்டு தடவையாவது தினசரி மலம் கழிய வேண்டும். ஆறு தடவை ஜலபாதை செய்ய வேண்டும். நன்றாக வேர்வையும் வர வேண்டும்.

6. உடலில் ஆல்கலைன் சத்து அதிகம் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும். இது இழையங்களைத் தூய்மைப் படுத்துவதோடு, இளஞ் செல்லுகளை வளர்த்துப் புத்துயிர் கொடுக்கிறது. பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் இவை எல்லாம் நல்ல காரச் சத்துள்ள உணவுகள்.

7. இறைச்சி சாப்பிடக் கூடாது. இரத்தக் கொதிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம், கொலஸ்ட்ரால் என்ற வழவழப்பான ஒரு பொருள் இரத்த நாடிகளைத் தடிக்கச் செய்வதே. இந்தக் கொலஸ்ட்ரால் இறைச்சியில் அதிகம் உண்டு. ஆகவே, இறைச்சிக்குப் பதிலாக பால், பாலாடை, அவரை, பட்டாணி, பீன்ஸ், கொட்டைகள், முழுத் தானியங்கள் உபயோகிக்க வேண்டும்.

8. இரத்தக் கொதிப்பை வெள்ளைப் பூண்டினால் குறையுங்கள். இதனால் இரத்தக் கொதிப்பு விரைவில் தணிகிறது. பதார்த்தங்களுக்கு ருசி கொடுக்கவும், சூப் வகைகளுக்கும் வெள்ளைப்பூண்டு உபயோகமாகிறது. அரைப் பூண்டைச் சிறிது சிறிதாக நறுக்கி, ஒரு கோப்பைப் பாலில் காய்ச்சி, இரவில் சாப்பிட்டால் நல்ல டானிக் போல் அமையும்.

9. மனக்கிளர்ச்சி கூடாது. கோபம், பொறாமை, பகை, கவலை இவை எல்லாம் மூளைக் கோளங்களைப் பாதிப்பதோடல்லாமல், இரத்தக் கொதிப்பையும் அதிகமாக்குகிறது. எப்பொழுதும் மன அமைதி பெற்று, சந்தோஷமாயிருங்கள்.

10. சாத்வீகமாக வாழுங்கள். அதிக இரத்தக் கொதிப்பு என்றால் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் மிதமாக இருக்க வேண்டும்.
Disqus Comments