.

Monday, April 21, 2014

புற்றுநோயை தடுக்கும் காலிஃப்ளவர்



ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடண்ட் பொருட்களும் அடங்கிய காலிஃப்ளவர், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக்கூடிய காயாகவே இருக்கிறது. இதன் ஆரோக்கியத் தன்மைகள் உடலில் பலவித நல்ல மாறுதல்களை ஏற்படுத்தக் கூடியவை.




காலிஃப்ளவரில் கொழுப்புத் தன்மை கிடையாது. காலிஃப்ளவரில் இரண்டு சக்தி வாய்ந்த வைட்டமின் சி-யும், மெக்னீசியமும் உள்ளது. இவை இரண்டும் உடலின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதாகும். மேலும் ஊட்டச்சத்து அதிகம் கொண்ட காலிஃப்ளவரை, உணவில் சேர்த்துக் கொள்வதால், உடலை தாக்கும் புற்றுநோய்,

இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். நோயெதிர்ப்பு அழற்சி காலிஃப்ளவரில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், வைட்டமின் கே சத்தும் நிறைந்துள்ளதால், இது உடலில் ஏற்படும் அழற்சியை நீக்குகின்றது.

தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் கீல்வாதம், உடல் பருமன், நீரிழிவு நோய், அல்சரேட்டிவ் கொலிட்ஸ்(ulcerative colitis) மற்றும் குடல் பிரச்சனைகள் போன்ற அழற்சித் தரும் நோய்களை தடுக்க முடியும். நச்சுத் தன்மை நீக்கும்.

காலிஃப்ளவரில் சுகாதார நலன்களை அளிக்கும் குளுக்கோசினோலேட் என அழைக்கப்படும் பைட்டோ சத்துக்கள் பெரும் அளவில் உள்ளதால், உடலின் நச்சுத் தன்மையை நீக்கி, புற்றுநோய் போன்ற நோய்கள் நெருங்காமல் பார்த்துக் கொள்கின்றது. இதய நோய்களுக்கு எதிரானவை ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அழற்சி நீக்கும் காரணிகள் உள்ளதால், காலிஃப்ளவர் இதய நோய்களை தடுக்க உதவுகின்றது.

செரிமானத்தை அதிகரிக்க நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், செரிமானத்திற்கு உதவுகின்றது. ஒரு கப் காலிஃப்ளவருக்கு, சுமார் 3.35 அளவில் நார்சத்து உள்ளது. நார்சத்து உடலுக்கு மிகவும் தேவை. ஏனெனில் இவையே செரிமானத்தை சரி செய்கின்றது.

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க காலிஃப்ளவரில் உள்ள பொட்டாசியம் சத்து, உடல் செயல்பாடுகளை சீராக்குவதுடன், நீர் அருந்துதலை அதிகப்படுத்தி, உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல், உடலை காக்க உதவுகின்றது.

எடையைக் குறைக்க குறைவான கலோரிகள் கொண்ட காலிஃப்ளவர், உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தேவையான ஒன்று. ஒரு கப் காலிஃப்ளவரில் 28-52 அளவு கலோரிகளே உள்ளது என்பதால், இதை உட்கொள்வதால் உடலில் அதிக அளவில் கொழுப்பு சேர்வதில்லை.

காலிஃப்ளவரில் இருக்கும் போலேட்(folate) மற்றும் வைட்டமின் பி சத்துக்கள் வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் நரம்பு குழாய் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கி, குழந்தை ஆரோக்கியமாக பிறக்க உதவுகின்றது.

புற்றுநோயைத் தடுக்கும் காலிஃப்ளவர் புற்றுநோயை எதிர்க்கும் சல்போராபேன் மற்றும் இண்டோல்-3-காஃபினோல் போன்ற கலவைகள் இருப்பதால், இது புற்றுநோயை எதிர்க்கும் சக்தி கொண்டுள்ளது. அதிலும் கர்ப்பப்பை வாய்,பெருங்குடல், மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய்களை எதிர்த்து, ஆரோக்கியமாக வாழ வழி செய்கின்றது.

Disqus Comments