.

Friday, March 21, 2014

அடிவயிற்றுக் கொழுப்பை அலட்சியப்படுத்தினால்...



பெற்றோரின் அக்கறையான கவனிப்பு, படிப்புக்கேற்ற வேலை என்று எளிதில் வாழ்க்கையில் முன்னேறி விடுவதால் விருப்பம்போல சாப்பிடுகிறார்கள்.


அழகாக உடை அணிந்து செல்லும் இளைய தலைமுறையினருக்கு குட்டித் தொப்பை(ஆரம்பமாவதை)யை காணமுடிகிறது.


இது உடலில் கொழுப்பு அதிகமாகிவிட்டதற்கான அடையாளம்.


இப்படி அடிவயிற்றில் கொழுப்பு படிந்த பிறகும்கூட 10-ல் 9 பேர் அதைப்பற்றிய அக்கறை இல்லாமல் அலட்சியமாக இருக்கிறார் களாம். இதனால் பல விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறது சமீபத்திய ஆய்வு.


வடக்கு அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியது.

12 ஆயிரம் ஐரோப்பிய இளைஞர்களிடம் செய்யப்பட்ட சோதனையில் கிடைத்த முடிவுகள் வருமாறு:


1. இளைஞர்கள் 10க்கு 9 பேர் வரை அடிவயிற்றில் சேரும் கொழுப்பைப் பற்றி சட்டை செய்வதில்லை.


2. இதற்கு முக்கிய காரணம் அதன் விளைவுகளைப் பார்க்கவோ, உணரவோ முடியாததுதான்.


3. ஆனால் இந்த அடிவயிற்றுக் கொழுப்பு நாளடைவில் வேறு சில பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.


4. உட்புறமாக நாளங்களைச் சுற்றிப் படியும் கொழுப்பானது உடல் உஷ்ணத்துக்கு வழிவகுக்கும்.


5. நாளடைவில் ரத்த நாளங்களைப் பாதிக்கும். அதன் வழியாக கல்லீரலையும் தாக்கும் அபாயம் உள்ளது.

6. இதனால் உற்சாகக் குறைவு, உடற்பாதிப்புகள், சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படுகிறது.


7. இந்த பாதிப்புகளையும் கவனிக்காமலே விட்டுவிட்டால் டைப்-2 நீரிழிவு மற்றும் இதயவியாதி ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.


8. இளைஞர்கள் சீரான இடையளவு பராமரிப்பு:

பெண்கள் 31.5 அங்குலம் (80 சென்டிமீட்டர்),

ஆண்கள் 35 அங்குலம் (90 சென்டிமீட்டர்)



9. இந்த சராசரி அளவை கடந்தவர்கள் மருத்துவ ஆலோசனையுடன் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும்.



10. நார்ச்சத்து உள்ள உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வதும்,


எண்ணெயில் பொறித்த உணவுகளையும் இறைச்சி முட்டை போன்ற உணவுகளையும் குறைய்த்துக் கொண்டு,


உடற்ப்பயிற்ச்சி செய்வதும் உடற்கொழுப்பைக் குறைக்க உதவும் .


வயிற்றைக் கவனிக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.


நன்றி: மாலை மலர்.

Disqus Comments