நம் உடலில் தொப்புள் மிகவும் சென்சிடிவ்வான பகுதி. இந்த தொப்புள் உடலிலேயே ஆற்றல் வாய்ந்த பகுதி என்று கூட சொல்லலாம். ஏனெனில் தொப்புளைக் கொண்டே உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். அதுவும் தொப்புளில் குறிப்பிட்ட எண்ணெய்களை வைப்பதால், நாம் சந்திக்கும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
இங்கு தொப்புளில் எந்த எண்ணெயை வைத்தால் என்ன நன்மை கிடைக்கும் என்று காண்போம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தொப்புள் வழி தீர்வு காணுங்கள்...
வேப்பிலை எண்ணெய்
வேப்பிலை எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள் வருவதைத் தடுக்கலாம்.
எலுமிச்சை எண்ணெய்
எலுமிச்சை எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் கருமையான புள்ளிகள் அகலும்.
நெய்
நெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.
பாதாம் எண்ணெய்
பாதாம் எண்ணெயை தொப்புளில் தடவுவதால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
கடுகு எண்ணெய்
கடுகு எண்ணெயை தொப்புளில் தடவுவதன் மூலம், வறட்சியால் உதடுகளில் வெடிப்புகள் வருவது தடுக்கப்படும்.
பிராந்தி
ஒரு பஞ்சுருண்டையை பிராந்தியில் நனைத்து, தொப்புளில் வைத்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி அல்லது பிடிப்புக்களில் இருந்து எளிதில் விடுபடலாம்.
ஆல்கஹால்
ஏதேனும் ஒரு ஆல்கஹாலில் பஞ்சுருண்டையை நனைத்து தொப்புளில் வைப்பதால், சளி, காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியும்.
குறிப்பு
எண்ணெயை தொப்புளில் வைக்கும் போது, தொப்புளைச் சுற்றி வலஞ்சுழி, இடஞ்சுழியாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால் இச்செயலை உணவு உட்கொண்ட உடனேயே செய்யக்கூடாது. குறைந்தது 1 மணிநேர இடைவெளி விட வேண்டியது அவசியம்.