நமது மூதாதையர் மத்தியில் இரத்த அழுத்தம், நீரிழிவு, உடல்பருமன் போன்ற பிரச்சனைகள் இருந்ததாக அதற்கு அவர்கள் வைத்தியம் பார்த்ததாக எந்த கதைகளிலும், குறிப்புகளிலும் நாம் கேள்விப்பட்டதில்லை.
நமது உடல் வேலையை குறைக்க துவங்கிய நாளில் இருந்து தான் இந்த பிரச்சனைகள் புதியதாக பிறக்க ஆரம்பித்தன. மேலும், நமது முன்னோர்கள் மருந்து மாத்திரைகள் என்ற பெயரில் அட்டைப்பெட்டியில் அடைத்து எதையும் வாங்கி உண்டது கிடையாது. உணவிலேயே மருந்தை வைத்து , சமைத்து உண்டு தீர்வுக் கண்டு வந்தனர்.
ஆனால், இன்று அப்படியா இருக்கிறது. தொட்டதற்கு எல்லாம் மருத்துவமனைக்கு ஓடுகிறோம். அதிலும், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்றவை தான் இன்றைய மக்களுக்கு எமனாக மாறுகிறது.
இனி, இந்த கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் தக்காளி ஜூஸ்தயாரிப்பது எப்படி, அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் இந்த ஜூஸை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள்...
தக்காளி - 200 கிராம்
எலுமிச்சை சாறு
உப்பு - தேவையான அளவு
வைட்டமின் சத்துக்கள்:
கொலஸ்ட்ரால் மற்றும் உடல் எடையை குறைக்க உதவும் இந்த ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்,
வைட்டமின் A, B, C, E, J மற்றும் K.
செய்முறை:
இனி, இந்த ஜூஸை எப்படி தயாரிப்பது என்பது பற்றிய செய்முறை:
1) தக்காளி மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள்.
2) டம்ளர் / ஜார்-ன் மேல் பகுதியில் எலுமிச்சை கொண்டு தடவவும்.
3) பிறகு உப்பை ஜார் / டம்ளரில் மேலோட்டமாக தூவி தலைகீழாக மாற்றி, மாற்றி திருப்புங்கள்.
4) டம்ளர் / ஜார் முழுதும் உப்பு படரும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
5) பிறகு அரைத்து கலந்து வைத்துள்ள தக்காளி, எலுமிச்சை சாற்றை டம்ளரில் கலந்து குடியுங்கள்.
நன்மைகள்!
உப்புக் கலந்த இந்த தக்காளி, எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்....
1) சரும செல்களுக்கு புத்துயிர் அளித்து வயதாகும் செயற்திறனை தடுக்கும். இதனால், சருமம் மென்மையாக இருக்கும்.
2) உடலில் அதிகப்படியாக சேரும் கொலஸ்ட்ராலை கரைக்க பயனளித்து, உடல் எடை கூடாமல் பாதுகாக்க உதவும்.
3) கொலஸ்ட்ரால் கட்டுப்படுத்துவதால் இதய நலனும் மேலோங்கும்.
4) தொண்டை, கண் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு வலுசேர்க்கிறது.
5) செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும். 6) இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள பயனளிகிறது.
குறிப்பு: சிறுநீரக கற்கள் பாதிப்பு உள்ளவர்கள் இந்த ஜூஸை குடிக்க வேண்டாம்.