.

Friday, July 29, 2016

வெங்காயத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவதால் பெறும் நன்மைகள் என்ன?



வெங்காயம் மற்றும் தேன் கொண்டு தயாரிக்கப்படும் இந்த இயற்கை சிரப் உங்கள் உடலின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் நன்மைகள்
கொண்டுள்ளது. இரத்தத்தை சுத்தம் செய்து, இரத்த ஒட்டத்தை சீராக்குவதில் இருந்து, பாக்டீரியாக்களை அழித்து செரிமானத்தை சிறக்க வைப்பது வரை பல நன்மைகள் தரவல்லது இந்த இயற்கை சிரப்.

இனி, வெங்காயம், தேன் கொண்டு தயாரிக்கப்படும் சிரப்பை எப்படி தயாரிப்பது? இதனை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என பார்க்கலாம்...

தேவையான பொருட்கள்! 

வெங்காயம் - 1 தேன்

வைட்டமின் சத்துக்கள்!

வெங்காயம் மற்றும் தேன் கலந்து தயாரிக்கப்படும் இந்த சிரப்பை குடிப்பதால் கிடைக்கும் வைட்டமின் சத்துக்கள்...,

வைட்டமின் A, B, B2, B3, B5, C, E மற்றும் J.

செய்முறை! 

மெல்லிசாக வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

ஒவ்வொரு ஸ்லைஸ் வெங்காயத்திலும் தேனை ஒரு டீஸ்பூன் அளவு தெளிக்கவும்.

ஒரு ஸ்லைஸ் வெங்காயத்தின் மீது மற்றொன்று என அடுக்கவும்.

24 மணிநேரம் இதை ஊறவிடுங்கள்.

மறுநாள் நீங்கள் ஊறவைத்த இந்த பாத்திரத்தில் சிரப் போன்ற நீர் தங்கியிருக்கும். இதை குடித்து வரவும்.

நன்மைகள்!

 தூக்கமின்மை பிரச்சனை உள்ளவர்கள் இதை தினமும் குடித்து வந்தால் நல்ல தீர்வுக் காண முடியும்.

சளி, காய்ச்சல் உள்ளவர்கள் இதை குடித்து வந்தால் சீக்கிரம் குணமடையலாம்.

இதில் இருக்கும் ஆண்டி-கொலஸ்ட்ரால், கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல் இருக்க உதவும்.

இது இரத்தத்தை சுத்திகரித்து, இரத்த ஓட்டத்தை சீராக்க பயனளிக்கும்.

செரிமானத்தை ஊக்கவிக்கும் தன்மை கொண்டது

இந்த சிரப். நீரிழிவுக்கு சிறந்த மருந்து இது. இதிலிருக்கும் ஆண்டி-ஆக்ஸிடெண்ட் உடல் நலத்திற்கு உதவும்

குறிப்பு! 

இருமல் உள்ளவர்கள், இருமலை தடுக்க / குறைக்க ஒரு டீஸ்பூன் இதைக் குடித்து வரலாம்.

Disqus Comments