.

Friday, July 8, 2016

இரத்த குழாய்களில் தேங்கும் கொழுப்புக்களை கரைப்பது எப்படி?



ஜங்க் உணவுகள் மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகம் உட்கொள்தால், இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுவது அனைவருக்குமே தெரியும். இதற்கு அந்த உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் படிந்து, இதய குழாய்களில் அடைப்பை உண்டாக்கி, இதயத்தின் சீரான செயல்பாட்டை இடையூறு ஏற்படுத்துவது தான் காரணம்.


எவ்வளவு தான் நாம் ஜங்க் உணவுகள் உட்கொள்ளும் பழக்கத்தைக் குறைத்து கொண்டாலும், உடலில் கொழுப்புக்கள் சேரத் தான் செய்கிறது. இதற்காக எவ்வளவு தான் மருந்து மாத்திரைகளை எடுத்தாலும், அது தற்காலிக பலனைத் தருமே தவிர, நிரந்தர தீர்வை வழங்காது. ஆனால் இத்தகைய கொழுப்புக்களை ஒருசில உணவுப் பொருட்கள் கரைக்கும்.

கீழே இரத்த குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை கரைக்க உதவும் ஓர் பானம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் ஒவ்வொன்றும் மிகுதியான மருத்துவ குணங்களைக் கொண்டது.

இஞ்சி

இஞ்சியின் மருத்துவ குணங்களைப் பற்றி சொல்லித் தான் தெரிய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பினும் இஞ்சி இரத்த குழாய்களில் உள்ள கொழுப்புக்களை நீக்கி, இதய நோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

பூண்டு

 காலங்காலமாக இதய நோய்களைத் தடுக்க பூண்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பூண்டு கொழுப்புக்களில் படிகங்களால் தமனிகள் தடிப்பதைத் தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். மேலும் இது உயர் கொலஸ்ட்ரால், உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றை சரிசெய்யவும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும் செய்கிறது

எலுமிச்சை 

தினமும் எலுமிச்சை ஜூஸைப் பருகி, சிறிது நேரம் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால், இரத்த அழுத்தம் குறைந்து, இரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரிப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் எலுமிச்சை உடலின் மூலை முடுக்குகளில் தேங்கியுள்ள கொழுப்புக்களை நீக்கி, பல உறுப்புக்களை சுத்தம் செய்யும்.

கொலஸ்ட்ராலைக் கரைக்கும் பானம்

தேவையான பொருட்கள்: 

தண்ணீர் - 4 லிட்டர்

எலுமிச்சை - 8

பூண்டு - 8 பற்கள்

இஞ்சி - 2 இன்ச்

செய்யும் முறை: 

* முதலில் எலுமிச்சையின் தோலை சுத்தம் செய்து கொண்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

* பின் இஞ்சி மற்றும் பூண்டின் தோலை நீக்கிக் கொள்ளவும்.

* பின்பு பூண்டை தட்டி தனியாக 15 நிமிடம் வைத்துக் கொள்ளவும். இதனால் அல்லிசின் செயல்படுத்தப்படும்

* பிறகு மிக்ஸியில் இஞ்சி, எலுமிச்சை, தட்டிய பூண்டுகளை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நீரை ஊற்றி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டையும் சேர்த்து, மிதமான தீயில் சூடேற்ற வேண்டும்.

 * கலவையானது கொதிக்க ஆரம்பிக்கும் போது, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைத்து, வடிகட்டி ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.

உட்கொள்ளும் முறை 

கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் மட்டுமின்றி, அனைவரும் இந்த பானத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் சிறிது பருக வேண்டும்.


Disqus Comments